|
![]() |
உலக சுற்றுசூழல் பொது உடன்படிக்கைகள்
சர்வதேச சுற்று சூழல் மற்றும் மூலவன பாதுகாப்பு லட்சியத்துக்கான பொறுப்புனர்வுக்கிணங்க, சீனா இது பற்றிய 30க்கு அதிகமான சர்வதேச பொது உடன்படிக்கைகளிலும் உடன்படிக்கைகளிலும் சேர்ந்துள்ளது அல்லது உருவாக்கியுள்ளது அவை வருமாறு.
கடல் எண்ணெய் மாசுகட்டுபாடு தடுப்பு பற்றிய சர்வதேச பொது உடன்படிக்கை, 1954ம் ஆண்டு லண்டன்.
மீன் பிடிப்பது மற்றும் பொது கடல் வாழ் உயிரினங்களை வளர்த்துப் பேணிக்கப்பது பற்றிய பொது ஒப்பந்தம்.----1958ம் ஆண்டு ஜெனிவா
சர்வதேச திமிங்கலப் பிடிப்பு கட்டுப்பாட்டு பொது ஒப்பந்தம்-----1946 வாஷிங்டன்
தென்கிழக்காசிய மற்றும் பசிபிக் மாக்கடல் தாவர பாதுகாப்பு உடன்படிக்கை-----1956, ரோம்
பிரத்தியேக கடல் எல்லை பற்றிய பொது ஒப்பந்தம்----1958 ஜெனிவா
தென் துருவ உடன்படிக்கை--------1959, வாஷிங்டன்
உலக வானிலை நிறுவனம் பற்றிய பொது ஒப்பந்தம்-------1947, வாஷிங்டன்
எண்ணெய் மாசுபாட்டினால்ஏற்பட்ட சிவில் வழக்கு பொறுப்பு பற்றிய சர்வதேச பொது ஒப்பந்தம்-------1969 பிரசல்ஸ்
உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுச்செல்வ பாதுகாப்பு பற்றிய பொது ஒப்பந்தம்-------1972 பாரிஸ்
நிலா மற்றும் கோள்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றிய உடன்படிக்கை-------1972,மாஸ்கோ
கிருமி உயிரினங்களின் மற்றும் நஞ்சு ஆயுதங்களின் வளர்ச்சி உற்பத்தி மற்றும் சேமிப்புகளைத் தடுப்பதும் ஒழிப்பதும் பற்றிய பொது ஒப்பந்தம்------1972 லண்டன்
கடலில் எண்ணெய் பொருட்கள் தவிர்ந்த பொருட்களால் மாசு ஏற்படும் போது பொது கடலில் தலையிடுவது பற்றிய உடன்படிக்கை முதற்குறிப்பு--------1973 லண்டன்
கப்பலால் ஏற்படு மாசு பற்றிய சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம்--------1978 லண்டன்
அணு பொருள் பாதுகாப்பு பற்றிய பொது ஒப்பந்தம்-----1979 வியன்னா
ஒசோன் பாதுகாப்பு பற்றிய வியன்னா பொது ஒப்பந்தம்-----1985 வியன்னா
அணு விபத்துக்கள் அல்லது கதிர்வீச்சு விபத்துக்களால் ஏற்படும் அவசர நிலைக்கு உதவிடும் பொது ஒப்பந்தம்------1985 வியன்னா
அணு விபத்துக்களை முன் கூட்டி அறிவிப்பது பற்றிய பொது ஒப்பந்தம்-----1986, வியன்னா
ஒசோன் பொருட்களைச் செலவிடுவது பற்றிய மான்ட்ரியல் உடன்படிக்கை ------1987, மான்ட்ரியல்
ஆசிய மற்றும் பசிபிக் மாக்கடல் நீர் வாழ்வன வளர்ப்பு பற்றிய மைய இணையத்தளம்-------1988 பாங்காக்
ஆபத்தான கழிவு பொருட்களை எல்லை கடத்தி இடமாற்றுவது மற்றும் கையாள்வது பற்றிய பார்ச்செயல் பொது ஒப்பந்தம்-----1989 பார்செயல்ஸ்
கால நிலை மாற்ற கட்டுக் கோப்பு பற்றிய ஐ நா பொது ஒப்பந்தம்-----1992 ரியோடிஜெநெரோ
பல்வகை உயிரினங்கள் பற்றிய பொது ஒப்பந்தம்-----1992 ரியோடிஜெரெரோ
வனப் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு பற்றி சீன மக்கள் குடியரசு மற்றும் சோவியத் சோஷலிச குடியரசு கூட்டணியின் உடன்படிக்கை----1980
பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை சூழல் பாதுகாப்பு பற்றிய சீன மக்கள் குடியரசு மற்றும் ஜப்பானிய நாட்டின் உடன்படிக்கை-----1981
பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை சூழ்நிலை பாதுகாப்பு பற்றிய சீன மக்கள் குடியரசு அரசாங்கம் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உடன்படிக்கை 1986
அணு ஆற்றலை அமைதி நோக்கிற்குப் பயன்படுத்துவது பற்றிய ஒத்துழைப்பு பற்றிய சீன மக்கள் குடியரசு மற்றும் பாக்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உடன்படிக்கை------1986
தவிர, சர்வதேச சுற்றுசூழல் மற்றும் மூலவள பாதுகாப்பு பற்றிய பல முக்கிய ஆவணங்களுக்கு சீனா ஆதரவு அளிக்கிறது. இந்த ஆவணங்களின் எழுச்சி சீனாவின் சட்டங்களிலும் கொள்கைகளிலும் இடம் பெற்றுள்ளது.
|