• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன மருத்துவம் ஒரு சிறு அறிமுகம்]
சீன மருத்துவம் ஒரு சிறு அறிமுகம்

பல நூற்றாண்டுகளாக படிப்படியாக கொள்கை முறையிலும் நடைமுறையிலும் உருவெடுத்துள்ள சீன மருத்துவத்தில் அக்குபங்ச்சர், மூலிகை மருந்து, சீங்கு பத்திய மருந்து ஆகியவை ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.

ஹான் திபெத் மங்கோலியா, உய்குர் உள்ளிட வெவ்வேறு சீன இனக்குழுக்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுக்கும் சீன மருத்துவம் என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இனக்குழுக்களிடையே ஹான் இனம் பயன்படுத்தும் மருந்துதான் சீனாவிலும் உலகம் முழுவதிலும் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. ஹான் இனம் தான் முதன் முதலில் தனக்கென ஒரு மருத்துவ முறையை உருவாக்கியது. 19ம் நூற்றாண்டில் மேற்கத்திய மருத்தும் பிரபலமடைந்தது போல ஹான் மருத்துவம் கீழை நாடுகளில் பிரபலமானது.

சீனாவின் தேசிய இனங்கள் உருவாக்கிய பல்வேறு மருத்துவ முறைகளில் ஹான் இனம் உருவாக்கிய மருத்துவ முறைதான் மிகவும் பழமையானது. நடைமுறைப் பயன்பாட்டிலும் கோட்பாட்டு அறிவிலும் வழம் மிக்கது. மஞ்சள் ஆறு வழநிலப் பகுதியில் உரவெடுத்த சீன மருத்தும் வெகுகாலத்துக்கு முன்பே ஒரு அறிவியல் புலமாக நிலைநிறுத்தப்பட்டது. அது வளர வளர நல்லபல மருத்துவர்களும் கோட்பாடுகளும் முன்னேற்றங்களுக்கு உருவெடுத்தனர்.

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஷாங் வம்சத்தில் இருந்த செய்வவாக்கு எலும்பு கல்வெட்டுக் கணிலேயே மருத்துவ சிகிச்சை, தூய்மை, நோய் போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வந்த ச்சோ வம்சத்தில் நோய்க் கூறு கண்டறியும் பல்வேறு நுட்பங்களை மருத்துவர்கள் கற்றுக் கொண்டனர். இந்த நுட்பங்கள் நான்கு பெரும் முறைகளாக இப்போது பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கூர்ந்து கவனித்தல், கேட்டல், மற்றும் முகர்ந்து பார்த்தல், விசாரித்த்ல், நாடித்துடிப்புமு இதயத்துடிப்பும் அறிதல் ஆகியன அடங்கும். நோய்களைக் குணப்படுத்துவதற்காக மருந்துகள், அக்குபங்ச்சர், அறுவை சிகிச்சை போன்ற பல மருத்துவ முறைகளை மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். சின் மற்றும் ஹான் காலத்தில் (கி.மு.221-கி.மு.220)மஞ்சள் போரரசரின் மருத்துவ சாத்திரம் அல்லது ஹாவாங் தி நிய் ஜிங் என்ற புதிய புத்தகம் எழுதப்பட்டது. அதில் சீன மருத்துவக் கோட்பாடுகள் முறைப்படி விவாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைக்கும் மிகவும் பழமையான நூல் இதுவாகும். மற்ற ரு புத்தகம், மூன்றாம் நூற்றாண்டில் ச்சாங் சோங்ஜின் என்பவர் எழுதிய பெஃப்ரில் மற்றும் இதர நோய்கள் என்ற புத்தகம் உள் உறுப்புக்களால் ஏற்படக் கூடிய பல்வேறு நோய்களின் கூறுகளை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை தருவது என்ற இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அர்த்தம் மிகுந்தது. பல நூற்றாண்டுகள் கழித்து மருத்துவமனை மருந்துகள் உருவெடிப்பதற்கு இது உறுதுணையாக இருந்தது. ஹான் மன்னராட்சி காலத்தில் அறுவை சிகிச்சை ஒப்பீட்டளவில் உயரிய இடம் பெற்றது. மூன்று பேரரசர் வரலாறு அல்லது சன் சோ ச்சி என்ற புத்தகத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக பொது மயக்க மருந்து கொடுத்த ஹுவாத்துவோ என்ற மருத்துவர் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

