• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-25 17:10:11    
பெய்யெனப் பெய்யும் மழை

cri

ஒருசில நேரங்களில் செயற்கை மழை பெய்யச் செய்ய இந்த மூன்று படிநிலைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது அவசியமல்ல. சிலநேரங்களில் மழை வருவது போன்று மேகங்கள் கறுத்து இருண்டிருக்கும். ஆனால் மழை பெய்யாது. இதை மேகங்கள் அதிகளவு குளிரடைந்த நிலை என்று கூறுவர். இவ்வாறு தோன்றினால், மேகங்களிலுள்ள ஈரப்பதம் நீராக மாற இயலாமல் இருப்பதை குறிக்கும். இந்த வேளையில் சிறிய விமானம் மூலம் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி தூவப்பட்டால் குளிரடைந்த நிலை கலைக்கப்பட்டு மழை பெய்ய தொடங்கிவிடும். இந்நேரங்களில் மூன்றாவது படிநிலை மட்டுமே பயன்படுகிறது. சிலவேளைகளில் வெள்ளி அயோடைடு குச்சிகளை ஏவுகணை குண்டுகள் மூலம் இந்த மேகங்களின் நடுவில் வீசுவதும் உண்டு. இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிலைகளிலும், உத்திகளை வடிவமைப்பது. செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்றவை வழிமுறைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலநேரங்களில் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதும் உண்டு.

சீனா செயற்கை மழை பெய்ய செய்த முயற்சி வெற்றியடைந்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களும் படிப்படியாக வறட்சியின் பிடியிலிருந்து மீள தொடங்கியுள்ளது. மக்களுக்கு மழை தேவையென்றால் கடைசி முயற்சியாக மழையே பெய் என ஆணையிடும் நிலையை அறிவியல் வளர்ச்சி உருவாக்கியிருக்கிறது.


1 2 3 4 5