• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முன்னேற்றமும் குறிக்கோளும்]
சுற்றுசூழல் பாதுகாப்பு பணியின் முன்னேற்றம்

30 ஆண்டுகளுக்கு அதிகமான தொடர்ந்து முயற்சிகளின், விளைவாக சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு பணி உலகில் புகழ்பெற்றுள்ளது. பொருளாதார கட்டுகோப்பை சீர்ப்படுத்தி உள் நாட்டின் தேவை விரிவாடையும் நிலையில், சுற்று சூழல் பாதுகாப்பு பணியில் சீனா மேலும் அதிகமான ஆற்றலுடன் ஈடுபட்டுள்ளது. பொதுவாக கூறின், நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மோசமாகி பாதிக்கப்படும் போக்கு அடிப்படையில் கட்டுப்படுத்தபட்டுள்ளது. சில நகரங்களில் சுற்றுச் சூழல் தரம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது சீனாவின் தொடர்ச்சியான நெடுநோக்கு திட்டத்துக்கு குறிபிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது.

சீன அரசு சுற்றுசூழல் பணியில் முக்கிய கவனம் செலுத்துவது

1997ம் ஆண்டு முதல் சீன அரசாங்கள் தொடர்ந்து கலந்துரையாடல் 7 ஆண்டுகளாக கூட்டம் நடத்தி சுற்றுசூழல் பாதுகாப்பு பணி பற்றிய அறிக்கையை கேட்டறிந்துள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணி, நாட்டை வலுப்படுத்தி மக்களுக்கு நலன் தரும் மிக பெரிய நிகழ்ச்சியாகும் என்று சீன அரசு தலைவர்கள் கருதுகின்றனர்.

சீனாவின் தேசியத்துறைகளின் சீர்த்திருத்தத்தில் சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டுள்ளன. 1988ம் ஆண்டு சீனாவின சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம், தேசிய நகர மற்றும் கிராமப்புற கட்டுமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சிலிருந்து, சீன அரசவையின் நேரடி ஆணையமாக மாறியுள்ளது. 1993ம் ஆண்டு துணை அமைச்சர் நிலையாக இருந்து. 1998ம் அண்டு அமைச்சர் நிலைக்கு உயர்ந்தது, அதன் பெயர் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் மாசு கட்டுபடுத்தப்படுவது

கடந்த சில ஆண்டுகளாக மாசுப்பட்ட, 84 ஆயிரம் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அரசு வகுக்கின்ற முக்கிய பிரதேசத்தின் மாசு கட்டுப்பாடு பணித்திட்டம், படிப்படியாக வெற்றி பெற்றுள்ளது. ஹுய் ஆற்றின் மாசு தெளிவாக குறைந்துள்ளது. ஹாய் ஆற்றின், லியோ ஆற்றின் மாசு நிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருக்கிறது. தாய்ஹுய் ஏரியின் மோசமான நிலை துவக்கத்திலேயே கட்டுபடுத்தப்பட்டுள்ளது. பெய்சிங் நகரத்தின் காற்று மாசைக் கட்டுபடுத்துவதிலும் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.

உயிரின சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமானம் வலுப்படுத்தப்பட்டுள்ளது

மாசுகட்டுபாட்டை உயிரினப் பாதுகாப்புடனும் இணைக்கும், கொள்கையை சீனா பின்பற்றியுள்ளது, நாடு முழுவதிலும் மொத்தம் 1227 பல்வகை இயற்கை பாதுகாப்பு பிரதேசங்கள் உள்ளன. இயற்கை பாதுகாப்பு பிரதேசங்களின் நிலபரப்பு மொத்தம் 9 கோடியே 82 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டராகும். இது முழு நாட்டின் நிலப்பகுதி நிலபரப்பில் 9.85 விழுக்காடாகும். 4 உயிரினச் சூழல் மாநிலங்களும், 200க்கு அதிகமான அரசு நிலை உயிரினச்சூழல் முன்மாதிரி பிரதேசங்களும் இப்போது சீனாவில் இருக்கின்றன. அதே வேளையில் சீனாவின் காடுகளின் வளர்ச்சி விகிதம் 16.5 விழுகாட்டை எட்டியுள்ளது.

