• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வரலாறு]
தைவான் தீவின் வரலாறு

தைவான் தீவு அகழ்வு வரலாறு

நிலவியல் அமைப்புப் படி, தைவான் தீவு முன்பு சீனப் பெருநிலப்பகுதியுடன் இணைந்தே தான் இருந்தது. கண்டங்கள் நகர்ந்த போது, தைவான் தீவுக்கும் சீனப் பெருநிலப்பகுதிக்கும் இடையிலான நிலம் மூழ்கி, இறுதியில் கடல் பெருக்கத்தால் சூழப்பட்டது. தைவானின் வரலாற்றுக்கு முந்தைய பண்பாட்டுக்கும், சீனப் பெருநிலப்பகுதி பண்பாட்டுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை, தைவானில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள கல்பாண்டங்கள், கருப்பு மண் பாண்டம் மற்றும் சிவப்பு நிறமண்பாண்டங்கள் உள்ளிட்ட சின்னங்கள் காட்டுகின்றன.

பண்டைய ஆவணங்களின் படி, 230ஆம் ஆண்டில், ஜெனரல் வெய் வென் மற்றும் சுகே சி தலைமையில், 10 ஆயிரம் கடல் படைவீரர்கள் அடங்கிய ஒரு கடல்பயணக் குழுவை தைவானுக்கு வு நாட்டின் பேரரசர் சுன் சுவான் அனுப்பினார். தைவான் தீவில் சீனப் பெருநிலப்பகுதி மக்கள் நடத்திய முதல் ஆய்வு அதுவாகும். 6வது நூற்றாண்டின் இறுதி வரை, உள்ளூர் பழக்க வழக்கங்களைக் கண்டறிந்து, உள்ளூர் மக்களுடன் மேலும் நெருங்கிய உறவை உருவாக்கும் பொருட்டு, சுயி வமிச பேரரசர் யாங் குவாங் மூன்று தடவை அதிகாரிகளை தைவானுக்கு அனுப்பியிருந்தார். Tang வமிசம் முதல், Song வமிசம் வரையான 600 ஆண்டுகளில், தென் கிழக்கு சீனாவின் கடலோர நகர்களில் குறிப்பாக Quanzhou மற்றும் Zhangzhouயில் வாழ்ந்த அதிகப்படியான குடிமக்கள், போரின் அபாயங்களில் இருந்து தப்பிக்க, தைவானுக்கு குடிபெயர்ந்தனர். 1335ஆம் ஆண்டில், யுவான் வமிசத்தின் ஆட்சியின் போது, இப்பிரதேசத்தை நிர்வாகம் செய்வதற்காக ரோந்துப்படையும், கண்காணிப்பு நிலையமும் பெங்குவில் நிறுவப்பட்டது. அதிலிருந்து அடுத்தடுத்து வந்த பின், அரசுகள் தைவானில் நிர்வாக அமைப்புகளை நிறுவும் ஒரு பழக்கம் துவங்கியது.

தைவானில் காலனியாதிக்கத்திற்கு Zheng Cheng Gong முடிவு கட்டினார்

Ming வமிசம் முதல், சீனப் பெருநிலப்பகுதிக்கும் தைவான் மாநிலத்துக்கும் இடையே மேலும் அதிகமான தொடர்புகள் மேற்கொண்டுள்ளன. 15வது நூற்றாண்டில் புகழ் பெற்ற கடலோடி Zheng Heயின் தலைமையில், ஒரு பெரிய கப்பல் குழு தென்னாசிய நாடுகளில் பயணம் செய்தது. வழியில், தைவானில் தங்கியிருந்து, கைவினை பொருட்களையும் வேளாண் பொருட்களையும் அங்கு வாழ் மக்களுக்கு அன்பளிப்பாக Zheng He வழங்கினார்.

1628ஆம் ஆண்டில், புஜியான் மாநிலத்தில், கடும் வறட்சி நிகழ்ந்தது. புஜியானினர் Zheng Zhilongயின் ஏற்பாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் தைவானுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது முதல், தைவான் பெரும் வளர்ச்சி காலத்தில் சேர்ந்தது.

