• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தூதாண்மை கொள்கை]
சீனாவின் தூதாண்மைக் கொள்கை

சுதந்திரமான சமாதான வெளிநாட்டுக் கொள்கையை சீனா உறுதியாகக் கடைப்பிடிக்கின்றது. சீனாவின் சுதந்திரம், அரசுரிமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காத்து, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக்கெனவும் நவீன மயமாக்கக் கட்டுமானத்துக்கெனவும் சீரான சர்வதேச சூழ்நிலையை உருவாக்கி, உலக சமாதானத்தைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது என்பது இக்கொள்கையின் அடிப்படைக் குறிக்கோளாகும். சுதந்திரமான கோட்பாட்டை சீனா எப்பொழுதும் கடைப்பிடித்து, எந்த வல்லரசுடனும் நாடுகள் குழுவுடனும் கூட்டணியை உருவாக்காது. ராணுவக் குழுவை நிறுவாது. படைக்கலப் போட்டியில் பங்குகொள்ளாது. ராணுவ விரிவாக்கத்தை மேற்கொள்ளாது. இவை, அதன் முக்கிய உள்ளடக்கமாகும்.

சீனா, மேலாதிக்கவாதத்தை எதிர்த்து, உலக சமாதானத்தைப் பேணிக்காக்கின்றது. பெரிய நாடு, சிறிய நாடு, வலிமையான நாடு, பலவீனமான நாடு, செல்வந்த நாடு, வறிய நாடு எதுவாயினும் அனைத்தும் சர்வதேச சமூகத்தில் சமமானவை என்று சீனா கருதுகின்றது. நாடுகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளும் தகராறுகளும் கலந்தாலோசனை மூலம் சமாகான முறையில் தீர்க்கப்பட வேண்டும். ஆயுத ஆற்றலோ ஆயுத ஆற்றலைப் பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்தலோ, கூடாது. எந்தச் சாக்குப்போக்கிலும் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.

புதிய நியாயமான சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கு முறையின் உருவாக்கத்தை சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவிக்கின்றது. சமாதான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இதர சர்வதேச உறவுக் கோட்பாடுகளும் புதிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கு முறையை நிறுவுவதன் அடிப்படையாக விளங்க வேண்டும்.

ஒன்று மற்றதன் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை மதிப்பது, ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காமை, ஒன்று மற்றதன் உள்விவகாரங்களில் தலையிடாது, சமத்துவம், பரஸ்பர நலன், சமாதான சகவாழ்வு ஆகிய 5 கோட்பாடுகளின் அடிப்படையில், அனைத்து நாடுகளுடனும் நட்பு ஒத்துழைப்புறவை நிறுவி வளர்ச்சியுறச் செய்ய சீனா விரும்புகின்றது.

உலகளாவிய வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தி, சமத்துவம், பரஸ்பர நலன் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் வர்த்தகப் பரிமாற்றம், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பையும் அறிவியல்-பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் மேற்கொண்டு, பொதுச் செழுமையை முன்னேற்றுவிக்க சீனா விரும்புகின்றது.

பல தரப்புத் தூதாண்மை நடவடிக்கையில் முன்முயற்சியுடன் பங்குகொள்வது என்பது உலக சமாதானத்தையும் பிரதேச நிதானப்பாட்டையும் பேணிக்காக்கும் உறுதியான சக்தியாக விளங்குகின்றது.

நவ சீனா நிறுவப்பட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சரிப்படுத்தல், வளர்ச்சி ஆகியவற்றின் மூலம், சீனத் தூதாண்மைக் கொள்கை மேலும் முழுமையாக்கப்பட்டுள்ளது. சீனத் தூதாண்மைத் துறையில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த தூதாண்மை பாணி உருவாகியுள்ளது. எதிர்காலத்தை நோக்குவதில், உலக கட்டமைப்பின் பல துருவமயமாக்க மற்றும் பொருளாதாரத்தின் உலக மயமாக்கப் போக்கு தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது. சர்வதேச உறவு ஆழ்ந்த முறையில் சரிப்படுத்தப்பட்டுவருகின்றது. சமாதானம் தேவைப்படுவது, ஒத்துழைப்பை நாடுவது, வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது என்பன, பல்வேறு நாட்டு மக்களின் பொது குரலாகும். புதிய நூற்றாண்டில் சீனத் தூதாண்மைத் துறை வாய்ப்பை மட்டுமல்ல, அறைகூவலையும் எதிர்நோக்குகின்றது. நாங்கள் எப்பொழுதும் தெளிந்த சிந்தனையுடன், பாதுகாப்பு பற்றிய கருத்தையும் வளைந்துகொடுக்கும் முறையில் பிரச்சினையைக் கையாளும் திறமையையும் வலுப்படுத்த வேண்டும். சர்வதேச நிலைமை மாற்றத்தின் பொதுப் போக்கிலிருந்து தொடங்கி, சீனா எதிர்நோக்கும் சர்வதேச சூழ்நிலையைச் சரியாக அறிந்துகொண்டு, வாய்ப்பைப் பயன்படுத்தி, அறைகூவலைச் சமாளிக்க வேண்டும். தெங்சியௌபிங்கின் தூதாண்மை சிந்தனையைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு, கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையில், சுதந்திர சமாதான வெளிநாட்டுக் கொள்கையை உணர்வு பூர்வமாக நடைமுறைப்படுத்தி, தூதாண்மை பணியின் புதிய நிலைமையைத் தொடர்ந்து துவக்கி, சீனாவின் சோஷலிச நவீன மயமாக்க நிர்மாணத்துக்கென சிறந்த சர்வதேச சமாதான சூழ்நிலையை மேலும் உருவாக்கி, உலக சமாதான மற்றும் வளர்ச்சி லட்சியத்துக்குப் பங்காற்ற வேண்டும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040