• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தைவான்]
தைவான்

புவியியல்

தைவான், தீவுகள் நிறைந்த மாநிலம். சீனப் பெருநிலப்பகுதியின் தென் கிழக்கில் இது அமைந்துள்ளது. மாநிலம் முழுவதிலும், தைவான் தீவு, பெங்கு தீவு என்ற இரண்டு பெரிய தீவுகளும், 80க்கு அதிகமான சிறு தீவுகளும் உள்ளன. இதன் மொத்த நிலப்பரப்பு 36 ஆயிரம் சதுரகிலோமீட்டராகும்.

தைவானின் வடக்கில், கிழக்கு சீனக் கடல் அமைந்துள்ளது. வட கிழக்கில், லியுச்சியூ தீவுக்கூட்டம் இருக்கின்றது. அதன் கிழக்கில் பசிபிக் மாகடல் உள்ளது. தெற்கில் பாஷி நீரிணை இருக்கின்றது. பிலிப்பைன்சுக்கு வடக்கே தைவான் அமைந்துள்ளது. மேற்கில் தைவான் நீரிணைக்கு அப்பால், புஜியான் மாநிலத்தை எதிர்நோக்குகின்றது. அவற்றுக்கிடையில் மிகவும் குறுகலாக 130 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கின்றது. தைவான் மாநிலம் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், மேற்கு பசிபிக் கடல் வழித்தடத்தின் மையத்தில் இது அமைந்துள்ளது.

தைவான் நீரிணை

தெற்கில் இருந்து வடக்காக தைவான் நீரிணை சுமார் 380 கிலோமீட்டர். அகன்ற இடத்தில் இதன் அகலம் 190 கிலோமீட்டர். தைவானின் Xinchu நகரிலிருந்து புஜியான் மாநிலத்தின் Pingtan வரை மட்டும் 130 கிலோமீட்டர். வானிலை தெளிவாக உள்ள நாட்களில், புஜியான் மாநிலத்தின் மலைகளின் உச்சியில் இருந்து தைவானின் வடபகுதியில் உள்ள ஜிலாங் மலையைக் காண முடியும்.

நிலவியல் அமைப்பு

தைவான் தீவு, சீனாவின் மிக பெரிய தீவாகும். இது தைவான் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 97 விழுக்காடாக உள்ளது. தைவான் தீவில், மூன்றில் இரண்டு பகுதி மலைகளாக உள்ளன. மீதியுள்ள பகுதி சமவெளி ஆகும். ஜோங்யாங் மலை, யுஷான் மலை, சுவேஷன் மலை, ஆலி மலை, தைதாங் மலை ஆகியவை, இத்தீவில் உள்ள ஐந்து முக்கிய மலை தொடர்களாகும். ஜோங்யாங் மலை, இத்தீவின் மையத்தில் அமைந்துள்ளது. யுஷான் மலை, இத்தீவிலேயே மிக உயரமானது. இதன் சிகரம் கடல் மடத்திலிருந்து 3997 மீட்டர் உயரத்தில் உள்ளது.

தைவான் தட்பவெப்ப நிலை மற்றும் உள்ளூர் பொருட்கள்

தைவான் வெப்பமண்டலப் பகுதியில் இருப்பதால், அங்கு தட்பவெப்ப நிலை ஆண்டு முழுவதும் ஓரளவு இதமாகவே உள்ளது. இத்தீவில் மலைப் பிரதேசங்களைத் தவிர, மற்ற இடங்களில் ஆண்டுக்கு சராசரி தட்பவெப்ப நிலை, 22 டிகிரி செல்ஷியஸ் ஆகும். இம்மாநிலம் முழுவதிலும், திடீர் திடீரென மழை பெய்கின்றது. புயலாலும் தைவான் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. பனிச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் கிலோமீட்டர் இடத்தில் உள்ளது.

தைவானின் காட்டு நிலப்பரப்பு, அதன் மொத்த நிலப்பரப்பில் 50 விழுக்காட்டுக்கு அதிகமாகும். இது ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருப்பதை விட ஒரு மடங்கு அதிகமாகும். ஐரோப்பாவில் ஸ்விட்சர்லாந்துக்கு "காட்டு நாடு" என்று பெயர். இக்காடுகளில், வெப்ப மண்டல தாவரங்கள், வெப்ப மண்டல உள்பகுதி தாவரங்கள், மித வெப்பத் தாவரங்கள், குளிர் தாவரங்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் தாவர வகைகள் உள்ளன. ஆசியாவின் தாவரப் பூங்கா என பொதுவாக கருதப்படும் தைவானில், ஐந்தில் நான்கு பகுதி காடுகள், வணிக நோக்கத்திற்காக வளர்க்கப்பட்டுள்ளன. தைவானில் கற்பூர மரங்கள் செழிப்பாக உள்ளன. இம்மரங்களிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் கற்பூரத் தைலம், தைவானின் சிறப்பு வணிகப் பொருட்களில் ஒன்றாகும். தைவானின் கற்பூரத் தைலத்தின் உற்பத்தி அளவு, உலகின் மொத்த உற்பத்தி அளவில் சுமார் 70 விழுக்காடாகும்.

தைவான், வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் சந்திக்கும் இடமாகும். தைவானைச் சூழ்ந்த கடலில் அதிகப்படியான கடல் வளப் பொருட்களும் 500க்கு அதிகமான மீன் வகைகளும் இருக்கின்றன. காவோஸியுங், ஜிலாங், சுவோ, ஹுவாலியன், சிங்காங், பெங்கு உள்ளிட்ட நகரங்கள், புகழ் பெற்ற மீன்பிடி பகுதிகளாகும். தவிர, தைவானில் உற்பத்தியாகும் கடல் உப்பு மிகவும் புகழ் பெற்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040