இடத்தின் தெரிவு, நோக்கு, கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஒழுங்கு இவை ஃபெங்ஷுவெயில் முக்கிய காரணிகள். வீட்டுக்களு வசித்தபடி மனிதர்கள் இயற்கையின் பாதிப்பை, செல்வாக்கை உணர்ந்துகொள்ளவேண்டும். இயற்கையின் நுட்பமான செய்தியை, அதன் செல்வாக்கை உணர்ந்துகொள்ள வீட்டின் அமைவை, வடிவத்தை மாற்றமுடியும். ஒரு மனிதனை சுற்றியுள்ளவை அதாவது சூழல் அவனது மனநிலையை, உடல்நலனை பாதிக்கலாம், அவற்றின் மீது செல்வாக்கு கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவனது அந்த நபரது தொடில், பணி, குடும்ப உறவுகள், அதிர்ஷ்டம் இவற்றையும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. சூரிய ஒளி, காற்று, நீர், வானியல் காந்தத்தன்மை, ஒலி, வண்ணம், ஈரப்பதம், கதிரியக்கம் மற்றும் வைரஸ் ஆகியவற்றை தற்கால ஃபெங்ஷுவெய் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதுமுண்டு.

கட்டுமானம், வானியல், புவியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் அழகியலிலான அறிவைக் கொண்டுள்ள ஃபெங்ஷுவெய், மக்களின் உடல் மற்றும் உள்ள தேவைகளுக்கான தனிச்சிறப்புகொண்ட சூழலை ஏற்படுத்திட்தரமுடியும். சுருங்கக்கூறின் ஃபெங்ஷுவெய் என்பது சூழல் பற்றிய புரிதல் மற்றும் அனுசரித்தலை குறிக்கிறது எனலாம்.
1 2 3 4
|