• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-25 17:10:11    
பெய்யெனப் பெய்யும் மழை

cri

வேறு தெய்வங்களை தொழாதவளாய் தனது கணவனை தெய்வமாக வணங்கி வருகின்ற பெண் "பெய்" என்றால் மழை பெய்யும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அப்படிப்பட்ட பெண் சொன்னவுடன் உண்மையிலேயே மழை பெய்யுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுட்பங்கள் மூலம் மழையை பெய்ய செய்வோம் என்பது தான் இன்றைய நிலை. வறட்சியை தடுக்க அரசு நிதியுதவி, இலவச உணவு தானியங்கள், தனியார் பண உதவிகள் என பல்வேறு சிறப்பு உதவிகள் செய்தாலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட எல்லா மக்களையும் முழுமையாக காப்பாற்றிவிட முடியும் என்பதற்கில்லை. ஆனால் வறட்சி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மழையை பெய்ய செய்துவிட்டால் எல்லா மக்களுக்கும் உதவி செய்தது போலாகிவிடுமல்லவா!

அண்மையில், சீனாவின் Henan, Anhui, Shandong, Shanxi, Gansu மற்றும் Shaanxi போன்ற கோதுமை விளைச்சலில் முக்கியமாக ஈடுபட்டுள்ள ஆறு மாநிலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பிப்ரவரி திங்களில் இந்த ஆறு மாநிலங்களிலும் 142.7 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியது. எனவே உடனடியாக வறட்சி நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் Sun Zhengcai வேண்டுகோள் விடுத்தார். சாதாரணமாக மழை அதிகமாக பெய்கின்ற அக்டோபர் திங்களில் மிக குறைந்த அளவு மழை பெய்ததே வறட்சி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. பல நாட்களுக்கு மழை பெய்கின்ற அறிகுறிகளும் வானிலையில் காணப்படாததால் வறட்சியை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை வேளாண் அமைச்சகம் கையாள தொடங்கியது. இந்த வறட்சியை தடுக்கும் பணியில் கையாளப்பட்ட பல்வேறு வழிமுறைகளில் ஒன்று தான் செயற்கை மழை பெய்ய செய்வது. செயற்கை மழை பெய்ய செய்யும் சில தகவல்கள் உங்களுக்காக.

1 2 3 4 5