• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[திபெத் பற்றி]

திபெத்தின் வரலாறும் தற்போதைய நிலைமையும்

கி.பி.க்கு முன்னர் தான், சின் காய் பீடபூமியில் வசித்த திபெத்தின மக்கள் உள் பிரதேசத்தில் வசித்த ஹான் இன மக்களுடன் தொடர்பு கொண்டனர். நீண்ட காலமாக, திபெத் பீடபூமியில் பரவி கிடந்த பல்வேறு பழங்குடி இனங்கள் படிப்படியாக ஒன்றிணைந்து தற்போதைய திபெத்தினமாக உருவாகியுள்ளன.

7வது நூற்றாண்டின் துவக்கத்தில், சீனாவின் நடு பகுதியில் 300 ஆண்டு கால சிக்கலான பிரிவினை நிலைமை முடிந்தது. அதேவேளையில், திபெத்தின தேசிய இன வீரர் சுன்சான்காபு துபோ மன்னராட்சியை அதிகார்பபூர்வமாக நிறுவினார்ல். லாசாவை திபெத்தின் தலைநகராக மாற்றினார். சுன்சான்காபு ஆட்சியின் போது, தாங் வம்சத்தின் முன்னேறிய உற்பத்தி தொழில் நுட்பத்தையும் அரசியல் பண்பாட்டு சாதனையை உட்புகுத்தி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளில் தாங் வம்சத்துடன் மிகவும் நட்பார்ந்த உறவை நிலைநிறுத்தினார்.

13வது நூற்றாண்டின் நடுவில், திபெத் பிரதேசம் சீனாவில் அதிகார்பபூர்வமாக சேர்ந்தது. இதற்குப் பின், பல வம்சங்களும் நடுவண் அரசுகளும் மாறியுள்ளன. ஆனால், திபெத் எப்போதும் நடுவண் அரசின் நிர்வாகத்திலேயே இருந்து வருகின்றது.

1644ஆம் ஆண்டு சிங் வம்சம் நிறுவப்பட்டது. திபெத் மேலும் கண்டிப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டது. திபெத்தில் நடுவண் அரசின் ஆட்சி மேலும் ஒழுங்காகவும் சட்ட மறைப்படியும் மாறியது. 1727ஆம் ஆண்டு, நடுவண் அரசின் சார்பில் திபெத் பிரதேசத்தில் அரசியல் நிர்வாகத்தை கண்காணிக்கும் திபெத் அமைச்சரை சிங் வம்ச ஆட்சி நியமித்தது.

1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. திபெத்தின் வரலாறு மற்றும் நடைமுறை நிலைமைக்கிணங்க, அமைதியான முறையில் விடுதலை செய்யும் கோட்பாட்டை நடுவண் மக்கள் அரசு முடிவு செய்தது. திபெத் மக்களின் விருப்பத்துக்கேற்ப, நடுவண் அரசு திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, நிலமானிய அமைப்பின் நில அடிமை முறையை ஒழித்தது. இலட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றனர். அவர்கள் நில உரிமையாளர்களால் விற்பனை செய்யப்படவும், வாங்கப்படவும், பரிமாற்றம் செய்யப்படவும் போவதில்லை. நில உரிமையாளர்களின் நிர்பந்தத்தில் உழைக்கபோவதில்லை. மனித சுதந்திரத்தை பெற்று, அவர்கள் புதிய சமூகத்தின் சொந்தகாரராக மாறினர். சில ஆண்டு கால சீரான வளர்ச்சிக்குப் பின், 1965ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் திபெத் தன்னாட்சி பிரதேசம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040