
திபெத்தின் கிராமபுற சுற்றுபபயணம், சிறுபான்மை தேசிய இன கைவினைத் தொழில், தனியார் போக்குவரத்து முதலிய துறைகள், விரைவாக வளர்ந்துள்ளன. உழைப்பு மூலம் ஈட்டப்படுகின்ற வருமானமே, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் முக்கிய வரவாகும் என்று திபெத் சமூக அறிவியல் கழகத்திலுள்ள கிராமப் பொருளாதார ஆய்வகத்தின் துணைத் தலைவர் duo qing கூறினார்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, செயல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளாக, திபெத் நலவாழ்வு இலட்சியம் இடைவிடாமல் வளர்ந்து வருகின்றது. முன்ன இருந்த மூன்று திபெத் மருத்துவ சிகிச்சை நிறுவனங்களிலிருந்து, இப்போது 7 ஆயிரத்து 127 மருத்துவ சிகிச்சை நிறுவனங்கள் உருவாகியுள்ளன. தற்போது, திபெத்திலுள்ள விவசாயிகளும் ஆயர்களும், இலவச மருத்துவ சிகிச்சையை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதேசத்தின் மருத்துவ சிகிச்சை உத்தரவாதத்தை பெற்றுள்ளனர். 1 2 3 4
|