• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மகளிர் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு]

மகளிர் உடல் நலத்துக்கு உத்தரவாதம்

கடந்த சில ஆண்டுகளாக, சீன பெண்களின் உடல் நலன் பெரிதும் மேம்பட்டு வருகிறது. 2002ஆம் ஆண்டு வரை, சீனாவில் கருவுற்ற பெண்களுக்கு உடல் நல பாதுகாப்பு விகிதம் 86 விழுக்காட்டை எட்டியுள்ளது. மருத்துவமனையில் பிரசவிக்கும் விகிதம் 78.8 விழுக்காடாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இது 12 விழுக்காடு அதிகம். கருவுற்ற பெண்கள் இறப்பு விகிதம் 1997ஆம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கு 63.6 இருந்து, 2002ஆம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கு 50.2 ஆக குறைந்தது. மகளிர் சராசரி ஆயுள் 73.6 வயது ஆகும். ஆணின் ஆயுளை விட இது 3.8 வயது அதிகம்.

கிராம நல வாழ்வு சேவை தொடரமைப்பு சீனாவில் பூர்வாங்க முறையில் உருவாகியுள்ளது. 2000, 2001ஆம் ஆண்டுகளில், மேற்கு பகுதியிலுள்ள 12 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் நேரடி ஆட்சியின் கீழுள்ள நகர்களில், கருவுற்ற பெண்களின் இறப்பு விகிதத்தை குறைத்து, பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயை ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசும் உள்ளூர் அரசுகளும் நடத்தின. வறுமைப் பிரதேசங்களில் மருத்துவமனையின் மகப்பேறுத் தறைகள் வலுப்படுத்தப்பட்ட, அடி மட்ட நல வாழ்வு பணியாளருக்கு பயிற்சி அளித்ததால், மேற்கு பகுதியிலுள்ள 12 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் நேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்களில் கருவுற்ற பெண்களின் இறப்பு விகிதம் 2 ஆண்டுகளுக்குள் ஒரு லட்சத்துக்கு 37.28 ஆக குறைந்துள்ளது.

2001ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீன மக்கள் குடியரசு தாய்-சேய் பாதுகாப்பு சட்டத்தின் செயல் திட்டத்தை சீன அரசவை வெளியிட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் நல வாழ்வு பாதுகாப்பு அளிக்கும் அமைப்புகள் வழங்க வேண்டிய சேவைகள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டன. மகளிருக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களை சோதனை செய்து சிகிச்சை அளிக்கும் பணியை நாடு முழுவதும் வலுப்படுத்தி, மகப்பேறு பாதுகாப்பு நிலையை உயர்த்தியது. 2002ஆம் ஆண்டு வரை, நாடு முழுவதிலும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நல வாழ்வு பாதுகாப்பு அமைப்புகளின் எண்ணிக்கை 3067 ஆகும். 80 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியில் சீன அரசு பெரும் கவனம் செலுத்துகிறது. சீனாவில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றிய நடுத்தர மற்றும் நீண்டகால திட்டம் (1998-2010), சீனாவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிக்கும் செயல் திட்டம் (2001-2005) சீனாவில் வெளியிடப்பட்டன. மகளிர், இளைஞர் மற்றும் குழந்தைகளிடையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் பால் வினை நோய் பற்றிய அறிவை பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு நிலை அரசுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040