• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வடகிழக்கிலான பழைய தொழில் துறை தளத்தை வளர்ச்சியுறச் செய்வது]
வடகிழக்கிலான பழைய தொழில் துறை தளத்தை வளர்சசியுறச் செய்வது

வடகிழக்கிலான பழைய தொழில் துறைத் தளம் சீனத் தேசியப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் போது, அங்குள்ள இயந்திரம் ஆக்கத் தொழில், இரும்புருக்குத் தொழில், கனரகத் தொழில் ஆகியவை சீனப் பொருளாதாரக் கட்டுமானத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. ஆனால், இந்த தளம் உருவான காலம் முதலிய காரணத்தினால், சில தொழில் தாழ்ந்த காலகட்டத்தில் நுழைந்துள்ளன. இதனால் அதன் சந்தை போட்டியாற்றல் குறைந்துள்ளது. இதற்கு ஈடாகத் தொழில் வளர்ச்சி அடையவில்லை. குறிப்பாக, சில மூலவள நகரங்கள் மாபெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றன. இந்தப் பிரச்சினைகளை ஒட்டி, வடகிழக்கிலான பழைய தொழில் துறை தளத்தைச் சரிப்படுத்தி, சீர்த்திருத்தி, வளர்ச்சியுறச் செய்வது என அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, சீன தலைமை அமைச்சர் வென் சியாபாவ் உத்தரவாதம் அளித்துள்ளார். வடகிழக்கிலான பழைய தொழில் துறை தளத்தை வளர்சசியுறச் செய்ய வேண்டுமானால், நெடுநோக்குத் திட்டத்தில் பொருளாதார அமைப்புமுறையைச் சரிப்படுத்த வேண்டும். தொழில் கட்டுமானம். சொத்துரிமை அமைப்புமுறை, அரசு சார் பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றைச் சரிப்படுத்துவதானது இத்திட்டப்பணியின் முதுகெலும்பாகும். தொழில் நிறுவனங்களில் தொழில் நுட்பச் சீர்திருத்தத்தை பயன் தரும் முறையில் வலுப்படுத்துவதானது இத்திட்டப்பணின் முக்கிய பகுதியாகும். பன்முக ஒழுங்கான தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதானது இத்திட்டப்பணியின் நெடுநோக்கு இலக்காகும். வேலை வாய்ப்பு மற்றும் சமூக காப்புறுதி அமைப்புமுறையின் கட்டுமானமானது இத்திட்டப்பணியின் முக்கிய பாதுகாப்பாகும். அறிவியல் தொழில் நுட்பக் கல்வி இலட்சியத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதானது, இத்திட்டப்பணியின் முக்கிய நிபந்தனையாகும் என்று வென் சியான் பாவ் தெரிவித்தார்.

தற்போது, வடகிழக்குப் பகுதி உள்ளிட்ட பழைய தொழில் துறை தளத்தைச் சரிப்படுத்தி சீர்திருத்தும் திட்டத்தை அரசு வகுக்கின்றது. வடகிழக்குப் பகுதியிலான 3 மாநிலங்களும் தத்தம் திட்டத்தை வகுக்கின்றன.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040