சுற்றுசூழல் சட்ட கட்டுமானத்தின் வளர்ச்சி

தற்போது, காற்று மாசைக் கட்டுபடுத்தும் சட்டம், நீர் மாசு கட்டுபடுத்தும் சட்டம், கடல்வளச் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை சீனா வகுத்துள்ளது. இது வரை 6 சூழல் பாதுகாப்பு சட்டங்களும் 10 தொடர்புடைய மூலவள சட்டங்களும் 30க்கு அதிகமான சுற்றுசூழல் பாதுகாப்பு விதிகளும் சீனாவில் வகுக்கப்பட்டுள்ளன. சுற்றுசூழல் பாதுகாப்பு விதிகள் பற்றி 90க்கு அதிகமான ஆவனங்களும் 430 வகை தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு வரையறைகளும் 1020 உள்ளூர் சுற்று சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

சுற்றுசூழல் பாதுகாப்பு துறையிலான முதலீட்டை அதிகரிப்பது

1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு இறுதி வரை, சுற்றுசூழல் பாதுகாப்பு துறையில் மொத்தம் 36000 கோடி யுவானை சீனா முதலீடு செய்துள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் வெளியிடப்பட்ட நீண்ட கால வளர்ச்சி கடன் நிதியில் 4600 கோடி யுவான், சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படலாம். சுற்றுசூழல் தரத்தை மேம்படுத்துவது, உள் நாட்டின் தேவை விரிவாக்குவது மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவது ஆகிய துறைகளில் இது ஆக்கபூர்வமான பங்காற்றும்

சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஆதரவான பொது மக்களின் கருத்து அதிகரிப்பது

சுற்றுசூழல் பாதுகாப்பில் சமூகம் முழுவதும் கவனம் செலுத்தி வருகிறது. 1998ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை, தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் கல்வி அமைச்சகம் ஆகியவற்றால் 31 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரங்களைச் சேர்ந்த 139 மாவட்டங்களில் வாழ்கின்ற ஆயிரகணக்கான மக்களிடம் கள ஆய்வு நடத்தியதன் விளைவாக, சுற்றுசூழல் பாதுகாப்பு பிரச்சினை, சமூகம் கவனம் செலுக்கின்ற மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பதை கள ஆய்வு முடிவு காட்டுகிறது பொருப்பளிக்கப்பட்டு, பீகிங் பல்கலைகழகத்தின் தேசிய நிலை ஆய்வு மையம் 9 ஆண்டு கட்டாய கல்வியில் சுற்றுசூழல் பாதுகாப்புக் முக்கிய கல்வி இடம் பெறுகிறது. பசுமைப் பள்ளிகளையும் குடியிருப்பு பிரதேசங்களையும் நிறுவும் நடவடிக்கை, இப்போது சமூகத்தில் பெரும் நல்ல செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் சுற்றுசூழல் பாதுகாப்பில் ஈடுபடுவதற்கு சீனா ஊக்கம் அளிக்கிறது. சுற்றுசூழல் மாசுபடுத்தும் நடவடிக்கையை கண்டறிந்து பொது மக்கள் 12369 எனும் தொலை பேசி மூலம் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் தொடர்பு கொள்ளலாம். அதே வேளையில் நாள்தோறும் சீனாவின் 47 முக்கிய நகரங்களின் காற்று நிலை பற்றிய அறிக்கையும் வெளியிடப்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜூன் திங்கள் 5 ம் நாள் உலக சுற்றுசூழல் நாளை ஒட்டி முந்தைய ஆண்டின் சுற்றுசூழல் தரத்தின் அறிக்கையை சீன அரசு வெளியிடுகிறது.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040