• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சின்ச்சியாங்கில் தேசிய இனங்கள்]
உய்கூர் இனம்

உய்கூர் இனம் வடக்கு சீனாவிலுள்ள ஒரு மிக பழமையான தேசிய இனமாகும். விவூர் என்பது விவூர் மொழியில் ஒற்றுமை அல்லது ஒன்றுபடுவது என்பதாகும். உய்கூர் இனம் சின்ச்சியாங்கில் முக்கிய தேசிய இனமாகும். இதன் மக்கள் தொகை 70 இலட்சம் ஆகும். பெரும்பாலோர் தியேன் சான் சான்மலைக்கு தெற்கிலுள்ள காஷ், ஹோ தியேன், ஆக்சு ஆகிய இடத்தில் வசிக்கின்றனர். சொந்த மொழியும் எழுத்துக்களும் உண்டு.

உய்கூர் இன மக்கள் அனைவரும் 4 பக்கமுடைய தொப்பி அணிகின்றனர். ஹா பான் எனும் நீண்ட சட்டையை ஆண்கள் அணிக்கின்றனர். சட்டையின் உள்ளே அழகான பூவேலைப்பாடுடன் கூடிய குட்டையான உள்ளாடை இருக்கின்றது. பெண்கள் நீண்ட பாவாடையை விரும்புகின்றனர். வெளியே கறுப்பு நிறமுடைய கையில்லாத ரவிக்கை இருக்கின்றது. கடுக்கண்கள், காப்பு, மோதிரம், சங்கிலி ஆகியவை அணிகின்றனர். மங்கையர்கள் கூந்தல் பின்னி சடை போடுகின்றனர். இவை எல்லாம் பாரம்பரிய அணி கலன்களாகும். தற்போது, நகரங்களில் உய்கூர் இன மக்கள் மேலை நாட்டுப் பாணி உடைகளையும் அணிகின்றர்.

உய்கூர் இன மக்கள் மரியாதையானவர்கள், முதியோர், நண்பர்கள் ஆகியோரைச் சந்திக்கும் போது, அவர்கள் வழக்கமாக வலது கையை மார்பு நடுவில் வைத்து, உடல் குனித்து, வணக்கம் தெரிவிக்கின்றனர். விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் இனம் இதுவாகும்.

உய்கூர் இனம் ஆடல்பாடலில் தேர்ச்சி பெற்ற இனமாகும். உய்கூர் இனத்தின் நடனம் மிகவும் அழகானது. விரைவான சுற்று, அதிக மாற்றங்கள் ஆகியவை இதன் தனிச்சிறப்பாகும். இத்தகைய நடனம் விவூர் இன மக்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.

வேளாண் தொழிலில் முக்கியமாக, கால்நடை வளர்ப்பு வளற்ப்புத்தொழில், வணிக தொழில் முதலியவற்றில் உய்கூர் இன மக்கள் ஈடுபடுகின்றனர். விவூர் இனத்தின் கைவினை உற்பத்தி பொருட்கள் அதிகமானவை. உயர தரமுடையவை. கம்பளம், தையல், பட்டு ஆடை பொருள், கட்டி, தேசிய இன இசை கருவி முதலியவை தனிப்பட்ட தேசிய இன பாணியுடையன.

(உய்கூர் மங்கையர்)

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040