• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    Apr 7th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 22:54:35    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி

cri

Deng Li உள்ளிட்ட Lei Gu இடை நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்கள், அழைப்பை ஏற்று, பிலிப்பைன்ஸுக்கு சென்று உள நல சிகிச்சைப் பயணம் மேற்கொண்டனர். ஆசிரியரான Gui Zheng yun எமது செய்தியாளிடம் பேசுகையில், இப்பயணத்துக்கு பின், இந்த மாணவர்களின் மனதில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்பட்டது என்று கூறினார்.

நிலநடுக்கத்துக்கு பின், இப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் உள நலத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது, மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் சீராக இருப்பது குறித்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் என்று ஆசிரியர் Gui Zhengyun தெரிவித்தார்.

நம்பிக்கையும் ஆர்வமும் உறுதியான பண்பும் கொண்டவர்கள் என்பதில் சிச்சுவான் மக்கள் சீனாவில் மிகவும் புகழ்பெற்றவர்கள். மே 12ம் நாள் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கம், அவர்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, குடும்பத்தினரில் சிலரை பறிகொடுத்த போதிலும், அருமையான வாழ்க்கைக்கான அவர்களின் எதிர்ப்பார்ப்பு அதனால் பாதிக்கப்படவில்லை. தீமைக்கு பின், அருமையான வாழ்க்கை தரும். சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள், உறுதியான நம்பிக்கையுடன், புதிய தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகின்றனர்.

நேயர்கள், இதுவரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய மறுமலர்ச்சியடைந்த சிச்சுவான் சிறப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040