 புதிய புள்ளிவிபரங்களின் படி, கடந்த 30 ஆண்டுகளில், திபெத்தின் கல்வி துறையில் நடுவண் அரசு மொத்தம் 2200 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. தற்போது, திபெத்தில், துவக்கப் பள்ளிக்கு முந்திய கல்வி, துவக்க மற்றும் இடைநிலை கல்வி, சிறப்பு கல்வி, தொழிற் கல்வி, உயர் கல்வி, வயதுவந்தோர் கல்வி உள்ளிட்ட மேம்பட்ட நவீன தேசிய இன கல்வி அமைப்புமுறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. திபெத்தின் கல்வி இலட்சியம் வரலாற்றில் மிக வேகமாக வளரும் காலத்தில் நுழைந்துள்ளது.
ஹாய் சா துவக்கப் பள்ளி, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலுள்ள சங் குவான் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியின் பெரும்பாலான மாணவர்கள் அருகிலுள்ள விவசாய மற்றும் ஆயர் குடும்பங்களைச் சேர்ந்தவராவர். 1980ம் ஆண்டுமுதல், ஹாய் சா துவக்கப் பள்ளி, மாணவர்களுக்கு இலவச உணவு, உறைவிடம் மற்றும் கல்வி வழங்கத் துவங்கியது. அதன் தொகை 1200 யுவானாகும். குழந்தைகளின் கல்வி கட்டணம் பற்றி அந்தக் குடும்பங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ChangpaYumtan கூறினார். அவர் கூறியதாவது
1985ம் ஆண்டு முதல், இக்கொள்கையை மேற்கொள்ளத் துவங்கினோம். கடந்த சில ஆண்டுகளாக அரசு கல்வி துறையில் மேலதிக தொகையை ஒதுக்கியுள்ளது. ஆண்டுக்கு மாணவர்கள் தலை 1200 யுவான் மானியத்தை அனுபவிக்கலாம். மேலும், சங் குவான் பிரதேச அரசு ஒருவருக்கு 15 யுவானை வழங்குகின்றது. மாணவர்களிடம் கல்விக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்று அவர் விளக்கினார்.
1 2 3 4
|