24 சூரியப் பருவங்களைக் கொண்டதாக, சீனாவில் பண்டைக் காலத்தில் வேளாண் துறைக்கு வழிகாட்டுவதற்கான நாள்காட்டி உருவாக்கப்பட்டது. இது, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இயக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சீனா ஒரு வேளாண் சமூகமாகும். வேளாண்மை சூரியனின் இயக்கத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது. 24 சூரியப் பருவங்கள் காலநிலை மாற்றங்களைக் காட்டும். இவை வேளாண் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும். மக்கள் அனைவரின் உடை, உணவு, உறைவிடப்பயன்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகளின் மீது அவற்றின் தாக்கம் இருக்கும்.
|

立春Li chun லீ சூன்
"லீ"என்ற சொல்லுக்குத் தொடக்கம் என்று பொருள். "லீ சூன்"சீனாவின் வசந்தகாலத்தின் தொடக்கமாகும்.
|

雨水Yu shui யூ ஷூயி
இந்தப் பருவத்தில், வான் நிலை வெப்பம் ஏறத் தொடங்கி, மழை பெய்யும் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.
|

惊蛰Jing zhe ஜிங் சே
இந்தப் பருவத்தில் வான் நிலை வெப்பம் ஏறத் தொடங்கி, வசந்த காலத்தின் இடியோசை எழுந்து, பூமிக்கு அடியில் உள்ள பூச்சிகள் விழித்தெழத் தொடங்கும்.
|

春分 Chun fen சுன் ஃபென்
உலகின் பல்வேறு இடங்களிலும் அன்று இரவும், பகலும் சமமாக இருக்கும்.
|

清明 Qing ming குயிங்மிங்
இந்தப் பருவத்தில், சூரிய வெப்பம் அதிகரித்து, தாவரங்கள் செழித்து வளரும். ஜிங் மிங் நாளன்று, மக்கள் இயற்கையைத் தழுவி,கல்லறைகளைச் சுத்தம் செய்வார்கள்.
|

谷雨 Gu yu கூ யூ
இந்தப் பருவத்தில், மழை பெய்யும் அளவு போதுமானது. தாவரங்கள் செழித்து வளரும்.
|

立夏Li xia லீ சியா
"லீ சியா"என்பது கோடைக் காலத்தின் தொடக்கத்தைக் கறிக்கும்.
|

小满 Xiao man சியௌ மான்
கோடைக்காலத்தில் முதிர்கின்ற பயிரின் விதை வெளியே வந்து பால் பிடிக்கத் தொடங்குகின்ற சூரியப் பருவம்.
|

芒种 Mang zhong மாங் சோங்
மிஸ்காந்தல் புல் செடிகள் முதிர்ச்சி அடைகின்ற சூரியப் பருவம்.
|

夏至 Xia zhi சியா ச்சி
அன்று சூரிய வெளிச்சம் வட துருவத்தில் வெளிப்படும். வட அரைக்கோளத்தில், மிக நீண்ட நாளாகச் சியா ச்சி திகழ்கிறது.
|

小暑 Xiao shu சியௌ ஷூ
சியௌ ஷூ நாளன்று தாவரங்கள் செழித்து வளர்கின்றன. வானிலையும் வெப்பமாகத் தொடங்குகிறது.
|

大暑 Da shu டா ஷூ
டா ஷூ என்னும் நாள் ஓராண்டில் மிக வெப்பமான பருவ நாளாகும்.
|

立秋 Li qiu லி சியூ
லி சியூ என்றால் இலையுதிர் காலம் தொடங்குகிறது என்று பொருள்படுகிறது.
|

处暑 Chu shu ச்சு ஷூ
ச்சு என்றால் நிறுத்தம் என்று பொருள். ச்சு ஷூ வருவது, வெப்பமான நாட்கள் முடிவடைவதைக் குறிக்கிறது.
|

秋分 Qiu fen சியூ ஃபென்
சியூ ஃபென் அன்று, பகலுக்கும் இரவுக்கும் சமமான நீளம் உண்டு.
|

寒露 Han lu ஹான் லு
பண்டைக் காலத்தில், வானிலை குளிர்ச்சியாகத் தொடங்குவதை பனி என மக்கள் கருதினர். ஹான் என்றால் குளிர்ச்சி என்று பொருள். இந்தப் பருவம் ஹான் லு என்று அழைகக்கப்படுகிறது.
|

霜降 Shuang jiang ஷூவாங் ஜியாங்
வானிலை மேன்மேலும் குளிர்ச்சியாகத் தொடங்கி, பனி பெய்யத் தொடங்கும் பருவம் ஷூவாங் ஜியாங் என்று குறிப்பிடப்படுகிறது.
|

立冬 Li dong லி தொங்
லி என்றால் அமைக்கத் தொடங்குவது என்று பொருள். லி தொங் அன்று முதல் குளிர் காலம் தொடங்குகிறது.
|

小雪 Xiao xue சியௌ சுயெ
சியௌ சுயெ பருவத்தில் வானிலை குளிர்ச்சியடைவதால், பனி வடிவமாக மழை பெய்கிறது. ஆனால், இந்தச் சூரியப் பருவத்தில் பனி அவ்வளவு அதிகமாக இல்லை.
|

大雪 Da xue டா சுயெ
டா சுயெ பருவத்தில் வானிலை மேலும் குளிர்ச்சியாக மாறுகிறது. பனி பெய்யும் வாய்ப்பு மேலும் அதிகமாக இருக்கும்.
|

冬至 Dong zhi தொங் ச்சி
தொங் ச்சி அன்று வான சாஸ்திர படி வட அரைக்கோளத்தில் மிக குறுகிய நாளாகும்.
|

小寒 Xiao han சியௌ ஹான்
சியௌ ஹான் என்பது தப்பவெப்ப நிலை மிகக் குறைந்த சூரியபருவமாகும்.
|

大寒 Da han டா ஹான்
டா ஹான் என்பது சியௌ ஹான் போலவே வானிலையின் குளிர்ந்த நிலையைத் தெரிவிக்கின்ற சூரியப் பருவமாகும்.
|
|
|