16வது நூற்றாண்டின் நடுப்பகுதி முதல், அழகும் வளமும் மிக்க தைவான் தீவை, மேலை நாட்டு காலனியாதிக்கசக்திகள் குறிவைத்தனர். ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட வல்லரசுகள் தைவான் மீது படையெடுத்தன. 1642ஆம் ஆண்டில், தைவானின் வடபகுதியில் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைகளை தெதர்லாந்து கைப்பற்றி, தைவானை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

காலனியாதிக்க ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தைவான் மக்கள் ஈடுபட்டனர். 1662ஆம் ஆண்டில், தேசிய நாயகன் Zheng Chenggong, நெதர்லாந்தை தோற்கடித்து, தைவான் மீதான நீண்டகால காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டினார். ஆனால், இப்போராட்டம் வெற்றி பெற்ற சிறிது காலத்தில், Zheng Chenggong நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். அதற்கு பின், அவரின் மகன் Zheng Jing மற்றும் பேரன் Zheng Keshuang 22 ஆண்டுகளாக தைவானில் நிர்வாகம் செய்தனர். Zheng குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் ஆட்சியில், தைவானின் பொருளாதாரமும் பண்பாடும் விரைவாக வளர்ச்சியடைந்தன. சர்க்கரை மற்றும் உப்பு தயாரிப்பு தொழில் செழிப்பாக இருந்தது. தொழில் மற்றும் வணிகம் விரைவாக வளர்ச்சியுற்றது. பள்ளிகள் நிறுவப்பட்டன. Gaoshan இன மக்களின் வேளாண் உற்பத்தி முறை மேம்படுத்தப்பட்டது. தைவானின் வளர்ச்சி வரலாற்றில், இது முக்கிய காலகட்டமாகும். இது "Ming-Zheng காலம்" என அழைக்கப்படுகின்றது.

Qing வமிசத்தின் துவக்கத்தில், தைவான் மாநிலம் சீனாவின் வரைபடத்தில் இடம்பெறுகின்றது

1683ஆம் ஆண்டு, Qing வமிச பேரரசர் Kangxi ஆட்சி புரிந்த 22ஆம் ஆண்டாகும். Qing வமிச அரசு தைவான் மீது தாக்குதல் தொடுத்து, Qing வமிச அரசிடம் Zheng Keshuang சரணடைந்தார். தைவான், புஜியான் மாநிலத்தைச் சேர்ந்தது. இதில் ஒரு தலைநகரும் மூன்று மாவட்டங்களும் அடங்கும். மத்திய அரசின் ஆட்சியின் கீழே திரும்பிய பின், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளில், சீனப் பெருநிலப்பகுதியுடனான தைவானின் தொடர்பு வலுப்படுத்தப்பட்டது.

1885ஆம் ஆண்டு, Qing வமிச பேரரசர் Guangxu ஆட்சி புரிந்த 11வது ஆண்டாகும். அரசு தைவானை ஒரு மாநிலமாக மாற்றியது. Liu Ming Chuan தைவானின் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். தைவானில் சமூகம், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு Fujian மற்றும் Guangdong மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதவிக்காலத்தில், அகழ்வுப்பணி ஆணையம், தந்தி சேவை குழு, இருப்புப்பாதை குழு, படைக்கலக் குழு, வணிகக் குழு, நிலக்கரி மற்றும் எண்ணெய் குழு ஆகியவை நிறுவப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில், மின் கம்பிகள் போடப்பட்டன. அஞ்சல் சேவை துவங்கியது. இருப்புப்பாதைகள் போடப்பட்டன. கனிமப் பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. வணிக கப்பல்கள் கட்டப்பட்டன. தொழிலும் வணிகமும் வளர்ச்சியடைந்தன. இதனிடையில், கல்வியை பரவலாக்குவதில் உள்ளூர் அதிகார வட்டாரங்கள் மிகவும் கவனம் செலுத்தின. அவற்றின் முயற்சியுடன், மேலை நாட்டு கல்வியை வழங்கிய பள்ளிகளும் பாராம்பரிய சீன பள்ளிகளும் திறந்து வைக்கப்பட்டன.

