• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 22:54:35    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி

cri

சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள துச்சிங்யான் நகரின் Xiang e மாவட்டத்தின் Qi Pan கிராமத்தில் Dong Zhenji என்ற முதியவர் வாழ்கின்றார். நாள்தோறும் பிற்பகலில், அவர் தான் வளர்க்கும் பறவைகள் உள்ள கூண்டை எடுத்துக்கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட கிராமத்தில் உலவுவதை அவர் விரும்புகின்றார். பல அழகான மாடி வீடுகளின் உருவாக்கத்தை கண்டு, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். கடந்த ஆண்டின் மே 12ம் நாளில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தால், இந்த முதியவரின் வீடு இடிபாடாக மாறியது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சேர்த்து உருவாக்கிய அனைத்து உடமைகளும் நிலநடுக்கத்தால் நாசமாயின. இக்கிராமப்புறத்தில் ஏனைய வீடுகளும் நாசமாயின. நிலநடுக்கம் நிகழ்ந்த சிறிது காலத்திற்குப் பின், உள்ளூர் அரசின் ஏற்பாட்டில், முதியவர் Dong உள்ளிட்ட 9 குடும்பத்தினர்களும் தற்காலிக உறைவிடங்களில் வசித்தனர். நிலநடுக்கத்துக்கு பிந்தைய 6 திங்களுக்கு பின், முதியவர் Dongஉம் அவரின் குடும்பத்தினரும், புதிய மாடி வீட்டில் மகிழ்ச்சியுடன் குடி புகுந்தனர். முதியவர் Dong எமது செய்தியாளரிடம் மகிழ்ச்சியுடன் பேசுகையில், அரசின் ஏற்பாட்டின் படி, நபருக்கு தலா 35 சதுர மீட்டர் அளவு உறைவிடப் பரப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வரையறைக்கு இணங்க, அவரும் அவரது குடும்பத்தினரும், 4 படுக்கையறைகள் மற்றும் ஒரு வரவேற்புறை கொண்ட 2 வீடுகளை பெற்றனர். முதியவர் Dong மேலும் கூறியதாவது:

நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். முன்பு, நான் இத்தகைய சிறந்த மாடிவீட்டில் வசிப்பது பற்றி நினைத்து பார்க்கவில்லை. தற்போதைய புதிய வீடு, நீர், மின்சாரம், மற்றும் எரி வாயு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இது, முன்பு நான் வசித்த வீட்டை விடச் சிறந்தது என்றார் அவர்.

1 2 3 4