• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பொருளாதார நிலைமை]

பொருளாதாரம்

புதிய சீனா 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பின், பொளாதார வளர்ச்சியில் வேகமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, 1978ஆம் ஆண்டு சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9 விழுக்காடு என்ற வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. 2003ஆம் ஆண்டு, சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. மொத்தப் பொருளாதார அளவு, உலகில் 6வது இடம் வகிக்கின்றது. 2003ஆம் ஆண்டு இறுதி வரை, சீன மக்களின் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1000 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

தற்போது, சீனாவின் உள்நாட்டு முதலீடு மற்றும் நுகர்வு நிலைமை சீராக இருக்கின்றது. 2003ஆம் ஆண்டு, சீனாவில் நிலையான சொத்துக்களின் முதலீட்டுத் தொகை 5 இலட்சத்து 5 ஆயிரம் கோடி யுவானாகும். முழு சமூகத்தில் நுகர்வுப் பொருட்களின் மொத்த விற்பனைத் தொகை 4 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான் ஆகும். வெளிநாட்டு வர்த்தகத் தொகை 85 ஆயிரம் கோடி அமெரிக்க டாரலாகும். பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றைத் தாண்டி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றுக்கு அடுத்து, உலகில் 4வது இடம் வகிக்கின்றது. 2003ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. ஜப்பானுக்கு அடுத்து, உலகில் 2ஆம் இடம் வகிக்கின்றது.

25 ஆம்டுக்கால சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, நவீனமயமாக்கக் கட்டுமானம் ஆகியவற்றின் மூலம், திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சோஷலிச சந்தைப் பொருளாதாரத்துக்கான மாற்றத்தை சீனா நனவாக்கியுள்ளது. சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்புமுறை படிப்படியாக நிறுவப்பட்டுள்ளது. இதற்கேற்ப, சீனாவின் சட்ட விதிகள் முழுமையாகி வருகின்றன. சந்தை திறப்பு அளவு இடைவிடாமல் பெரிதாகி வருகின்றது. முதலீட்டுச் சூழ்நிலை மேம்பட்டு வருகின்றது. நாணய அமைப்புமுறை துறையிலான சீர்த்திருத்தம் நிதானமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இவை எல்லாம், சீன பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதியான பாதுகாப்பை அளித்துள்ளன.

21வது நூற்றாண்டில், மனிதரும் இயற்கையும், மனிதரும் சமூகமும், நகரமும் கிராமமும், கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும், பொருளாதாரமும சமூகமும் ஆகியவற்றின் பன்முகமான ஒழுங்கான வளர்ச்சி என்ற கருத்தினைச் சீனா முன்வைத்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் ஓரளவு வசதி படைத்த சமூகத்தை நிறுவும் இலக்கை, 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய பிரதிநிதிகள் மாநாடு முன்வைத்தது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040