• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சின்ச்சியாங்கின் சுற்றுலா மூலவளம்]
 

பழைய லோ லான் நகர்

பழைய லோ லான் நகர் தென் சின்ச்சியாங் ரோபூபோவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பட்டுப் பாதையின் முக்கிய இடமாக திகழ்ந்திருந்தது. தற்போது, இது மணல், யாதன் நில அமைப்பு, கடினமான உப்பு ஓடு ஆகியவற்றினால் சூழப்பட்டு, பாழ்பட்டு ஆபக்தானகார இருக்கின்றது. மனிதர்கள் இங்கே வருவதில்லை.

ஆனால் வரலாற்று பாட நூலின் படி, கி.மு.200 ஆண்டுகளுக்கு முன், லோ லான் மேற்கு சீனாவின் மிக வளர்ந்த பிரதேசமாகும். செழுமை அடைந்து 500, 600 ஆண்டுகளுக்கு பின் லோ லான் நகர் திடீரென்று காணாமல் போனது ஏன்? இந்த நகர் எவ்வாறு காணாமல் போனது, சீன மற்றும் வெளிநாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களின் கவனத்தை நீண்ட காலமாக ஈர்த்துள்ளது. லோ லான் நகர் அனைத்துலக ஆய்வுப் பயணிகள் போக வேண்டிய அற்புதமான இடமாகும்.

இயற்கை, மனித செயல் முதலிய சிக்கலான காரணங்களினால், இங்கே ஆறுகள் தனது ஓடும் வழி மாறியது. மணல்வெளி அதிகமானது. படிப்படியாக லோ லான் நகர் பாலைவனத்தில் புதைந்துவிட்டது என்று அண்மையில் ஆராய்ச்சி முடிவு காட்டுகின்றது. பழைய லோ லான் நகரின் நிலபரப்பு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் இருந்தது. மண், நாணல், மர கிளை ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்கள் லோ லான் நகரைச் சுற்றி கொத்தளத்தைக் கட்டியமைத்தனர். வடமேற்கிலிருந்து தென்கிழக்காகச் செல்லும் பழைய ஆறு நகரத்திற்கு நடுவில் ஓடியது. தற்போது, புத்தர் கோபுரம், இதற்கு அருகிலுள்ள கட்டிடங்கள், பழைய நகர மற்றும் இதற்கு அருகிலுள்ள எச்சரிக்கை நெருப்புக் கட்டிடம், தானிய கிடங்கு, பழைய சமாதி ஆகியவை மட்டுமே இப்போது காணப்படலாம். சமாதியிலிருந்து 3800 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட லோ லான் அழகியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மண் பாத்திரங்கள், தோல், பட்டுத்துணி ஆகியவற்றின் சில பகுதிகள், பழைய செப்புக் காசு, பழைய ஆயுதங்கள் முதலியவற்றைப் பழைய லோ லான் நகரில் காணலாம்.

(பாலைவனத்தில் லோ லான் நகரின் மரபுச்சிகலம்)

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040