ஜப்பானின் காலனியாதிக்கக் காலகட்டம்

19வது நூற்றாண்டின் பிற்பகுதியில், Meiji Restoration மூலம், ஜப்பான் வளர்ச்சியுற்று வந்தது. 1894ஆம் ஆண்டில், சீனா மீதான போரை ஜப்பான் தொடுத்தது. 1895ஆம் ஆண்டில், தோல்வியடைந்த Qing வமிச அரசு Shimonoseki ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டியிருந்தது. தைவான் மற்றும் பெங்கு தீவுகள் ஜப்பானுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டன. அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக, தைவான், ஜப்பானின் காலனியாதிக்க ஆட்சியின் கீழே இருந்தது.

ஜப்பானின் ஆக்கிரமிப்பின் போது, அம்மாநிலத்தை ஆட்சி புரியும் பொருட்டு, ஆளுநர் அலுவலகம் தைய்பேவில் நிறுவப்பட்டது. அம்மாநிலத்தின் இதர பிரதேசங்களில், மாவட்ட அலுவலகங்கள் நிறுவப்பட்டன. குடும்ப பதிவு அமைப்பு முறை மீது ஜப்பான் கண்டிப்பான கட்டுப்பாட்டை விதித்தது. காலனியாதிக்க ஆட்சியின் துவக்கத்தில், ஜப்பானின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக, வேளாண் உற்பத்தி பொருட்களைப் பதனிடுவதை முக்கியமாக கொண்ட வேளாண்மை தளமாக தைவானை ஜப்பான் கொண்டது. இதன் காரணமாக, தைவானின் பதனீட்டுத் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக வளர்ச்சியுற்று வந்தன. இரண்டாவது உலக போரின் போது, தைவானில் ராணுவம் தொடர்பான பல்வேறு தொழிற்துறைகளை ஜப்பான் வளர்த்தது.

மீட்டல் மற்றும் பிரிவினை

1945ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15ஆம் நாள் Potsdam பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதாக ஜப்பான் அறிவித்து நிபந்தனையின்றி சரணடைந்தது. அக்டோபர் 25ஆம் நாள், தைய்பேவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஜப்பான் சரணடைவதை சீன அரசு ஏற்றுக்கொண்டது. தைய்பேவில் ஜப்பானிய காலனியாதிக்க ஆட்சி முடிவுக்கு வந்ததை இது காட்டுகின்றது. ஆனால், அதற்குப் பின், சீன Kuomingtang அரசின் சீர்கேடு, அடக்குமுறை, நாகரிகமற்ற ஆட்சி ஆகியவற்றால் உள்ளூர் மக்கள் மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டனர். 1947ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் 28ஆம் நாள், சீர்கேட்டு அதிகாரவர்க்கத்துக்கு எதிரான போராட்டம் துவங்கியது. Kuomingtang அரசு படையினர்களைத் திரட்டி, தைவான் மக்களை சுட்டது. இதில் 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லது காயமுற்றனர். இது பிப்ரவரி 28 நிகழ்ச்சி என அழைக்கப்படுகின்றது.

1949ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன மக்கள் Kuomingtang அரசைக் கவிழ்த்து, சீன மக்கள் குடியரசை நிறுவி, Chiang Kai-shek போரில் தோல்வியடைந்து, Kuomingtang கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்களுடன் தைவானுக்கு தப்பி ஓடினார். அமெரிக்காவின் ஆதரவுடன், Kuomingtang அரசு தைவான் மாநிலத்தின் மீதான ஆட்சியை நிலைநிறுத்த முயன்று, தைவானை பெருநிலப்பகுதியிலிருந்து மீண்டும் பிரித்தது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040