• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[திபெத்தின் சுற்றுலா மூலவளம்]

போத்தலா மாளிகை

போத்தலா மாளிகை திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவின் வடமேற்கு மலை பகுதியில் அமைந்துள்ளது. உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான மிக பெரிய அளவிலான மாளிகை அங்கு உள்ளது. கி. பி. 7வது நூற்றாண்டில் கருங்கல்லினால் இது கட்டப்பட்டது. 13 மாடிகளும், ஆயிரம் அறைகளும் கொண்டுள்ளது. 41 கோக் டர்நிலப்பரப்பில் கட்டப்பட்டது. பல்வேறு தலைமுறை தலாய் லாமாக்களின் சடங்குகளைக் கொண்ட கோபுரங்கள், உப்பரிகைகள், பல்வகை புத்தர் மாளிகைகள் இதில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும் தங்கம், முத்து, கூழாங்கல் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. மிக பெரிய 5வது தலாய் லாமாவின் மாளிகை கோபுரத்தின் உயரம் 14.85 மீட்டராகும். மொத்தம் 5950 கிராம் தங்கம், 4000க்கு அதிகமான முத்துக்கள், கணக்கிட முடியாத ஆபரணக்கற்கள் ஆகியவற்றினால் இது அலங்கரிக்கப்பட்டது. தலாய் லாமா போத்தலா மாளிகையில் வாழ்ந்து, பணி புரிந்து, வழிபாடு செய்கின்றார். அவருடைய படுக்கை அறை மிகவும் உயரமான இடத்தில், ஆண்டுதோறும் சூரிய ஒளியில் படம் வகையில் இருக்கின்றது. ஆகையால், சூரிய ஒளி மாளிகை என்றுஇது அழைக்கப்பட்டது.

1961ஆம் ஆண்டு, நடுவண் அரசு போத்தலா மாளிகையை தேசிய நிலை தொல் பொருள் பாதுகாப்பு இடமாக விதித்துள்ளது. ஆண்டுதோறும் இதனை சீனரமைக்கும் பணியில் சிறப்பாக முதலீடு செய்யப்படுகின்றது. 1989ஆம் ஆண்டு வசந்தகாலம் முதல் 1994ஆம் ஆண்டு கோடைக்காலம் வரை, அரசு மேலும் 5 கோடியே 30 இலட்சம் யுவானை இதன் சீனரமைப்பு பணியில் முதலீடு செய்துள்ளது. முன்பை விட, இது மேலும் அழகாக மாறியுள்ளது.

(போத்தலா மாளிகை)

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040