• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சின்ச்சியாங்கில் மதங்கள்]

சின்ச்சியாங்கில் மத நம்பிக்கை கொண்ட மக்கள்

தற்போது, பல்வேறு மதங்கள் சின்ச்சியாங்கில் உள்ளன. இஸ்லாமிய மதம் சின்ச்சியாங்கின் சமூக வாழ்வில் மாபெரும் செல்வாக்குடையது. இங்கே மசூதிகள் மற்றும் லாமா கோயில், கட்டோலிசம் கோயில் ஆகியவற்றின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பல்வேறு தேசிய இன மக்களின் மத நம்பிக்கை தேவையை முழுமையாக நிறைவேற்றியுள்ளன. இஸ்லாமிய சங்கம், இஸ்லாமிய மதவியல் கழகம், புத்த மதச்சங்கம் ஆகியவை சின்ச்சியாங்கில் இருக்கின்றன.

விவூர், கஜாக், ஹுய் முதலிய 10 தேசிய இனங்கள் இஸ்லாமிய மதத்தை நம்புகின்றன. இஸ்லாமிய மத நம்பிக்கை உள்ளவரின் எண்ணிக்கை சுமார் 90 இலட்மாகும். சின்ச்சியாங் மக்கள் தொகையில் இது 56.3 விழுக்காடாகும்.

சின்ச்சியாங்கிலுள்ள மங்கோலிய இனத்தவர் பெரும்பாலோர் திபெத் புத்த மதத்தை நம்புகின்றனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரமாகும். 40 திபெத் புத்த மத கோயில்கள் உள்ளன. தவிர, சின்ச்சியாங்கில் சுமார் 30 ஆயிரம் கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்டோர் இருக்கின்றனர். கிறிஸ்த்துவ கோயில்களின் எண்ணிக்கை 24 ஆகும். 4000க்கு அதிகமானோர் கட்டோரிக் மதத்தை நம்புகின்றனர். 25 கட்டோரிக் கோயில்கள் உண்டு. மேலும் சுமார் 100 ரஷிய இன மக்களுக்கு 2 கோயில்கள் உண்டு.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040