• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அரசியல் அமைப்பு முறை]
சீனத் தேசிய கட்டமைப்பு:

சீன மக்கள் குடியரசானது உழைக்கும் வர்த்தகத்தின் தலைமையில், தொழிலாளர் விவசாயிகளின் ஒன்றியத்தை அடிப்படையாக கொண்ட, மக்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தைக் கொண்ட சோஷலிச நாடாக விளங்குகின்றது. சோஷலிச அமைப்பு முறையானது சீன மக்கள் குடியரசின் அடிப்படை அமைப்பு முறையாகும்.

அரசியல் அமைப்புச் சட்டம்:

அரசியல் அமைப்புச் சட்டம் நாட்டின் அடிப்படை பெரும் சட்டமாக திகழ்கின்றது.

நாட்டின் சமூக அமைப்புமுறை, நாட்டின் அமைப்பு முறையின் அடிப்படைக் கோட்பாடு, அரசு அலுவலகங்களின் உருவாக்கம், நடவடிக்கை ஆகியவற்றுக்கான அடிப்படைக் கோட்பாடு, குடிமக்களின் அடிப்படை உரிமை கடப்பாடு முதலிய முக்கிய அம்சங்கள் இதில் வகுக்கப்படுகின்றன. தவிர, தேசியக் கொடி, நாட்டுப் பண், தேசிய இலச்சினை, தலைநகர் மற்றும் ஆளும் வர்க்கம் கருதும் முக்கிய இதர அமைப்பு முறைகளும், நாட்டின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களும் இச்சட்டத்தில் இடம்பெறுகின்றன. அதியுயர் சட்ட பயன் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உண்டு. மற்ற சட்டங்களை வகுப்பதற்கான ஆதாரமாகும். அனைத்துச் சட்டங்களும், சட்ட விதிகளும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரண்பாடாக இருத்தல் கூடாது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதற்கு முன் வெளியிடப்பட்ட "சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பொதுப் பணித்திட்டம்" சீன மக்கள் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பணித் திட்டமாக விளங்குகின்றது. அதேவேளையில் தற்காலிக அரசியல் அமைப்புச் சட்டப் பங்கினை வெளிக்கொணர்ந்தது. இது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது முழு அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணித் திட்டமாகும். 1949ம் ஆண்டு செப்டெம்பர் 29ம் நாள் இது வெளியிடப்பட்டது. 1954ம் ஆண்டில் "சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு சட்டம்" வெளியிடப்படுவதற்கு முன் இது தற்காலிக அரசியல் அமைப்பு சட்டமாகப் பயன்படுத்தப்பட்டது.

1949ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாள் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் 1954, 1975, 1978, 1982 ஆகிய ஆண்டுகளில் 4 "சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு சட்டங்கள்" வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

சீனாவின் 4வது அரசியல் அமைப்புச் சட்டமானது தற்போது நடைமுறையிலுள்ளது. 1982ம் ஆண்டு டிசெம்பர் 4ம் நாளில் நடைபெற்ற சீனாவின் 5வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரில் இச்சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. 1954ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடைப் பின்பற்றி வளர்ச்சியுறச் செய்து சீன சோஷலிச வளர்ச்சி அனுபவத்தையும் தொகுத்ததோடு சர்வதேச அனுபவத்தையும் பெற்றுள்ளது. சீனத் தனிச்சிறப்பியல்பு மிகுந்த சட்டமாக இது விளங்குகின்றது. சீனச் சோஷலிச நவீனமயமாக்க கட்டுமானத்தின்ன் தேவைக்கு ஏற்ற அடிப்படைச் சட்டமுமாகும். சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு முறை, பொருளாதார அமைப்பு முறை, குடி மக்களின் உரிமை மற்றும் கடப்பாடு, அரசு நிறுவனங்களின் கட்டமைப்பு, கடப்பாட்டு கட்டுக்கோப்பு, எதிர்வரும் அரசின் அடிப்படைக் கடமைகள் முதலியவை இச்சட்டத்தில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. சீனாவின் அடிப்படை அமைப்பு முறை, அடிப்படைக் கடமை ஆகியவற்றை வகுப்பது, நான்கு அடிப்படைக் கோட்பாடுகளையும் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி என்ற அடிப்படைக் கோட்பாட்டையும் உறுதிப்படுத்துவது என்பன இச்சட்டத்தின் தனிச்சிறப்பியல்பாகும். நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களும் அனைத்து நிறுவனங்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தை அடிப்படை செயல்பாட்டு விதியாக கருத வேண்டும். எந்த நிறுவனமோ எவரோ அரசியல் அமைப்புச் சட்டம், சட்ட விதிகள் ஆகியவற்றை மீற முடியாது என்று அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ளது.

