• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-14 15:15:34    
கடந்த 30 ஆண்டுகளி்ல் திபெத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்கள்

cri

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, செயல்படுத்தப்பட்ட பின், qun pei ci erஐப் போன்ற திபெத் மக்களின் வாழ்க்கையில், மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா தலைநகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள zang re கிராமம் உள்ளது. அது, கறவை பசுக்களின் ஊர் என அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில், சுமார் 40 வயதான ba sang வாழ்ந்து வருகிறார். zang re கிராமத்தில், அவர், மிக பெரிய கறவைப் பசுக்களை வளர்க்கின்ற திறமைசாலி ஆவர். ba sang கூறியதாவது

நான், 35 கறவைப்பசுக்களை வளர்க்கின்றேன். நாள்தோறும் சுமார் 200 லிட்டர் பால் கிடைக்கிறது. ஆண்டுக்கு, 70 ஆயிரம் யுவான் சம்பாதிக்கிறேன். அதனால் நான், மேலும் இன்பமாக வாழ்கின்றேன். விளை பயிர்களின் விளைச்சலை உயர்த்த, அரசு ஒதுக்கீட்டில் 80 விழுக்காட்டையும், விவசாயின் மற்றும் ஆயர்கள் திரட்டிய 20 விழுக்காட்டையும் சேர்ந்த நிதி நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. இந்த நடவடிக்கை, விவசாயிகளும் ஆயர்களும் சாகுபடியில் இயந்திரங்கள் புகுத்துவதை நனவாக்கியுள்ளது என்று Cai gong tang வட்டத்தைச் சேர்ந்த bai ding கிராமத்தில் வாழ்கின்ற cai dan ping cuo கூறினார். அவர் மேலும் கூறியதாவது

இப்போது, எமது கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், வேளாண் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை, எமது பணிப்பயனையும் உணவு தானிய விளைச்சலையும் உயர்த்துகின்றன. இதனால், பல மணி நேரங்களைச் சிக்கனப்படுத்தி, குடும்ப அளவில் செய்யக்கூடிய பல துணைத் தொழில்களில் ஈடுபடுகின்றோம். அதனால் எமது வருமானம், உயர்ந்தது. இப்போது, எனது ஆண்டு சராசரி வருமானம், சுமார் 30 ஆயிரம் யுவானை எட்டுகின்றது. இது கடந்த சில ஆண்டில் இருந்ததை விட 3 மடங்கு அதிகம்.

1 2 3 4