• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முக்கிய நகரங்கள்]
முக்கிய நகரங்கள்

தைபெய்

தைபெய் நகர், தைவான் தீவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தீவிலேயே மிக பெரிய நகர் இதுவாகும். இந்நகரின் நிலப்பரப்பு 272 சதுர கிலோமீட்டர். இதன் மக்கள் தொகை, 27 லட்சம். தைவானின் மொத்த மக்கள் தொகையில், இது எட்டில் ஒரு பகுதி.

தைபெய் நகர், தைவானில் தொழில் மற்றும் வணிக மையமாகத் திகழ்கிறது. பெரிய கூட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றின் தலைமையகங்கள் பெரும்பாலும் இந்நகரில் இருக்கின்றன. தைய்பே நகரை மையமாக கொண்டு, தைய்பே, Taoyuan, ஜிலாங் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய இந்த தீவின் மிக பெரிய தொழில் உற்பத்தி மற்றும் வணிகப் பகுதி உருவாயிற்று.

இதனிடையில், தைபெய் நகரம், தைவான் மாநிலத்தின் பண்பாடு மற்றும் கல்வி மையமாகவும் திகழ்கிறது. தைவான் பல்கலைக்கழகம், தைவான் செங்ச்சி பல்கலைக்கழகம், தைவான் ஆசிரியர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர் கல்வி நிலையங்கள் இந்நகரில் நிறுவப்பட்டுள்ளன. தவிர, இந்தத் தீவில் ஊடகங்களும், மிக பெரிய நூலகம் மற்றும் அருங்காட்சியகமும் இந்நகரில் உள்ளன.

ஜிலாங் மற்றும் தன்ஷு துறைமுகங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை இந்நகரம் கொண்டுள்ளது. சோங்ஷான் விமான நிலையம், தைவான் மாநிலத்தின் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமாகும்.

காவோஸியுங்

150 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய காவோஸியுங் நகரில், 14 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். தைவான் மாநிலத்தில், ஒரு முக்கிய தொழில் தளம் இதுவாகும். தைவானின் மிக பெரிய தொழில் நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக எண்ணெய் சுத்திகரிப்பாலை, இரும்புருக்கு ஆலை, கப்பல் கூடம் ஆகியன இங்கு நிறுவப்பட்டுள்ளன. மின்னணு, இயந்திரம், சிமென்ட், ரசாயன உரம், அலுமினியம், சர்க்கரை ஆகிய தொழிற்சாலைகளும் இந்நகரில் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றன. தைவானில் காவோஸியுங் ஒரு மீன்பிடி தொழில் தளமாகும். ஆழ்கடல் மீன்பிடி தொழில் இங்கு மிகவும் செழிப்பாக உள்ளது.

இந்நகரில் வளர்ச்சி அடைந்த கடல், தரை மற்றும் விமானப் போக்குவரத்து தொடரமைப்பு உண்டு. இது, காவோஸியுங் நகரின் மேம்பாடுகளில் ஒன்றாகும். காவோஸியுங் நகரில், 10 ஆயிரம் டன் எடை உடைய 38 கப்பல்களை நிறுத்தலாம். ஹாங்காங், சிங்கப்பூர், நெதர்லாந்து நாட்டின் Rotterdam ஆகியவற்றை அடுத்து, இத்துறைமுகம் கையாளும் திறன் நான்காவது இடத்தில் உள்ளது. காவோஸியுங் விமான நிலையத்தின் சேவையில், சர்வதேச சேவை, உள்ளூர் சேவை ஆகிய இரு வகைகள் அடங்கும். தைய்பே இலிருந்து காவோஸியுங் வரை விமானத்தில் பறக்க 40 நிமிடங்கள் ஆகின்றன. தொடர் வண்டி அல்லது பேருந்தில் 4 மணி நேரம் ஆகின்றது.

அழகான காவோஸியுங் நகரில், கோடைகாலம் நீண்டதாகவும் குளிர்காலம் குறுகியதாகவும் உள்ளது. ஆண்டு முழுவதிலும் வெப்பமண்டலக் காட்சிகள் காணப்படுகின்றன.

மாநில ஆட்சியின் கீழுள்ள ஐந்து நகரங்கள்

Taizhong

தைவான் தீவின் மேற்கு பகுதியில் உள்ள Taizhong நகர், தைவான் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். பண்பாடு, கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் இந்த நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது. தைய்பே நகரை அடுத்து, இந்நகரில் உள்ள உயர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை இரண்டாவது இடம் வகிக்கின்றது. இதனிடையே, Taizhong நகர், தைவானின் புத்த மதப் பண்பாட்டின் மையமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் புத்த மத மாநாடு இங்குள்ள பாவ்ஜியு கோயிலில் நடைபெறுகின்றது. Taizhong, தைவானிலேயே மிக சுத்தமான நகர் என போற்றப்படுகின்றது.

தைனான்

தைவான் தீவின் தென் மேற்கு கரையில் அமைந்துள்ள தைனான் நான்காவது பெரிய நகரம். தைவானில் மிகவும் பழம் பெரும் நகரமுமாகும். தைய்பே, மாநிலத் தலைநகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், தைனான் நீண்டகாலமாக இம்மாநிலத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையமாக இருந்தது. தைனான் நகரில், சுற்றுலா கவர்ச்சிகள் அதிகம். சிச்சியான்லு, பழம் பெரும் அன்பிங் கோட்டை மற்றும் Zheng Chenggongயின் மூதானதயர் கோயில் இவற்றில் அடங்கும். இந்நகரில் மதச் சூழ்நிலை கோலாகலமானது. 200க்கு அதிகமான கோயில்களும் தேவாலயங்களும் இங்கு இருக்கின்றன. இந்நகரில் அதிகப்படியான புத்த மத மற்றும் தாவோ நம்பிக்கையாளர்களை தவிர, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையாளர் பலர் இருக்கின்றனர்.

ஜிலாங்

கிழக்கு சீனக் கடலை நோக்கி, தைவான் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள ஜிலாங், ஒரு துறைமுக நகராகும். மலைகள் சூழ்ந்துள்ள இந்நகரம், துவக்க நிலையில் வளர்ச்சியுள்ள பிரதேசங்களில் ஒன்று என கருதப்படுகின்றது. இந்நகரில், போக்குவரத்து வசதிகள், கப்பல் கட்டுவது, வேதியியல், நிலக்கரி, நீர் வாழ் உயிரினங்களின் பதனீடு ஆகிய தொழில்கள் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றன. முக்கிய மீன்பிடி துறைமுகமாக, ஜிலாங் நகரின் மீன்பிடி அளவு, இம்மாநிலத்தின் மொத்த அளவில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியாகும். ஆண்டுதோறும் 200 நாட்களுக்கும் மேல் மழை பெய்வதால், இந்நகர், "மழை துறைமுகம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

Xinzhu

Xinzhu, தைவான் தீவின் மேற்கு கரையில் உள்ள ஒரு முக்கிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நகராகும். புகழ் பெற்ற சிங்குவா பல்கலைக்கழகம், போக்குவரத்து பல்கலைக்கழகம், தைவானின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என போற்றப்படும் அறிவியல் மற்றும் தொழில் பூங்கா ஆகியவை Xinzhu நகரில் நிறுவப்பட்டுள்ளன.

Jiayi

தைவானில் உள்ள மிக பெரிய நீர்த்தேக்கமான Zengwen அணை, Jiayi மாவட்டத்தில் கட்டப்பட்டது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040