• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தூதாண்மை நிலைமை]
தூதாண்மை நிலைமை  

1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், சீனாவின் தூதாண்மை உறவில் புதிய அத்தியாயம் திறந்துவைக்கப்பட்டது.

1949ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டுகளின் இறுதி வரை, சோவியத் யூனியன் மற்றும் பல்வேறு சோஷலிச நாடுகளுடன் சீனா தூதாண்மை உறவை நிறுவி, நட்பு ஒத்துழைப்புறவை வளர்ச்சியுறச் செய்துள்ளது. 1955ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற பாண்டுங் ஆசிய-ஆப்பிரிக்க மாநாட்டுக்குப் பின், சில ஆசிய ஆப்பிரிக்க நாடுகள், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவின. 1956ல் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை 25ஐ எட்டியுள்ளது.

1950ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல் 60ஆம் ஆண்டுகளின் இறுதி வரை, கினி, கானா, மாலி, காங்கோ, தான்சானியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனா நட்பு உடன்படிக்கை மற்றும் பொருளாதாரத் தொழில் நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது. சுதந்திரத்துக்காக அங்கோலா, கினி பிசௌ, மொசாம்பிக், சிம்பாபுவே, நமிபியா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் ஆயுதப் போராட்டத்தையும் வெள்ளையர் தம் இனவெறியை எதிர்க்கும் தென்னாப்பிரிக்க மக்களின் போராட்டத்தையும் சீனா ஆதரித்துள்ளது. வரலாறு விட்டுச்சென்ற பிரச்சினைகளை மியன்மர், நேபாளம், மங்கோலியா, ஆப்கான் ஆகியவற்றுடன் தீர்த்து, எல்லைப் பிரதேச உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது. சீனாவின் சிங்ஜியாங்கிற்கும் பாக்கிஸ்தானின் உண்மைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு பிரதேசத்துக்குமிடையிலான எல்லைப் பிரதேச உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் வாழும் கடல் கடந்த சீன மக்களின் இரட்டைக் குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு வரை, சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை 50ஐ எட்டியுள்ளது.

1971ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் நவ சீனாவின் தூதாண்மை உறவில் முக்கிய திருப்பு முனை ஏற்பட்டது. அப்போது, மிகப் பல வளரும் நாடுகளின் ஆதரவுடன், 26வது ஐ.நா.கூட்டத்தொடரில் மிகப் பெரும்பான்மையான வாக்குகளுடன், 2758வது இலக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நாவிலான சீன மக்கள் குடியரசின் அனைத்து சட்டப்பூர்வமான உரிமைகளும் மீட்கப்பட்டன. ஐ.நாவிலிருந்தும் அதன் அனைத்து நிறுவனங்களிலிருந்தும் கொமிங்தாங் கட்சிக் குழுவின் பிரதிநிதிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மிகப்பெரும்பாலான மேலை நாடுகளுடன் சீனா தூதாண்மை உறவை நிறுவியது. இதனால், தூதாண்மை உறவு நிறுவப்படும் 3வது உச்ச கட்டம் காணப்பட்டது.

1970ஆம் ஆண்டுகளின் இறுதி முதல் 80ஆம் ஆண்டுகளின் இறுதி வரை, தெங்சியௌபிங்கின் தூதாண்மைச் சிந்தனையின் வழிகாட்டலில் அமெரிக்கா, ஜப்பான், மேற்கு ஐரோப்பா ஆகியவற்றுடன் சுமுகமான உறவை சீனா வளர்ச்சியுறச் செய்தது. சோவியத் யூனியனுடனான உறவை மேம்படுத்தி, 3வது உலக நாடுகளுடனான உறவைப் பன்முகங்களிலும் வளர்த்தது. அண்டை நாடுகள் மற்றும் மிகப் பல வளரும் நாடுகளுடனான உறவை மேம்படுத்தி வளர்த்துள்ளது. ஹாங்காங் மற்றும் மகௌ பிரச்சினைகளை உரிய முறையில் தீர்க்கும் வகையில், தூதாண்மைப் பேச்சுவார்த்தை மூலம் சீனாவும் பிரிட்டனும் 1984ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் கூட்டறிக்கை வெளியிட்டன. 1987ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீனாவும் போர்த்துகலும் கூட்டறிக்கை வெளியிட்டன. 1997ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளன்று, ஹாங்காங் மீதான சீன மக்கள் குடியரசு அரசாங்கத்தின் அரசுரிமையை மீட்பதும் 1999ஆம் ஆண்டு டிசெம்பர் 20ந் நாள் மகௌ மீதான அரசுரிமையை மீட்பதும் இவ்வறிக்கைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகள் முதல், சியாங் சேமின்னை மையமாகக் கொண்ட சீனாவின் 3வது தலைமுறை தலைமைப் பீடம், தெங்சியௌபிங்கின் தூதாண்மைச் சிந்தனை மற்றும் சுதந்திர சமாதான வெளிநாட்டுக் கொள்கையைக் கையேற்று, ஆக்கப்பூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தி, சமாதான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளுடன் நட்பு ஒத்துழைப்புறவை வளர்ச்சியுறச்செய்து, புதிய சர்வதே அரசியல்,பொருளாதார ஒழுங்கின் உருவாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றுவிக்கப் பாடுபட்டுவருகின்றது. சீனா, இந்தோனேசியாவுடன் தூதாண்மை உறவை மீட்டு, சிங்கப்பூர், புருணை, தென் கொரியா ஆகியவற்றுடன் தூதாண்மை உறவை நிறுவி, வியட்நாம், மங்கோலியா ஆகியவற்றுடன் உறவின் சுமுகத்தை நனவாக்கியுள்ளது.

1996ஆம் ஆண்டு, முன்னாள் அரசு தலைவர் சியாங் செமிங், 3 தென்னாசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். சீனாவும் இந்தியாவும் 21ம் நூற்றாண்டை எதிர்நோக்கும் ஆக்கப்பூர்வ கூட்டாளி உறவை நிறுவுவதெனவும், சீனாவும் பாகிஸ்தானும் 21ம் நூற்றாண்டை எதிர்நோக்கும் பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை நிறுவுவதெனவும், சீனாவும் நேபாளமும் தலைமுறை தலைமுறையான சுமுக அண்டை நாட்டு நட்புறவுக் கூட்டாளி உறவை நிறுவுவதெனவும் கலந்தாலோசனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுடனும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுடனும் சீனா ஆக்கப்பூர்வமாக உறவை வளர்ச்சியுறச் செய்துள்ளது. சீனாவுக்கும் சஹ்ராவுக்குத் தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்குமிடை உறவு மேலும் வலுப்பட்டுள்ளது. சீனாவுக்கும் லத்தின் அமெரிக்காவுக்கு மிடையிலான உறவு தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது. சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய லத்தின் அமெரிக்க நாடுகளின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவாத சில நாடுகள், சீனாவுடன் உறவை வளர்க்கத் திட்டமிடலாயிற்று.

புதிய நூற்றாண்டில் மனிதகுலம், அடியெடுத்துவைத்துள்ளது. உலகின் பல துருவ மயமாக்கமும், பொருளாதாரத்தின் உலக மயமாக்கமும் தொடர்ந்து வளர்ச்சியடைந்துவருவது என்பது, புதிய நூற்றாண்டின் முக்கிய அறிகுறிகளாகும். சீனா, உலகில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. சீனாவின் வளர்ச்சி, உலகிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. உலகின் வளர்ச்சிக்கு சீனா தேவை. சமாதான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் பிரதேசங்களுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இணைந்து வளர்ச்சியடைய வேண்டும் என்று சீனா உளமார விரும்புகின்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040