• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன மருத்துவம்]

சீன மருந்துவத்தின் கோட்டாட்டின் அடிப்படை

சீன மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாட்டில் வாழ்க்கைச் சூழற்சியும் நோயின் மாற்றங்களும் விவரிக்கப்படுகின்றன. இதில் ஐந்து கோட்பாடுகள் உள்ளன. இவை யின் மற்றும் யாங், ஐந்து மூலங்கள், ஒருவரின் வலிமையை நெறிப்படுத்துவது உடம்பின் உள்ளுறுப்புகள், வழிகள் எனப்படுகின்றன. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட மெய்மை உணர்வை ஆராய்கின்றது. நோய் ஏன் ஏற்படுகின்றது என்பதை வினக்குகின்றது. நோய்க் கூறுகளை எவ்வாறு கண்டறிந்து நோய்களைத் தடுப்பது என்பதையும் உடம்பை ஆரோக்கியமாக எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதையும் விவரிக்கின்றது.

யின் மற்றும் யாங் கோட்பாடு பண்டைய தத்துவத்தின் அடிப்படையில் உருவானது. எல்லா நிகழ்வுகளையும் உற்றுக் கவனித்து பண்டைக்கால மக்கள் முரண்படக் கூடிய எல்லாக் கருத்துக்களையும் யின் மற்றும் யாங் என்று வகைப்படுத்தினார்கள். எவ்வாறு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குவதற்காக இந்தக் கோட்பாட்டை அவர்கள் பின்பற்றினர். மனித உடம்பின் பல்வேறு பாகங்கள் மற்றும் உயிருள்ள பொருட்களுக்கும் இயற்கை அல்லது சமுதாயத்திற்கும் இடையே உள்ள சிக்கலான உறவைச் சித்திதலிக்க யின் மற்றும் யாங்கை சீன மருத்துவம் பயன்படுத்துகின்றது. யின் மர்றும் யாங் சமநிலையில் இருந்தால்தான், மனித உடம்பு இயல்பாக இயங்க முடியும் என்று நம்பப் பட்டது. இந்தச் சமநிலை குலையுமானால் நோய்கள் ஏற்பட்டு மக்களின் உடல் நலன் பாதிக்கப்படுகின்றது.

ஒருவருடைய வலிமையை நெறிப்படுத்தும் கோட்பாட்டில் வானியல், வானிலை மாற்றம், தட்ப வெப்ப நிலை போன்றவற்றின் பல்வேறு அம்சங்கள் எவ்வாறு உடல் நலனைப் பாதிக்கின்றன என்பது ஆராயப்படுகின்றது. இந்தக் கோட்பாட்டில் இரண்டு பகுதிகள் ஐந்து வலிமைகள், ஆறு தட்ப வெப்பநிலைக் காரணிகள் ஆகியன அடங்கியுள்ளன. ஐந்து வலிமைகள் என்பது உலோகம், மரம், தண்ணீர், நெரும்பு, மண் ஆகியவற்றின் வலிமைகளாகும். இவை வசந்தம், கோடை, நீண்ட கோடை, இலையுதில் காலம், குளிர் ஆகிய ஓராண்டின் மாறுபடும் காலநிலைகளுடன் தொடர்புடையவை. காற்று, குளிர், கோடை, ஈரப்பதம், உலர் தன்மை, நெருப்பு ஆகியவற்றை மக்கள் கால நிலையின் ஆரு கூறுகளாக் கருதினார்கள். தட்பவெப்ப நிலையின் மார்றங்களை முன் கூட்டியே கணித்து வானியல் அளவீடுகளுக்கு ஏற்ப எவ்வாறு நோய்கள் உண்டாகின்றன என்பதை விளக்க இந்தக் கோட்பாடு இயல்கின்றது.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040