• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவில் சுற்றுலா]

சுற்றுலாத் திட்டங்களின் கருப்பொருள்

1992ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு பயணிகளுக்கு சீனாவின் சுற்றுலா வளங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சீனத் தேசிய சுற்றுலா பியூரோ பல்வேறு நடையுடை பாவனைகளை முக்கியமாக கொண்ட பல சிறப்புச் சுற்றுலா திட்டங்களையும் சிறப்புச் சுற்றுலா நெறிகளையும் இவற்றுக்கு இசைவான விற்பனை கொள்கைகளையும் இடைவிடாமல் விளம்பரப்படுத்திவருகின்றது. 2005ஆம் ஆண்டுக்கான சுற்றுலா திட்டத்தின் தலைப்பு "சீன மக்களின் வாழ்க்கை பற்றிய சுற்றுப்பயணம்" என்பதாகும்.

சீனத் தேசத்துக்கு 5000 ஆண்டுகால நாகரிக வரலாறு உண்டு. இதற்கிடையில், சீன மக்களின் அயராத உழைப்பு, துணிவு, நேர்மை முதலியன உள்ளிட்ட பாரம்பரிய நற்குணம் வளர்ந்துள்ளது. அத்துடன் சீன மக்களின் தனிச்சிறப்பியல்புடைய வாழ்க்கை முறையும் உணவு வழக்கம், நாட்டுப்புறப் பழக்கம் ஆகியவையும் உருவாயின. செழுமையான சிறப்புமிக்க சீன மக்களின் வாழ்க்கை சீனப் பண்பாட்டின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. அத்துடன் சமூக அறிவியல் மதிப்புமிக்க சுற்றுலா வளமாகவும் மாறியுள்ளது.

சீன மக்களின் வாழ்க்கை கீழை நாடுகளிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. குடியிருப்பு, உணவு, ஆடை, பொழுதுபோக்கு, விழா, பழக்கவழக்கம் ஆகியவை அனைத்தும் சீனத் தேசத்தின் சிறந்த பண்பாட்டு மற்றும் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. மக்களின் வாழ்க்கையை இந்த சுற்றுலா திட்டத்தின் தலைப்பாக வைத்துக்கொள்வதன் நோக்கமானது, வெளிநாட்டு பயணிகள் சீனாவின் சமூகத்தை நுணுக்கமாகப் பார்த்து சீன மக்களின் தனிச்சிறப்புடைய வாழ்க்கையையும் சீன மக்கள் உருவாக்கிய தலைசிறந்த பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்குத் துணைபுரிவதாகும்.

கடந்த சில ஆண்டுகளில் சீனத் தேசிய சுற்றுலா பியூரோ ஏற்பாடு செய்த சுற்றுலா திட்டங்களின் தலைப்புகள்:


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040