• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சி திட்டம்]
மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சி திட்டம்  

கான்சு, குய்சௌ, நின்சியா, சின்காய், சான்சி, சிசுவான், திபெத், சிங்ஜியாங், யுனான், சுன்சிங் ஆகிய 10 மாநிலங்கள் சீனாவின் மேற்குப் பகுதியில் அமைகின்றன. சீனாவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் 2 பகுதியும், 22.8 விழுக்காட்டு மக்கள் தொகையும் இவற்றுக்கு உண்டு. இப்பகுதியில் தாது வளம், எரியாற்றல், நீர் ஆற்றல், சுற்றுலா மற்றும் நில மூலவளம் ஆகியவை அதிகம். யாங்சி, மஞ்சள் ஆகிய இரண்டு ஆறுகளின் தொடக்கப் பகுதியில் அமைந்துள்ள மேற்குப் பகுதி 10க்கும் அதிகமான நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. 3500 கிலோமீட்டர் தரை எல்லை நெறியைக் கொண்ட இது வெளிநாட்டுத் திறப்புக்கான 2வது தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுகின்றது.

2000ஆம் ஆண்டு, மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சித் திட்டம் துவங்கியது. நிதி முதலீடு, முதலீட்டுச் சூழல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் திறப்பு, அறிவியல் கல்வியை வளர்ப்பது, திறமைசாலிகளை ஈர்ப்பது முதலிய துறைகளில் முன்னுரிமையுடைய கொள்கையை அரசு இப்பகுதிக்கு வழங்கியுள்ளது. இதுவரை, மேற்குப் பகுதியில் முக்கிய திட்டப்பணிகள் புதிதாகத் துவங்கியுள்ளன, முதலீட்டுத் தொகை 10 இலட்சம் கோடி யுவான்.

மேற்கூறிய 10 மாநிலங்களைத் தவிர, உள் மங்கோலியா மற்றும் குவான்சி தன்னாட்சிப் பிரதேசம் குறித்த மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இந்தப் பகுதியில் முதலீடு செய்யும் வெளிநாட்டு வணிகருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முன்னுரிமையுடன் கூடிய கொள்கைகளையும் அரசு வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, தற்கால முன்னுரிமையுடைய வரி வசூலிப்பு காலத்துக்குப் பிந்திய 3 ஆண்டுகளுக்குள், 15 விழுக்காடு என்ற குறைந்த விகிதத்தில் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தலாம். ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்காக இந்த வட்டி 10 விழுக்காடாக மேலும் குறைக்கப்படலாம். தவிர, கடலோர பிரதேசங்களை போல, 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்குட்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிகழ்ச்சிகளுக்கு சுயமாக ஏற்றுமதி செய்யும் உரிமை மேற்கு மாநிலங்களுக்கும் உண்டு. வெளிநாட்டுத் திறப்பு மற்றும் வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்யும் தலைசிறந்த பிரதேசமாக மேற்குப் பகுதி மாறியுள்ளது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040