மன்பா இனம்
மன்பா இனம் திபெத் பீடபூமியில் வசிக்கும் பழைய தேசிய இனமாகும். தென் திபெத்தின் மன் ஓ பிரதேசத்தில் முக்கியமாக இவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் மொதொ, லின் சி, சோனா ஆகிய வட்டாரங்களில் வாழ்கின்றனர். வேளாண் தொழிலை முக்கியமாக கொண்டு, நாற்றங்கால் வளர்ப்பு, வனத் தொழில், வேட்டையாடுதல், கைவினைத் தொழில் ஆகியவற்றில் மன்பான் இன மக்கள் ஈடுபடுகின்றனர். மன்பா ஆண்களும் பெண்களும் சிவப்பு நிறமுடைய நீண்ட சட்டை அணிக்கின்றனர். பழுப்புநிறமான தொப்பி அல்லது கறுப்பு நிறமான தொப்பி அணிகின்றனர். கங்கணம், காதுவளையம் ஆகியவற்றை பெண்கள் விரும்புகின்றனர். ஆண்களின் இடுப்பின் அருகில் வாள் அணிகின்றனர். மது குடிக்கவும், மூக்குப் பொடி போடவும் ஆண்களும் பெண்களும் விரும்புகின்றனர். அரிசி, மக்காச்சோளம், மான் கோதுமை ஆகியவை அவர்களின் முக்கிய உணவாகும். மன்பான் மக்கள் பெரும்பாலோர் திபெத் புத்த மதத்தை நம்புகின்றனர். சில இடங்களில் மக்கள் shaman மதத்தை நம்புகின்றனர். நீரில் பிணத்தை ஆழ்த்துகின்றனற். மண்ணிலும் புதைகின்றனர்.

1 2 3 4