
இந்த நிலைகளை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்த தலைசிறந்த அனுபவம் கொண்ட நிபுணர்கள் அவசியம். வானிலை, மழை எங்கு பெய்ய வேண்டுமோ அந்த இடத்தின் முழு விபரங்கள், அப்பகுதியின் சுற்றுப்புறங்களில் காற்று வீசுகின்ற திசை மற்றும் வேகம், வேதிப்பொருட்களை தூவ வேண்டிய சரியான பகுதிகள் ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொண்டு எந்த வேதிப்பொருளை, எவ்வளவு பயன்படுத்துவது என்பதை தலைசிறந்த நிபுணர்களே முடிவு செய்து நிறைவேற்ற முடியும். இந்த வேதிப்பொருட்கள் பல வழிகளில் தூவப்படுகின்றன. வேதியல் பொருட்களை சுமந்த ஏவுகணை குண்டுகளை தரையிலிருந்தோ அல்லது விமானங்கள் மூலமாகவே மேகங்களில் வீசலாம். இந்த வேதியல் பொருட்களை கொண்ட சிறிய ரக விமானம் மேகங்களின் மையப்பகுதிக்கு சென்றும் இவற்றை தூவச்செய்யலாம். மலைப்பகுதி வறண்டு, காடு அழிகிறது என்றால் இந்த மேக விதைப்புக்கு பயன்படுத்தப்படுகின்ற வேதியல் பொருட்களை மலைகளுக்கு மேலேலுள்ள மேகங்களில் தூவி, மலைகளிலும் மலையடிவாரங்களிலும் மழை பொழிய செய்யலாம். வேதியல் பொருட்களை மேகங்களில் தூவுவது என்றவுடன் ஏதோ அடுக்குமாடி கட்டிடங்களை தொட்டு செல்வதுபோன்று காணப்படும் மேகங்களில் அவை தூவப்படுகின்றன என்று எண்ணிவிடாதீர்கள். 18,000 மீட்டருக்கு மேலான உயரத்தில் உள்ள மேகங்களில்தான் இந்த வேதியல் பொருட்கள் தூவப்படுகின்றன.
1 2 3 4 5
|