• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 11:29:37    
ஃபெங்ஷுவெய்

cri

கி. பி. 265 முதல் 420ம் ஆண்டு வரையான ஜின் வம்சக்காலத்தில் குவோ பு என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் ஃபெங்ஷுவெய் என்ற வார்த்தை முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஃபெங்ஷுவெயின் அடிப்படையும், மையக் கருத்துக்களும் சீனத் யி ஜிங் என்ற தொன்னூலிலிருந்து உருவானதாக, வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வீடு எங்கே கட்டவேண்டும் என்பதை பற்றிய எளிமையான ஒரு அன்றாட வாழ்க்கை பயன்பாட்டு திறமையாக இருந்த ஃபெங்ஷுவெய் பின்னாளில் மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையிலான இணக்கம் என்பது போன்ற தத்துவார்த்த கருத்துக்களின் பரவலாலும், யி ஜிங் தொன்னூலின் கருத்துக்களது அதிகரித்த செல்வாக்காலும், ஃபெங்ஷுவெயும் ஒரு பெரிய கோட்பாட்டு முறைமையாக மாற்றம் பெற்றது எனலாம். சீனர்களது வாழ்விட சூழலையும் அவர்களது வாழ்க்கை வடிவங்களையும் பாதித்து, மாற்றி, செல்வாக்கு பெற்றது ஃபெங்ஷுவெய் .


சீனாவிலிருந்து எழுந்த ஒரு தனித்தன்மை கொண்ட பண்பாட்டு வடிவமாக ஃபெங்ஷுவெய் சரியான தெரிவுகள் மேற்கொள்ளவும், இக்கட்டான, துரதிர்ஷ்டமான நிலையை தவிர்க்கவும் சில வழிமுறைகளை வகுத்தளிக்கிறது. மனிதர்களுக்கும், இயற்கைக்குமிடையிலான உறவை பற்றி கூறும் ஃபெங்ஷுவெய் சீன மக்களின் இயற்கையுடனான இணக்கமாக வாழ்வது பற்றிய புரிதல், ஏற்பு மாற்றம், முயற்சி ஆகியவற்றுக்கு சான்று பகர்கிறது.

1 2 3 4