• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றிய சீன அரசின் அடிப்படை கோட்பாடுகள்]
தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றிய சீன அரசின் அடிப்படை கோட்பாடுகள்

தைவான் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, சீன அரசு பின்பற்றும் அடிப்படை கோட்பாடு, "சமாதான ஒன்றிணைப்பு" மற்றும் "ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்" என்பதாகும்.

1950ஆம் ஆண்டுகளில், சமாதான முறையில் தைவான் பிரச்சினையைத் தீர்க்க சீன அரசு பாடுபட்டது. 1979ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி, "தைவான் உடன்பிறப்புக்கு ஒரு செய்தியை" வெளியிட்டது. தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடையே ராணுவப் பகைமையை முடித்து கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நாட்டின் ஒன்றிணைப்பு நிறைவேறும் போது, தைவானின் தற்போதைய சமூக-பொருளாதார அமைப்பு முறை மாறாது என்றும் அது கூறியது.

1981ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் 30ஆம் நாள், தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் முன்னாள் Ye Jian Ying உரை நிகழ்த்துகையில், தைவான் பிரச்சினையின் தீர்வு தொடர்பான கோட்பாடு மற்றும் கொள்கையை மேலும் விளக்கிக்கூறினார். நாட்டின் ஒன்றிணைப்பு நிறைவேறிய பின், ஒரு சிறப்பு நிர்வாக பிரதேசமாக, உயர் நிலை தன்னாட்சி உரிமையை தைவான் அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார்.

1982ஆம் ஆண்டு, இந்த உரை தொடர்பான மேலும் ஒரு விளக்கத்தை மரணமடைந்த சீனத் தலைவர் Deng Xiao Ping அளித்தார். "ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்" எனும் கொள்கையை சீனா கடைப்பிடிக்கின்றது. மிகவும் குறிப்பாக, நாட்டின் ஒன்றிணைப்பு நிகழ்வதற்கு ஒரு முன்நிபந்தனையாக, சீனப் பெருநிலப்பகுதியில் சோஷலிச முறையும், தைவானில் முதலாளித்துவ முறையும் தொடரும் என்று அவர் கூறினார்.

1992ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் 12ஆம் நாள், "சமாதான ஒன்றிணைப்பு", "ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்" ஆகிய கோட்பாடுகளில் நாங்கள் உறுதியாக நின்று, தாய்நாட்டின் ஒன்றிணைப்புக்காக உறுதியாகப் பாடுவோம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முன்னாள் தலைவர் Jiang Ze Min கூறினார்.

"சமாதான ஒன்றிணைப்பு" "ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்" என்ற கோட்பாடுகளின் அடிப்படை உள்ளடக்கம்

தைவான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சீன அரசின் "சமாதான ஒன்றிணைப்பு" "ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்" ஆகிய கோட்பாடுகளின் அடிப்படை உள்ளடக்கம்:

  

ஒன்று. ஒரே ஒரு சீனா. உலகில் ஓரே ஒரு சீனா தான் உண்டு. தைவான், சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். சீன மத்திய அரசு பெய்ஜிங்கில் இருக்கின்றது. தைவான் பிரச்சினையை சமாதான முறையில் தீர்ப்பதற்கான முன்நிபந்தனை இதுவாகும்.

இரண்டு. இரண்டு அமைப்பு முறைகள் கூட்டாக நிலவுவது. ஒரே சீனா என்ற முன்நிபந்தனையில், சீனப் பெருநிலப்பகுதியின் சோஷலிச முறையும், தைவானின் முதலாளித்துவ முறையும் இணைந்திருந்து, ஒன்றை இன்னொன்று அழித்து விடாமல் நீண்டகாலத்திற்கு ஒன்றாக வளர்ச்சியடைய முடியும்.

மூன்று. உயர் நிலை தன்னாட்சி. ஒன்றிணைப்புக்குப் பின், தைவான் ஒரு சிறப்பு நிர்வாக பிரதேசமாக மாறும். உயர் நிலை தன்னாட்சி உரிமையை தைவான் அனுபவிக்கும். சீனாவின் இதர மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது இது வேறுபட்டதாக இருக்கும்.

