• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன மகளிர் தகவல்]
சீன மகளிர் தகவல்

2002ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் பெண்களின் எண்ணிக்கை 62 கோடியாக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 48.5 விழுக்காடு ஆகும். பெண்களின் வளர்ச்சியில் முன்னேற்றத்துக்கும் சீன அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாட்டின் சமூக வளர்ச்சிக்கான அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக ஆண் பெண் சமத்துவத்தை பின்பற்றுகிறது. ஒட்டு மொத்த கொள்கைகளை வகுக்கும் போது, ஆண் பெண் சமநிலையில் பங்கெடுப்பு, கூட்டு வளர்ச்சி, கூட்டாக பயனடைவது என்ற கோட்பாட்டுக்கு இணங்க, மகளிர் முன்னேற்றமடைவதற்கு வலுவான அரசியல் உத்தரவாதத்தையும் சட்ட பாதுகாப்பையும் சீன அரசு தருகிறது.

கடந்த 90ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல், 5 ஆண்டுகால சீன மகளிர் வளர்ச்சி பற்றிய திட்ட வரைவையும், 10 ஆண்டுகால சீன மகளிர் வளர்ச்சி பற்றிய திட்ட வரைவையும் சீன அரசு வகுத்து வெளியிடது. விளைவாக, சீன மகளிரின் சட்ட உரிமைகள் உண்மையாக பாதுகாக்கப்பட்டு, அவர்கள் வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் லட்சியத்தின் முழுமையான முன்னேற்றமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம், குடும்பம் ஆகிய துறைகளில் ஆணுக்கு சமமான உரிமையை சீன மகளிர் அனுபவிக்கின்றனர். மனித உரிமைகள் பாதுகாப்பல் ஒரு முக்கிய பகுதி என்ற முறையில், அவர்களின் சிறப்பு உரிமைக்கான பாதுகாப்பில் அரசும் சமூகமும் மேலும் கவனம் செலுத்தி வருகின்றன. சீன அரசு மற்றும் பல்வேறு வட்டாரங்களின் கூட்டு முயற்சியுடன், சீன மகளிரின் தகுநிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. அவர்களின் கல்வியறிவு பன்முகங்களிலும் மேம்பட்டுள்ளது. அவர்களின் வளர்ச்சி முன்கண்டிராத நல்ல காலகட்டத்தில் நுழைந்துள்ளது.

(படம்: சமூக நடவடிக்கைகளில் சீன மகளிர் பங்கெடுப்பது)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040