
1950ஆம் ஆண்டுகளில், அமைதியாக விடுதலை பெறுவதற்கு முன், திபெத்தில் நவீன தத்துவத்திலான பள்ளி ஒன்றும் இருக்கவில்லை. மதத்தையும் அரசியலையும் ஒன்றிணைக்கும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையால், திபெத் நீண்ட காலமாக பிந்தங்கிய முற்றுகை நிலைமையில் சிக்கி இருந்தது. கோயில்கள், திபெத் உள்ளூர் அரசு ஆகியவை கட்டியமைத்த பள்ளிகளில் துறவிகள், அதிகாரிகள் மற்றும் உயர் குடி மக்களின் குழந்தைகள் மட்டுமே சேர்ந்தன. அப்போது, பள்ளியில் சேரும் குழந்தைகளின் விகிதம் 2 விழுக்காட்டுக்குள் இருந்தது. அப்போது, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரிடையே எழுத்தறிவின்மை விகிதம் 95 விழுக்காடாகும்.
திபெத் அமைதியாக விடுதலை பெற்ற பின், திபெத்தின் கல்வி இலட்சியத்தை வளர்ப்பதில் நடுவண் அரசு முக்கிய பங்கு ஆற்றி, திபெத் கல்வி துறையிலான ஒதுக்கீட்டை பெரிதும் அதிகரித்து, பல முன்னுரிமையுடைய கொள்கைகளை மேற்கொண்டது.
2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையான காலத்தில், திபெத் கல்வி துறையின் கட்டுமானத்திற்கு நடுவண் அரசு 230 கோடி யுவான் தொகையை ஒதுக்கியது என்று திபெத் கல்வி துறை ஆணையத்தின் துணைத் தலைவர் து ச்சியேன் குங் கூறினார். அவர் கூறியதாவது
தற்போது, திபெத்தில் 880 துவக்கப் பள்ளிகள் உள்ளன. துவக்கப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 33 ஆயிரமாகும். இளையோர் இடை நிலை பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரமாகும். உயர் நிலை மற்றும் தொழில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகும். பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகும். அரசு சாரா கல்வி, தொடர் கல்வி, நவீன அஞ்சல் வழி கல்வி ஆகிய துறைகளிலும் புதிய முன்னேற்றங்கள் காணப்பட்டன என்று அவர் கூறினார்.
1 2 3 4
|