• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தைவான் பிரச்சினையின் தோற்றம்]
தைவான் பிரச்சினையின் தோற்றம்

இரண்டாவது உலக போருக்கு பின், சட்டப்படியாகவும், உண்மையாகவும், தைவான் சீனாவுக்கு திரும்பியது. அதன் பிறகே, தைவான் பிரச்சினை தோன்றியது. Kuomintang கட்சி தொடுத்த உள் நாட்டுப் போருடம், குறிப்பாக, அந்நிய சக்தியின் தலையீடுமே இதற்குக் காரணம்.

தைவான் பிரச்சினை மற்றும் உள் நாட்டுப் போர்

இரண்டாவது உலக போரின் போது, ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய கூட்டணியை சீன Kuomintang கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாக்கின. ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின், அமெரிக்காவின் ஆதரவுடன், Chiang Kai-Shek தலைமையில், Kuomintang கட்சி பலவகைகளில் உள் நாட்டுப் போரைத் தொடுத்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், மூன்று ஆண்டுகால விடுதலை போரின் மூலம், Kuomintang கட்சி நிறுவிய சீன குடியரசை சீன மக்கள் கவிழ்த்தனர். 1949ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவபட்டது. இது, முழு சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓரே ஒரு சட்டப்பூர்வ அரசாகும். Kuomintang கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தைவானுக்கு தப்பி ஓடினார்கள். அமெரிக்க அரசின் ஆகரவுடன், தைவானை சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து அவர்கள் பிளவுப்படுத்தினர்.

தைவான் பிரச்சினையில் அமெரிக்க அரசின் பங்கு

இரண்டாவது உலக போர் முடிவுக்கு வந்ததும், உலகில் மேலை உலகம் என்றும், கீழை உலகம் என்றும் இரண்டு முகாம்கள் உருவாகின. தம் நலனைப் பேணிகாப்பதற்காக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிக்க, அமெரிக்க அரசு பணம், ஆயுதங்கள் மற்றும் படைவீரர்களை வழங்கி, Kuomintang அரசு உள் நாட்டுப் போரில் ஈடுபட ஆதரவு கொடுத்தது. ஆனால், இறுதியில் அமெரிக்க அரசு தோல்வி அடைந்தது.

1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், அமெரிக்க அரசு, நவ சீனாவைத் தனிமைப்படுத்தி அடக்க முயன்றது. 1950ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கொரியப் போர் மூண்ட பின், தைவானை விடுவிக்கும் சீனாவின் முயற்சியை அமெரிக்கா தடை செய்ததால், சீனாவின் உள் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாக சீன அரசு அறிவித்தது. 1950ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 7வது கடற்படை அணி தைவான் நீரிணையில் நுழையவும், 13வது விமானப் படை அணி தைவான் தீவில் நிறுத்தவும் அன்றைய அமெரிக்க அரசு தலைவர் Truman கட்டளையிட்டார். 1954ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், அமெரிக்காவும் தைவான் அதிகார வட்டாரமும் வாஷிங்டனில் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அமெரிக்காவின் பாதுகாப்பில் தைவான் வைக்கப்பட்டது. அமெரிக்க அரசு சீனாவின் உள் விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு, தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடையே நீண்டகாலப் பதற்ற நிலைமைக்கு வழிகாட்டியது. அதற்கு பின், தைவான் பிரச்சினை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முக்கிய சர்ச்சையாக மாறியது.

