தவிர, புதிய வீட்டில் வசிப்பதற்கு வாடகையேதும் இல்லை. இது குறித்து, முதியவர் Dong மேலும் மகிழ்ச்சி அடைந்தார். நாட்டின் மானியம், பல்வேறு சமூக வட்டாரங்களின் பொருளாதார உதவி முதலியவற்றின் மூலம், மறுசீரமைப்புக்கான நிதியை திரட்டும் பிரச்சினையை உள்ளூர் அரசு தீர்த்து, கிராமவாசிகளுக்கு இலவசமாக வழங்கியது.
நிலநடுக்கத்துக்கு பின் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான புதிய வீடுகளை வழங்கியது. இது மட்டுமல்ல, அவர்களுக்கு பல வேலை வாய்ப்புகளையும் அளித்தது. அவர்கள், தங்களது வீடுகளுக்கு அருகில் புதிய வேலை வாய்ப்புகளை பெற முடிந்தது.கட்டுமானத் தொழிலாளரான Fang Xu அவர்களில் ஒருவிராவார். நிலநடுக்கத்துக்கு பின், வாழ்க்கை நடத்தும் ஆதாரங்களை இழந்த அவர், உள்ளூர் அரசின் உதவியில், நல்ல ஒரு வேலையை பெற்றார். அத்துடன், அவரின் ஊதியமும் அதிகரித்தது.
தற்போது, என் ஊதியம் திங்களுக்கு 2000 யுவானாகும். முன்பு, என் ஊதியம் 1000க்கு கொஞ்சம் அதிகம் மட்டுமே. அரசு எங்களுக்கு பெரும் உதவிகளை வழங்கியது என்றார் அவர்.
ஊதியத்தின் அதிகரிப்பை தவிர, வெளியூர் தொழில் நிறுவனங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வந்து பணியாளர்களை அமர்த்த அரசு ஏற்பாடு செய்கின்றது. வேலை வாய்ப்பை பெறுவதற்கான நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டன. பணி புரிய விரும்பும் எவருக்கும் வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று Fan Xu எமது செய்தியாளரிடம் கூறினார்.
1 2 3 4
|