• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 22:54:35    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி

cri

கடுமையான நிலநடுக்கம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அவர்கள் உள அளவில் பாதிக்கப்பட்டனர். வயது வந்தோருடன் ஒப்பிடும் போது, குழந்தைகளின் மனம் மேலும் பலவீனமானது. நிலநடுக்கத்தால் மனதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை வெகுவிரைவில் தீர்த்து, உள நல உதவி வழங்கும் வகையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் செப்பனிடப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் உள நல ஆற்றுப்படுத்தல் அறைகள் உருவாக்கப்பட்டன. மாணவர்கள் இதில் மனவியல் ஆற்றுப்படுத்துனர்களிடம் தங்களது தனது விருப்பங்களையும் எண்ணங்களையும் தெரிவிக்கலாம். மேலும், இசை, நாடகம் உள்ளிட்ட மாணவர்கள் விரும்பும் பாடங்களை பல பள்ளிகள் துவக்கின. மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம், நிலநடுக்கத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை படிப்படியாக நீக்க வேண்டும் என்று பள்ளிகள் விரும்புகின்றன. தவிர, பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் உள நல சிகிச்சை பயணம் மேற்கொள்ளும் திட்டம் குறிப்பிடத்தக்கது. பெய்ச் சுவான் மாவட்டத்தில் அமைந்துள்ள Lei Gu இடை நிலைப் பள்ளியின் மாணவர்களில் ஒருவரான Deng Li என்ற சிறுமி, இவ்வாண்டின் துவக்கத்தில், சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இதர 100 இடை நிலைப் பள்ளி மாணவியருடன் இணைந்து, பிலிப்பைன்ஸுக்கு, உள நல சிகிச்சை பயணம் மேற்கொண்டார். இது, அவரின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அவர் கூறியதாவது:

பிலிப்பைன்ஸ் மக்களின் புன்சிரிப்பு குறிப்பிடத்தக்கது. அங்கே பயணத்தின் போது, உள்ளூர் மக்களின் முகத்தில் எப்போதும் நான் புன்னகையை பார்க்க முடிந்தது. அவர்களின் புன்சிரிப்பை பார்த்த போது, நானும் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது, அங்கே வாழ்கின்ற நண்பர்களை மிகவும் நினைக்கின்றேன் என்றார் அவர்.

1 2 3 4