சர்வதேச நிலைமையின் மாற்றம், நவ சீனாவின் வளர்ச்சி ஆகியவற்றுடன், சீனாவைப் பொறுத்த பகைமை கொள்கையை அமெரிக்கா சரிப்படுத்தத் துவங்கியது. இரு நாட்டுறவில் பதற்றம் தணியும் போக்கு காணப்பட்டது. 1971ஆம் ஆண்டின் அக்டோபர் திங்களில் ஐ.நா.வின் 26வது பேரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 2758வது தீர்மானத்தின் படி, சீன மக்கள் குடியரசின் அரசாங்கம், சீன மக்கள் அனைவரையும் பிரதிநிதிப்படுத்தும் ஓரே ஒரு சட்டப்பூர்வ அரசாங்கம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு பின், ஐ.நா.வில் சேர தைவான் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்களில், அமெரிக்க அரசு தலைவர் Nixon சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீனாவும் அமெரிக்காவும் ஷாங்காயில், கூட்டறிக்கையை வெளியிட்டன. உலகில் ஒரே சீனா தான் உண்டு. தைவான், பிரிக்க முடியாத சீனாவின் ஒரு பகுதியாகும் என்று கூட்டறிக்கையில் அமெரிக்கா வலியுறுத்தியது.

1978ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், சீன அரசு முன்வைத்த, தூதாண்மை உறவை உருவாக்குவது பற்றிய மூன்று கோட்பாடுகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. தைவான் அதிகார வட்டாரத்துடன் உறவை துண்டித்து, பாதுகாப்பு ஒப்பந்தத்தை நீக்கி, தைவான் தீவில் நிறுத்தப்பட்ட படைவீரர்களை வெளியேறுமாறு அமெரிக்காவை சீனா கோரியது. 1979ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், சீனாவும் அமெரிக்காவும் அதிகாரப்பூர்வ தூதாண்மை உறவை உருவாக்கின. மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளில், சீன மக்கள் குடியரசு, சீனாவைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வ அரசாங்கம் என்று அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்க மக்கள் தைவான் மக்களுடன், பண்பாடு, வணிக மற்றும் இதர அதிகாரப்பூர்வமற்ற உறவை நிலைநிறுத்துவார்கள். உலகில் ஓரே ஒரு சீனா தான் உண்டு. தைவான், சீனாவின் உரிமை பிரதேசத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும் என்பதை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது.

ஆனால், சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 3 திங்களுக்கு பின், "தைவானுடனான உறவு பற்றிய சட்டம்" என்ற ஒரு சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமெரிக்க அரசு தலைவர் இச்சட்டத்தில் கையொப்பமிட்டார். இச்சட்டத்தில், மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் பல விதிகள் இடம்பெறுகின்றன. இச்சட்டத்தின் படி, தைவானுக்கு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விற்பனை செய்து, தைவான் சீனாவுக்கு திரும்புவதை தடை செய்தது.

தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்யும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, சீன-அமெரிக்க அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. 1982ஆம் ஆண்டில், சீன-அமெரிக்க ஆகஸ்ட் 17 கூட்டறிக்கையை இரு தரப்புகளும் வெளியிட்டன. தைவானுக்கு நீண்டகாலத்திற்கு ஆயுத விற்பனை செய்யும் கொள்கையை அமெரிக்க அரசு நாடாது என்றும், தைவானுக்கு விற்பனை செய்யும் ஆயுதங்களின் அளவும் தரமும் சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆயுதங்களை விட அதிகம் இல்லை என்றும், தைவானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா படிப்படியாக குறைத்து, காலப்போக்கில், இறுதி உடன்பாடு காண விரும்புவதாகவும் இந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

இருந்த போதிலும், ஆகஸ்ட் 17 கூட்டறிக்கையின் விதிகளை அமெரிக்க அரசு கடைப்பிடிக்க வில்லை. 1992ஆம் ஆண்டின் செப்டம்பரில், அமெரிக்க அரசு தைவானுக்கு 150 F-16 போர் விமானங்களை விற்பனை செய்தது. அமெரிக்க அரசின் இச்செயல், சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கும், தைவான் பிரச்சினையின் தீர்வுக்கும் புதிய தடையை உருவாக்கியது.

இதனால், தைவான் பிரச்சினை இது வரை தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்க அரசே பொறுப்பேற்க வேண்டும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040