முன்னுரை, பொது கோட்பாடுகள், குடி மக்களின் அடிப்படை உரிமை, கடப்பாடு, அரசு நிறுவனங்கள், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தலைநகர் ஆகிய 5 பகுதிகளும் 138 சரத்துகள் கொண்ட 4 அத்தியாயங்களும் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெறுகின்றன. வெளியிடப்பட்டது முதல் 4 முறை திருத்தப்பட்டு தொடர்ந்து முழுமையாக்கப்பட்டு வருகின்றது.

தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை:

தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறையானது சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும். சீன மக்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தைக் கொண்ட அதிகார அமைப்பு வடிவமாகும். சீனாவின் அரசியல் அமைப்பாகும். "3 அதிகார நிறுவனங்கள் துதந்திரமாக இருப்பதென்ற" அமைப்பு முறை கொண்ட மேலை நாட்டு நாடாளுமன்றத்துடன் ஒப்பீடுகையில் சீனத் தேசிய மக்கள் பேரவையை அமைப்பு முறை வேறுபட்டது.. தேசிய மக்கள் பேரவையை நாட்டின் அதியுயர் அதிகார நிறுவனமாக சீன அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகின்றது. 18 வயது அடைந்த சீனக் குடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் உண்டு. சீனாவில் பல்வேறு நிலை மக்கள் பேரவைகளில் வட்ட மற்றும் மாவட்ட நிலை மக்கள் பேரவைக்கான பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அவற்றுக்கு மேலான நிலையிலுள்ள பல்வேறு மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் நேரடியற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சீனத் தேசிய மக்கள் பேரவைக்கான பிரதிநிதிகள் பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்கள், படை ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கப்படுகின்றது. பல்வேறு நிலை மக்கள் பேரவையின் பதவிக் காலம் 5 ஆண்டு. ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் பேரவையின் முழு அமர்வு நடைபெறும்.

மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் அரசாங்கப் பணியறிக்கையையும் மற்ற முக்கிய அறிக்கைகள் சிலவற்றையும் பிரதிநிதிகள் கேட்டறிவர். இந்த அறிக்கைகளை அவர்கள் பரிசீலித்து அவற்றுக்கு இசைவான தீர்மானங்களை மேற்கொள்வர். கூட்டத் தொடர் நடைபெறாத நாட்களில் பல்வேறு நிலை மக்கள் பேரவையின் நிரந்தர வாரியமான-மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி பேரவைக் கூட்டத் தொடரில் அதற்கு வழங்கப்பட்ட கடப்பாட்டை நிறைவேற்றும். எடுத்துக் காட்டாக, அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி விளக்கம் அளிப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் நடைமுறையாக்கத்தைக் கண்காணிப்பது, மக்கள் பேரவைக் கூட்டத் தொடரில் வகுக்கப்பட்ட சட்டம் தவிர்ந்த சட்டங்களை வகுத்து திருத்துவது, தேசிய மக்கள் பேரவைக்குப் பொறுப்பு ஏற்று பணி பற்றி அறிக்கை வழங்குவது ஆகியவை தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் கடப்பாடாகும்.

சட்டமியற்றல் உரிமை, கண்காணிப்புரிமை, முக்கிய நிகழ்ச்சிகளைத் தீர்மானிக்கும் உரிமை, ஆட்களை நியமித்து நீக்கும் உரிமை முதலியவை சீனத் தேசிய மக்கள் பேரவையின் அடிப்படைக் கடப்பாட்டிலும் அதிகாரத்திலும் அடங்கும். சீனாவில் குறிப்பிட்ட காலத்துக்கான தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திட்டத்தை வகுப்பது, சமூக வளர்ச்சியை முன்னேற்றுவிப்பதற்கான முக்கிய கொள்கைத் தீர்மானமாக விளங்குகின்றது.

பல கட்சி ஒத்துழைப்பும் அரசியல் கலந்தாய்வு அமைப்பு முறையும

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சிகளின் ஒத்துழைப்பும் அரசியல் கலந்தாய்வு அமைப்பு முறையும் சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும்.

