• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நெடுநோக்கு வளர்ச்சி திட்டம்]
நெடுநோக்கு வளர்ச்சி திட்டம்

சீன நவீனமயமாக்க கட்டுமானத்தின் 3 கட்ட நெடுநோக்குத் திட்டத்தை 1987ஆம் ஆண்டு அக்டோபரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 13வது தேசிய பிரதிநிதிகள் மாநாடு முன்வைத்தது.

முதல் கட்டம். 1981 முதல் 1990 வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு மடங்கு அதிகரித்து, மக்களின் உடை மற்றும் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். இரண்டாவது கட்டம், 1991 முதல் 20வது நூற்றாண்டின் இறுதி வரை, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு மேலும் ஒரு மடங்கு அதிகரித்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு வசதி படைத்ததாகச் செய்ய வேண்டும். மூன்றாவது கட்டம், 21வது நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகின் நடுத்தர வளர்ந்த நாடுகளின் நிலைமையை எட்ட வேண்டும். மக்களின் வாழ்வை ஒப்பீட்டளவில் வளம் அடையச் செய்து, நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்க வேண்டும்.

1997 செப்டெம்பர் திங்களில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 15வது தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் 3வது இலக்கு மேலும் தெளிவாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, 21வது நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2000ஆம் ஆண்டை விட 100 விழுக்காடு அதிகரிக்க வேண்டும். மக்களின் ஓரளவு வசதி படைத்த வாழ்வு மேலும் மேம்படுத்தப்பட்டு, ஒப்பீட்டளவில் மேம்பட்ட சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்புமுறையை உருவாக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், தேசிய பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். பல்வேறு அமைப்புமுறைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். 2050ஆம் ஆண்டுக்குள், நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்க வேண்டும். செல்வம், ஜனநாயகம், நாகரிகம் ஆகியவை படைத்த சோஷலிச நாடாகச் சீனா மாற வேண்டும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040