• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-26 09:44:53    
விரைவாக வளர்ந்து வரும் திபெத்தின் கல்வி இலட்சியம்

cri

நேரடி ஒதுக்கீட்டை தவிர, கல்வி துறையில் திபெத்தை ஆதரிக்கும் முக்கிய கொள்கைத் தீர்மானத்தை சீன அரசு வகுத்துள்ளது. வளர்ந்த மாநிலங்கள் மற்றும் நகரங்களில் திபெத் கல்வி இலட்சியத்தை ஆதரிக்க ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தன. வசதியான உள் பிரதேசங்கள் திபெத் மாணவர்களுக்கென வகுப்புகளை நடத்தி, திபெத்தின மாணவர்களுக்கு சிறப்பு கல்வி மற்றும் வாழ்க்கை சலுகையை வழங்கியுள்ளன.

தவிர, திபெத் இடைநிலை மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி திட்டத்தையும் சீனக் கல்வி அமைச்சகம் நடைமுறைப்படுத்துகின்றது. 2007ம் ஆண்டு முதல் தெப்த்துக்கென ஆண்டுக்கு 1000க்கு மேலான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது.

கல்வி துறையில் சீன மொழி மற்றும் திபெத் மொழியில் வகுப்பை நடத்துவதன் மூலம், தேசிய இனப் பண்பாடு சிறப்பாக கையேற்றப்பட்டு பரவல் செய்யப்படுகின்றது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் திபெத் மொழிப் பணி ஆணையத்தின் துணைத் தலைவர் Losang Thokme கூறியதாவது

ஜனநாயகச் சீர்திருத்தக்குப் பின், நடுவண் அரசு திபெத்தில் பல ஆயிரம் பல்வகை பள்ளிகளை நடத்துகின்றது. துவக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை, திபெத் மொழி கல்வியில் கவனம் செலுத்தப்படுகின்றது. திபெத் மொழில் கல்வி செழிப்படையும் காலத்தில் நுழைந்துள்ளது. திபெத் மொழியை வளர்க்க, அதனைக் கற்றுக்கொண்டு வளர்க்கும் விதிகளை தன்னாட்சி அரசு வகுத்துள்ளது. அதன் மூலம் திபெத் மொழி கல்வி சட்ட ரீதியில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

திபெத்தில் வளமான மதப் பண்பாட்டு பாரம்பரியம் உள்ளது. புத்த மத கழகங்களை நடத்துவதிலும் தன்னாட்சி பிரதேச அரசு கவனம் செலுத்துகின்றது. அந்த கழகங்களில் கல்வி அளிக்க அரசு அடிக்கடி புகழ்பெற்ற வாழும் புத்தர்களையும், புத்தர் மத அறிஞர்களையும் அழைக்கின்றது. திபெத் மக்கள் நவீன நாகரிகத்தின் கனிகளை அனுபவிக்கும் அதேவேளையில், சொந்த தேசிய இனத்தின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் நிலைநிறுத்துகின்றனர்.


1 2 3 4