• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன உணவு]

சீனாவின் எட்டு வகை கறிகள்  

ஷாதுங் மாநிலத்தின் காய்கறிகள்

இந்த கறி தொகுதியில் முக்கியமாக ஜினான் நகரம் மற்றும் ஜியோதுங் வட்டாரத்தின் மணத்தைக் கொண்ட காய்கறிகள் இடம்பெறுகின்றன. அதன் மணம் அதிகம், தயாரிக்கும் போது, அதிக அளவு வேங்காயத் தண்டும் வெள்ளைப்பூண்டும் தேவைப்படும். கடல் வாழ் மூலப்பொருட்கள், பல்வகை கால்நடைகளின் உட்பகுதிகள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும். வேகமாக பொரிக்கப்பட்ட இறால், சோயாசாஸ் போட்டு தயாரிக்கப்பட்ட நத்தை கறி, சர்க்கரை போட்டு பொரிக்கப்பட்ட கெண்டை மீன் ஆகியவை புகழ்பெற்றவை.

(படம்: காரமான நண்டு)

சுச்சுவான் மாநிலத்து கறிகள்

இந்த தொகுதியில் முக்கியமாக செங்து, ச்சுங் ச்சிங் மாநகரங்களின் கறிகள் இடம்பெறுகின்றன. பல்வகை, அதிக மணங்களைக் கொண்டவை.

காரமான நிலக்கடலை மற்றும் கோழிக்கறித் துண்டுகள், மீன் மணமுடைய பன்றியிறைச்சிக் கறி, சோயாசாஸ் மட்டும் போட்டு நீர் ஊற்றாமல் சுறாத் துடுப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கறி, மிளகாய் போட்ட நண்டு வறுவல் ஆகியவை புகழ்பெற்றவை.

சியாங்சு மாநிலத்து கறி தொகுதி

இந்த தொகுதி, முக்கியமாக யாங்சோ, சூச்சோ, நான்ஜிங் ஆகிய நகரங்களின் கறிகளின் அடிப்படையைக் கொண்டு வளர்ந்துள்ளது. குழம்பு, கொதிக்க வைத்தல் என்ற சமையல் முறைகளில் தேர்ச்சி பெற்றது. நண்டு தூளால் ஆன உருண்டையை தெளிந்த நீரில் கொதிக்க வைக்கும் கறி புகழ் பெற்றது.

(படம்: இறைச்சி உருண்டை)

செக்கியாங் மாநிலத்து கறி தொகுதி

இந்த தொகுதியில், ஹாங்சோ, நிங்போ, ஷௌசிங் முதலிய இடங்களின் காய்கறிகள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஹாங்சோ காய்கறி மிகவும் புகழ்பெற்றது. லேசான பொரித்தல் நறுமணம், எண்ணெய் குறைவு முதலியன இந்த கறிகளின் சிறப்பியல்பாகும். லோங்சிங் இறால் இறைச்சி, ஜியோ ஹுவா கோழி, சிஹு புளிப்பு மீன் ஆகியவை புகழ்பெற்றவை.

குவாங்துங் மாநிலத்து காய்கறி தொகுதி

இந்த தொகுதியில் குவாங்சோ, ச்சுவோ சோ, துங்சியாங் ஆகிய மூன்று இடங்களின் காய்கறிகள் அடங்கும். அவற்றில் குவாங்சோ காய்கறி முக்கியமானது. பொரித்தல், கொதித்தல், குழம்பு ஆகியவை முக்கிய சமையல் முறைகளாகும். உப்பு குறைவு, நிறம் தெளிவு, நறுமணம், நல்ல சுவை என்பன அதன் சிறப்பியல்பாகும்.

சோயா சாஸில் வேகவிடப்பட்ட பன்றிக்குட்டி இறைச்சி, முன்று பாம்புகள் சந்திப்பு எனப்படும் பாம்பு கறி, குலௌ இறைச்சி முதலியன மிகவும் புகழ்பெற்றவை.

(படம்: சி ஹு ஏரி மீன்)

ஹுநான் மாநிலத்து கறி தொகுதி

இந்த தொகுதியிலுள்ள கறிகள், காரம், நல்லெண்ணெயின் மணம் காரம், புளிப்பு, ருசி ஆகிய வாசனைகளைக் கொண்டவை, அவற்றில், புளிப்பு, காரம் முக்கிய மணமாகும்.

கற்கண்டு தாமரை, சோயா சாஸில் வேகவிடப்பட்ட சுறா மீன் துடிப்பு ஆகியவை இந்த மாநிலத்தின் புகழ்பெற்ற கறிகளாகும்.

(图:红煨鱼翅)

புச்சியன் மாநிலக் கறித் தொகுதி

இந்தத் தொகுதி புச்சோ, ச்சுவான்சோ, சியாமென் முதலிய இடங்களிருந்து வளர்ந்துள்ளது. புச்சோ காய்கறி அதன் முக்கிய பிரதிநிதியாகும். கடல் வாழ்வனவற்றை முக்கிய மூலப்பொருளாக அது கொண்டது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, நல்ல சுவை, அழகு, என்பன அதன் சிறப்பியல்பாகும். சியேஹுவா கோழி, ஆரெஞ்சி மீன், கொதித்த மீன் என்பன அதன் புகழ்பெற்ற காய்கறிகளாகும்.

(படம்: மீன்)

அன்ஹுய் மாநிலக் காய்கறித் தொகுதி

இந்த தொகுதி முக்கியமாக தென் ஆன்ஹுய், யாங்சு, மற்றும் ஹுவாய் ஹொ ஆற்றங்கரைப் பிரதேசங்களிலுள்ல காய்கறிகளின் மணங்களை பிரதிபலிக்கின்றது. தென் ஆன்ஹுய் காய்கறி அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கறிகள் HAM, கற்கண்டு, ஆகியவற்றைக் கொண்டு சுவையை அதிகரிக்கின்றன. குழம்பு, கொதிக்க வைத்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றது. தீயின் அளவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம்.

ஹுலு வாத்து, கொதித்த புலிச்சி கோழி ஆகிய காய்கறிகள் மிகவும் புகழ் பெற்றவை.

(படம்: பு லி ஜி கோழி)

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040