நான்கு. சமாதான பேச்சுவார்த்தை. சமாதான ஒன்றிணைப்பை அடைவதற்கு முன்பு, பரஸ்பரம் மதிப்பு அளித்து, பயனடையும் அடிப்படையில், இரு தரப்புகளும் பொருளாதார ஒத்துழைப்பையும் இதர பல்வேறு தொடர்புகளையும் பெருக்க வேண்டும். இது தைவானின் சமூக-பொருளாதார உறுதிப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் வகைசெய்து, சீனா முழுவதும் புத்தெழுச்சியையும் வளத்தையும் மேம்படுத்தும்.

சீனாவின் சமாதான ஒன்றிணைப்பு லட்சியத்தை விரைவுபடுத்துவதற்கான எட்டம்ச யோசனைகள்

1995ஆம் ஆண்டின் ஜனவரி 30ஆம் நாள், அரசு தலைவர் Jiang Ze Min முக்கிய உரை நிகழ்த்துகையில், தாய்நாட்டின் சமாதான ஒன்றிணைப்பை அடைவதற்கான எட்டம்ச யோசனைகளை முன்வைத்தார்.

முதலாவது, ஒரே சீனா எனும் கோட்பாட்டில் உறுதியாக நிற்பது, சமாதான ஒன்றிணைப்புக்கு அடிப்படையான முன்நிபந்தனையாகும்.

இரண்டாவது, தைவான் மாநிலம், இதர நாடுகளுடன் அரசு சாரா பொருளாதார மற்றும் பண்பாட்டு தொடர்பை வளர்ப்பதை சீனப் பெருநிலப்பகுதி எதிர்க்காது. எனினும், "இரண்டு சீனாக்கள்", அல்லது "ஒரு சீனா, ஒரு தைவானை" உருவாக்குவதை நோக்கமாக கொண்ட, "உலகளாவில் தனது இருப்பை விரிவாக்கும்" தைவானின் நடவடிக்கையை சீனப் பெருநிலப்பகுதி எதிர்க்கும்.

மூன்றாவது, தாய்நாட்டின் சமாதான ஒன்றிணைப்பு பற்றி இரு கரைகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெறும்.

நான்காவது, சீனப் பெருநிலப்பகுதி, தாய்நாட்டின் சமாதான ஒன்றிணைப்புக்காக பாடுபட வேண்டும். சீனர்கள், தங்களது சீனச் சகோதரர்களை எதிர்த்து போரிடக்கூடாது.

ஐந்தாவது, ஒட்டுமொத்த சீன நாட்டின் நலனுக்காக, இரு கரைகளின் வளத்தை மேம்படுத்த, தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடையே பொருளாதார தொடர்பையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த பாடுபட வேண்டும்.

ஆறாவது, தைவான் நீரிணையின் இரு கரைகளில் வாழும் மக்கள், அற்புதமான சீன பண்பாட்டின் நேர்த்தியான பாரம்பரியத்தை மரபு வழி பெற்று, கொண்டு செலுத்த வேண்டும்.

ஏழாவது, தைவான் உடன்பிறப்புகளின் வாழ்க்கை முறையையும், நாட்டின் உரிமையாளராக மாறும் விருப்பத்தையும் சீனப் பெருநிலப்பகுதி முழுமையாக மதித்து, அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காக்க வேண்டும்.

எட்டாவது, தைவான் அதிகார வட்டாரத்தின் தலைவர்கள், உரிய முறையில், சீனப் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொள்வது வரவேற்கப்படுகின்றது. தைவான் தரப்பின் அழைப்பை ஏற்று, தைவானில் பயணம் செய்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அரசு விவகாரம் பற்றி நாங்கள் விவாதித்து, சில பிரச்சினைகள் குறித்து முதலில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040