
கடந்த 5 ஆண்டுகளாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திற்கு, சுமார் 100 கோடி யுவான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் 173 சிறப்புத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையின் துணை இயக்குநர் lin mu கூறினார்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, செயல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளாக, திபெத்தின் சமூக பொருளாதாரம் விரைவாக வளர்வதுடன், திபெத் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் குடிமக்களின் வருமானம், இடைவிடாமல் அதிகரித்துள்ளது. அவர்களின் வாழ்க்கை நிலை, குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புள்ளிவிபரப் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி, 2007ம் ஆண்டில், திபெத் நகரவாசிகளின் நபர்வாரி வருமானம், 11 ஆயிரத்து 131 யுவானை எட்டியது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம், 2 ஆயிரத்து 788 யுவானை எட்டியது.
1 2 3 4
|