கி.மு 220 முதல் கி.பி.960 வரை சீனாவில் வெய் வம்சம், ஜின் வம்சம், தெற்கு மற்றும் வடக்கு வம்சங்கள், ஸீயி வம்சம், தாங் வம்சம், வுதாய் வம்சம் ஆகியவற்றின் ஆட்சிகள் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் நாடித்துடிப்பை உணர்ந்து நோயைக் கண்டறியும் முறையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஜின் வம்சத்தின் காலத்தில் நாடித்துடிப்பு சாத்திரம் அல்லது மெய் ஜிங் என்ற புத்தகத்தை வேக் ஷூ என்ற மருத்துவர் எழுதினார். அந்தப் புத்தகம் சீனாவிலும் வெளிநாடுகளிலும் பெரிதும் செல்வாக்கு பெற்றது. அதில் நாடித்துடிப்பை அறியும் 24 வழி முறைகளை அவர் விளக்கியுள்ளார். அதவே காலகட்டத்தில் சீன மருத்துவம் வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வகைக்கும் புதிய புத்தகங்கள் எழுதப்பட்ட்ன. எடுத்துக் காட்டாக, அக்குபங்ச்சர் துறையில் சென் சியூ யி ஜிங் எனப்படும் அக்குபங்ச்சர் மற்றும் மோக்ஸ்பஸ்ட்டியன் நீண்ட ஆயுளுக்கு உதவும் மாத்திரைகளை எவ்வாறு தயாரிப்பது எந வினக்கும் பாவ் புஸி மற்றும் சூ ஹௌ பாஃ்ங் புத்தகங்கள், மருந்துத் தயாரிப்பிற்கான லெய் பனுவல் அல்லது வலெய் கோங்பாங் ச்சி லுன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அப்போது வெளியான புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று அறுவைசிகிச்சை பற்றியது. அது ஆவிகள் விட்டுச் சென்ற லியு ஜுவான்ச்சி பலிகாரம் அல்லது லியுச்சிகுய் யிபாஃங் என்ப்படுகின்றது.

பின்னர் சோங் வம்சத்தில் (கி.மு960-கி.பி,1279)வேங் வெய்யி என்பவர் அக்குபங்ச்சன்ரக் கற்பிக்க புதிய முறைகளை பின்பற்றினார். அவர் தனது நுட்பங்களை வரைபடங்கள் மற்றும் மனித உம்பின் மாதிரிகளைக் கொண்டு விளக்கினார். மிங் வம்சத்தில் (கி.மி1368-கி.பி1644)டைபாய்டு காய்ச்சல், பருவநிலைமாற்றத்திற்கு ஏற்ப ஏற்படும் தொற்றுநோய், பிளேக் எனப்படும் கொள்ளை நோய் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மருத்துவர்கள் காதை தொடங்கினர். இதற்காக தணிப்பட்ட புதிய புத்தகம் ஒன்று ச்சிங் வம்சகாலத்தில் எழுதப்பட்டது.

மிங் வம்சகாலத்தில் தான் மேற்கத்திய மருத்துவம் சீனாவில் அறிமுகமானது. அப்போது மருத்துவ அறிவியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழை மருத்துவத்தையும் மேலை மருத்துவத்தையும் இணைக்கத் தொடங்கினர். இந்த முயற்சி தொடர்ந்து இணைக்கும் சீன மருத்துவத்தில் இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கின்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040