
செயற்கை மழை என்பது உடனடியாக மழை பெய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் செயல்படுத்துகின்ற ஒன்றல்ல. இதை ஒரு தொடர் முயற்சியாக தான் மேற்கொள்ள வேண்டும். மழை பெய்யக்கூடிய உத்திகளை வடிவமைப்பது. செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்ற பல வழிமுறைகள் இதில் அடங்கியிருக்கினறன. இந்த வழிமுறைகளில் கணினியை பயன்படுத்தி மேகங்கள் ஒன்றாக கூடுவதை ஆய்வுசெய்யும் முயற்சிகளும் அடக்கம். செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்கி மழை பெய்ய செய்வதல்ல. வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும். இதை தான் cloud seeding அதாவது மேக விதைப்பு முறை என்று அழைக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு தான் செயற்கை மழையை உருவாக்கி வருகிறார்கள்.
1 2 3 4 5
|