• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ்ப் பிரிவு
கலையரசி
வாழ்த்துக்கள்
நண்பர்களே வணக்கம். இன்று ஜனவரி முதல் நாள். பழையதை வழியனுப்பி புதியதை வரவேற்கும் தருணத்தில் நான் கலையரசி பெய்ஜிங்கிலிருந்து உங்களுக்கு என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவி்த்துக் கொள்கின்றேன். புத்தாண்டில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இன்பமாகவும் நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகின்றேன்.
கடந்த ஓராண்டில் தமிழ்ப் பிரிவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வானொலி ஒலிபரப்பின் கட்டமைப்பு அக்டோபர் திங்கள் முதல் நாள் தொடக்கம் புதுபிக்கப்பட்டுள்ளது. தமிழ் இணையதளமும் புதிய வடிவத்தில் நவம்பர் 26ம் நாள் தொடங்கி நேயர் நண்பர்களுக்கும் இணையதளப் பயன்பாட்டாளர்களுக்கும் சேவை புரிந்து வருகிறது. ஊடகத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் அனைவரையும் நேயர் நண்பர்களாகிய உங்களுடன் மேலும் நெருங்கச் செய்துள்ளன.
கலைமகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!அன்புள்ள நேயர்களே. 1999ம் ஆண்டில், நான் சீன வானொலியின் தமிழ் பிரிவில் வேலை செய்யத் துவங்கிய பின் இதுவரை, அதிகமான நேயர்களுடன் நெருங்கிய நண்பராக மாறியுள்ளேன். மின்னஞ்சல், MSN மூலம் நேயர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது விருப்பங்களையும் முன்மொழிவுகளையும் கேட்டறிந்தேன்.
தமிழன்பன்
365 நாட்களுக்கு முன்னால் புதிய வரவாக இருந்த 2009 ஆம் ஆண்டு முழுவதும் செலவாகி, தற்போது 2010 ஆம் ஆண்டு புது வரவாகியுள்ளது. பழையவற்றை நினைவுகளாக்கி, புத்தாண்டில் வருகின்றவற்றை கனவுகளாக்கி வாழ்வை தொடர்கின்றோம். 2009 ஆண்டு நினைவுகளில் முத்தாய்ப்பாய் ஒரு சில.நிதி நெருக்கடி, வளர்ந்த பொருளாதாரங்களை முற்றிலும் புரட்டிப்போட்டது. இதனால் உலக  முழுவதும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, அனைத்துலக நாடுகளின் இணைந்த முயற்சிகள் தொடங்கியது கடந்த ஆண்டே.
வாணி
புத்தாண்டு நல்வாழ்த்துக்களை வாணி பெய்ஜிங்கிலிருந்து உங்களுக்கு தெரிவிக்கின்றேன். 2010ஆம் ஆண்டில் நுழைந்துள்ளோம். இக்காலத்தில் பலர் கடந்த ஓராண்டு காலப் பணி, கல்வி மற்றும் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து புதிய ஆண்டின் திட்டத்தை வகுப்பது மக்களின் வழக்கம் தான். சிறுவர் சிறுமியரைப் பொருத்த வரை, புத்தாண்டு நாள் மகிழ்ச்சிகரமான காலமாகும்.
கிளீடஸ்
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் திங்களாகி ஆண்டுமாகி புதிய ஓராண்டில் நாம் நிற்கிறோம். நல்லதும் அல்லதுமாக கழிந்த நாட்களின் அனுபவங்களை அசைபோட்டபடி, இனி வரும் நாட்கள் இனிமையாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு உங்கள் இல்லங்களை வந்தடையும் சீன வானொலி தமிழ்ப்பிரிவின் ஒரு சின்னக்குரலாய், உங்களுக்கு வண்ணமிகு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன். ஊடக உலகில் நுழைந்து 11 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஈஸ்வரி&திலகவதி
ஜெயா&சீதா
வான்மதி
2008, 2009ஆம் ஆண்டுகளில், நேயர்களின் கடிதங்களைக் கையாளும் பணிக்கு மீனாவுடன் கூட்டாக பொறுப்பேற்றேன். இதன் காரணமாக, பல நேயர்களைப் பற்றி மேலும் அதிகமாக தெரிந்து கொண்டு, அவர்களோடு நண்பர்களாகியுள்ளேன்.நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களும் அன்பளிப்புகளும் மதிப்புள்ள அரிய செல்வமாகும்.
மோகன்
ஜனவரி திங்கள் முதல் நாள் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இச்சிறப்பான தருணத்தில், நேயர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.2009ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், நான் திருமணம் செய்ததோடு, என் வாழ்க்கையும் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது.
மீனா
கடந்த ஆண்டு வான்மதியுடன் சேர்ந்து கடிதம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டேன்.கடந்த ஓராண்டில், தங்கள் புரிந்துணர்வு மற்றும் பொறுமையை நான் உணர்ந்து கொண்டேன்.
தேன்மொழி
கடந்த ஆண்டின் டிசம்பர் திங்களில், சீன வானொலி நிலையத்தின் தமிழ் இணைய தளத்தில், புதிய மாற்றங்கள் காணப்பட்டன. சீனா மற்றும் உலக செய்திகள் கிடைப்பதோடு, மேலதிக சிறந்த படங்களை பார்த்து, ஒலிகளையும் கேட்கக் கூடியாதாய் அது உள்ளது.
சிவகாமி
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தரை, 2009ம் ஆண்டு மிகவும் முக்கியமானது. ஆகஸ்ட் திங்கள் எனக்கு திருமணம் நடந்தது.இல்லற வாழ்க்கை இனிமையாக உள்ளது.
மதியழகன்
நான்,  சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர், மதியழகன். புத்தாண்டு வாழ்த்துகள் என்பதை சீன மொழியில் "xin nian hao" என்று சொல்லலாம். இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் சீன வரலாற்றுச் சுவடுகளையும் சேர்க்க, நான் திட்டமிடுகிறேன்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040