• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 11:29:37    
ஃபெங்ஷுவெய்

cri
வீடு கட்டும்போது நம்மில் பலர் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுண்டு. எந்த திசையில் எந்த அரை இருக்கவேண்டும், எந்த அறைகள் எந்த திசையில் இருக்கக்கூடாது என்பதையெல்லாம் சொல்லும் ஒரு சாத்திரமே இந்த வாஸ்து. அக்னி மூலை, வாயு மூலை, குபேர மூலை, ஈசான மூலை என்று மொத்தம் எட்டு மூலைகளாக வகுத்து எட்டு திசைகளுக்குரியனவாக கூறுகிறது வாஸ்து. வாஸ்து வெறும் மூடநம்பிக்கை என்று கூறுவோரும் உண்டு, அவை அறிவியல் ரீதியாக இயற்கையோடு தொடர்பு கொண்டவை என்று கூறுவோரும் உண்டு. ஏறக்குறைய இந்த வாஸ்துவை போன்றே சீனாவில் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கத்தைத்தான் இன்றைய நிகழ்ச்சியில் நாம் அறிமுகப்படுத்துகிறோம். இதை ஃபெங்ஷுவெய் என்று சீனர்கள் அழைக்கின்றனர்.


வீடு, நினைவகம், அல்லது ஒருவரது சொந்த வாழ்க்கையின் அல்லது அவரது குடும்பத்தின் நலனோடு, அதிர்ஷ்டத்தோடு தொடர்புடையவை எங்கே அமைய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதே ஃபெங்ஷுவெய்.
நீண்ட வரலாறும், பாரம்பரியமும் கொண்ட ஃபெங்ஷுவெய், யின் - யாங் மற்றும் பஞ்ச பூதங்களின் கோட்பாடுகளிலிருந்துதான் உருவானது என்கிறார்கள். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை நாம் பஞ்ச பூதங்கள் என்று கூறுவதைப் போல், சீனர்கள் மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர் ஆகியவறை பஞ்ச பூதங்களாக குறிப்பிடுகின்றனர்.
1 2 3 4