
சுற்றுச்சூழல், சுகாதாரம், புவியமைவு ஆகியவற்றை பற்றிய நீண்ட நெடுங்கால எண்ணங்கள், கருத்தாக்கங்களின் ஒரு கூட்டு அறிவியல் கூறு ஃபெங்ஷுவெய் என்று ஒரு சாராரும், சீனர்களின் கட்டிடக்கலையின் உள்ளும் புறத்திலுமான வடிவமைப்புகளின் நவீனமயமாக்க வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஒரு மூடத்தனமே, மூட வழக்கமே ஃபெங்ஷுவெய் என்று மற்ற சாராரும் கருதுகின்றனர். ஃபெங்ஷுவெய் பற்றிய தரவுகள், குறிப்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. இத்தரவுகள், பண்டைய ஃபெங்ஷுவெய் கோட்பாடு, அக்கால அரண்மனைகள் மற்றும் நினைவகங்களின்அமைவை நிர்ணயிக்க உதவியதை வெளிப்படுத்துகின்றன. இக்கால ஃபெங்ஷுவெய் வானளாவிய கட்டிடங்களின் கட்டுமானம் முதல் சாதாரண ஒரு எளிய குடும்பத்தின் வீடு பற்றிய கனவுகளுக்கு வடிவம் தருவது வரை பரந்துபட்ட ரீதியில் கருத்தில் கொள்ளப்படுகிறது.
1 2 3 4
|