• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சர்வதேச தொடர்பு]

சர்வதேச மகளிர் ஒத்துழைப்பு திட்டப்பணிகள்

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச தொடர்பு வளர்வதுடன், சீனாவில் மேலும் கூடுதலான மகளிர் அமைப்புகள் சர்வதேச ஒத்துழைப்பு திட்டப்பணிகளையும், மேம்பட்ட கருத்துக்களை பயன்படுத்தி, சீன மகளிருக்கு ஏற்படும் நடைமுறை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில், அனைத்து சீன மகளிர் சம்மேளனம் பல சர்வதேச நிறுவனங்களுடன் பல துறைகளில் ஒத்துழைப்புகளை மேர்கொண்டுள்ளது. மகளிர் உடல் நலத்தை மேம்படுத்துவது, எழுத்தறிவற்றோருக்குக் கற்பிப்பது, சிறு தொகை கடன் வழங்குவது உள்ளிட்ட வழிகளின் மூலம் சீன மகளில் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சி சூழலை மேம்படுத்துதில் சீனா பெரும் பங்காற்றியுள்ளது. அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் நேர்மையையும், பயன்பாட்டையும் சர்வதேச கூட்டாளிகள் பாராட்டியுள்ளன. மிக சிறந்த ஒத்துழைப்பு கூட்டாளி என்ற அது புகழை பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, சீன மகளிர் அமைப்புகள் சர்வதேச மகளிர் அமைப்புகளுடன் பல பயன் தரும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன.

சீன-கனெடிய மகளிர் சட்ட ஒத்துழைப்பு திட்டம் 1998. இது கனெடிய சர்வதேச வளர்ச்சி நிறுவனம் வழங்கிய நிதி ஆதரிவுடன், அனைத்து சீன மகளிர் சம்மேளனம் கனெடிய குடியிருப்பு கழகத்துடன் சேர்ந்து நடத்திய திட்டம். அடி மட்ட மகளிரின் சட்ட கருத்துக்கள், சட்டத்தை செயல்படுத்தும் திறன், சட்டத் துறை பணியாளர்களின் சமூக கருத்துக்கள், மகளிர் அமைப்புகளின் சட்ட பிரச்சாரம் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம், மகளில் உரிமையை பாதுகாக்கும் சட்ட விதிகளை செயல்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். சட்டத்தை பயன்படுத்தி தமது உரிமையை பாதுகாக்கும் முறைகளை இத்திட்டம் நிறைவேற்றப்படும் இடங்களில் உள்ள மகளிர் கற்றுக் கொண்டுள்ளனர்.

மகளிர் மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்று விற்பனை செய்வதை எதிர்க்கும் Mekong ஆற்று உள் வட்டாரத் திட்டம், 2002ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு வழங்கிய நிதி ஆதரவுடன், அனைத்து சீன மகளிர் சம்மேளனம் சீனாவின் யுன்நான் மாநிலத்தில் நடத்திய சர்வதேச ஒத்துழைப்பு திட்டம். மகளிரின் பண்பாட்டு திறனை உயர்த்துவது, சட்ட கருத்துக்களை வலுப்படுத்துவது, தடுப்பு திறனை உயர்த்துவது, சிறு கடன் வழங்குவது ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டதால், கடத்தல் தடுப்பு பற்றிய அறிவை இந்த திட்டம் நடத்தப்பட்ட இடங்களில் உள்ள மகளிர் கிரகித்துக் கொண்டுள்ளனர். சுயேச்சை வளர்ச்சி சூழலை அவர்களுக்காக இது உருவாக்கியுள்ளது. வெளியூரில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு கிடைத்தது. ஏமாறறி கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் இடர்ப்பாடு இதனால் பெருமளவில் குறைந்துள்ளது. வேலை இழந்த பெண் பணியாளருக்கு மறு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம், அனைத்து சீன மகளிர் சம்மேளனம், ஐ.நா. வளர்ச்சி திட்ட நிறுவனம், ஆஸ்திரேலிய சர்வதேச வளர்ச்சி நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஒத்துழைப்பு திட்டமாகும். 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம், சிறு கடனையும் தியான் மகளிர் தொழில் முனைவோர் சேவை மையத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ஏழை மகளிர் மற்றும் வேலை இழந்த மகளிர் மறு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் தொழில் நடத்துவதற்கும் உதவிடுவதை நோக்கமாகக் கொண்டு, 6000க்கு அதிகமான பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி பெறுவது பற்றிய பிரச்சினைகளைத் தீர்த்தது மட்டுமல்ல, வேலை வாய்ப்பு வழங்குதல் பற்றிய ஆராய்ச்சிக்கும் சிறு கடன் வழங்குதல் துறையில் சீர்திருத்தம் செய்வதற்கும் புதிய மாதிரியையும் கொள்கை ஆதாரத்தையும் இத்திட்டம் வழங்குகிறது.

சிறுமியர் ஒத்துழைப்பு திட்டம். சீனாவின் உறுமைப் பிரதேசங்களிலுள்ள சிறுமிகளுக்கு உதவிடுவதில், ஐ.நா. குழந்தைகள் நல நிதியம், பிரிட்டிஷ் சர்வதேச வளர்ச்சி துறை உள்ளிட்ட பல தரப்பு மற்றும் இருதரப்பு அமைப்புகளுடன் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது.

குடும்பம், கூட்டாளி, குடியிருப்பு பிரதேசம், சமூகம் ஆகியவற்றுக்கும் இடையே ஆண்-பெண் பற்றிய கருத்து வேறுபாடுகளை மாற்றுவதை துவக்க புள்ளியாகக் கொண்டு, பல்வகை நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம், ஆணுக்கு முக்கியத்துவம் அளித்து பெண்ணை அலட்சியப்படுத்தும் சரியற்ற செயலை மாற்றுவது, ஐ.நா. குழந்தைகள் நல நிதியத்துடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு திட்டம். சீனாவின் மேற்கே உறுமைப் பகுதியிலுள்ள சிறுமிகளுக்கு சமூக பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்கும் திறனை வழங்குவதற்கு, பிரிட்டனுடன் ஒத்தழைக்கும் சிறுமியர் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் அவர்கள் வாய்க்கையில் பிழைக்கும் திறமையை கிரகித்துக் கொள்வதோடு, தங்களிது உரிமையையும் அறிந்து கொண்டு செயல்படுத்தலாம். உழைப்பு தொழில் நுட்பங்களை சிறுமிகள் மேலும் செவ்வனே கிரகித்துக் கொண்டு, பார்வையை விரிவாக்கும் வகையில், ஷான்துங் மாநிலத்துக்கு வந்து பயிற்சி பெற, ஜெர்மனி சைடர் நிதியம் மேற்கு பகுதியிலுள்ள 20 சிறுமிகளுக்கு உதவியுள்ளது. விரைவில் அவர்கள் உழைப்பு தொழில் நுட்பங்களை கிரகித்துக் கொண்டு, கண்ணோட்டத்தில் பெரும் மாற்றம் பெற்றனர். 1999ஆம் ஆண்டில் இருந்து, ஏழை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவிட, சீன-காதர் மற்றும் சீன-பிரேஸில், மழலையர் பள்ளிகளும், வகுப்புகளும் உருவாக்கப்பட்டன. ஐப்பானிய நண்பர் ஒருவர் 3 கோடியே 20 லட்சம் யுவான் நன்கொடை செய்ததால், 100க்கு அதிகமான மழலையர் துவக்கப்பள்ளிகள் கட்டப்பட்டன


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040