சீனாவில் பல கட்சிகள் உள்ளன. ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தவிர, 8 ஜனநாயக கட்சிகள் உள்ளன. சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதற்கு முன்பே அவை நிலவியுள்ளன. அரசியல் ரீதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு ஆதரவளிக்கின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நீண்டகாலமாக ஒத்துழைத்து கூட்டாகப் போராடும் போக்கில் அவை மேற்கொண்ட வரலாற்றுத் தேர்வு முறையாகும். அரசியல் அமைப்புச் சட்ட நடவடிக்கைக்கு வழிகாட்டும் அடிப்படை செயல்கோட்பாடாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு ஜனநாய கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும். அமைப்பு வடிவத்தில் பல்வேறு ஜனநாயக கட்சிகள் சுதந்திரமாக இருக்கின்றன. அரசியல் அமைப்பு சட்டத்தில் வகுக்கப்பட்ட தற்குள் அரசியல் சுதந்திரம், அமைப்புச் சுதந்திரம், சட்ட நிலை சமத்துவம் ஆகியவற்றை அனைத்துக் கட்சிகளும் அனுபவிக்கின்றன. நீண்டகாலமாக கூடி வாழ்வது பரஸ்பரம் கண்காணிப்பது நேர்மையாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது, பெருமையையும் அவமானத்தையும் கூட்டாக எதிர்கொள்வது என்பன சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பல்வேறு ஜனநாயக கட்சிகளுக்குமிடையிலான அடிப்படை ஒத்துழைப்புக் கோட்பாடாகும்.

பல்வேறு ஜனநாயக கட்சிகள் ஆட்சியில்லாத கட்சிகள் அல்ல. எதிர்க் கட்சிகளும் அல்ல. மாறாக அரசியல் விவகாரங்களில் பங்கெடுக்கும் கட்சிகளாகும். அரசின் பெரும் அரசியல் கோட்பாடுகளைத் தீர்மானிப்பதிலும் அரசின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்விலும் கலந்து கொள்வது, நாட்டின் விவகாரங்களை நிர்வகிப்பதிலும் அரசின் கொள்கை கோட்பாடு, சட்டம், சட்டவிதிகள் ஆகியவற்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதிலும் ஜனநாயக கட்சிகள் ஈடுபடுகின்றன.

முக்கிய நடவடிக்கைகளை அல்லது தேசிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை போன்ற முக்கிய பிரச்சினைகளை அரசு கையாள்வதற்கு முன் ஜனநாயக கட்சிகளுடனும் கட்சி சாரா ஜனநாயக பிரமுகர்களுடனும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கலந்தாய்வு மேற்கொளும். அவர்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கேட்டறிந்த பின் தான், கொள்கைத் தீர்மானத்தை அது மேற்கொள்ளும். அரசியல் விவகாரத்தில் மேலும் செவ்வனே ஈடுபட்டு முன்மொழிந்து கண்காணிப்பு பங்கை வெளிக்கொணரும் வகையில் அரசின் அதிகார நிறுவனமான தேசிய மக்கள் பேரவை, அதன் நிரந்தரக் கமிட்டி, நிரந்தர சிறப்பு ஆணையங்கள், பல்வேறு நிலை மக்கள் பேரவைகளிலும் ஜனநாயக கட்சிகளும் கட்சி சாரா பிரமுகர்களும் குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தில் தமது பிரநிதிநிகளை கொண்டுள்ளன. பல்வேறு நிலை அரசாங்கங்களிலும் சட்ட நீதி நிறுவனங்களிலு ம் பொறுப்பாளர்களாக தமது உறுப்பினர்களைப் பரிந்துரை செய்கின்றன.

பல கட்சி ஒத்துழைப்பும் அரசியல் கலந்தாய்வும் பின்வரும் முக்கிய வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. 1, பல்வேறு கட்சிகள், மக்கள் நிறுவனங்கள், பல்வேறு வட்டாரங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அரசியல் விவகாரங்களில் பங்கு கொண்டு விவாதிக்கும் முக்கிய அரங்காக மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு. 2, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பல்வேறு நிலை உள்ளூர் கட்சிக் கமிட்டிகள் ஆகியவை ஜனநாயக கட்சிகளும், கட்சி சாரா பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி முக்கிய நிகழ்ச்சிகளை அறிவித்து, முக்கிய கோட்பாடு கொள்கை, அரசு மற்றும் உள்ளூர் அரசாங்கத் தலைவர்களுக்கான வேட்பாளர் பட்டியல், மக்கள் பேரவை, பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் என்பன குறித்து பல்வேறு ஜனநாயக கட்சிகளுடன் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து கருத்துக்களையும் முன்மொழிவையும் கேட்டறிவது 2வது வடிவமாகும். 3, பல்வேறு நிலை மக்கள் பேரவைகளில் ஜனநாயக கட்சி உறுப்பினர்களில் மக்கள் பேரவை பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசியல் விவகாரங்களில் பங்கெடுத்து, விவாதித்து கண்காணிப்பு பங்கு வெளிகொணர்வது. 4, அரசவை, அமைச்சகங்கள், மாவட்ட நிலைக்கு மேலான உள்ளூர் அரசாங்கம், தொடர்புடைய வாரியம் ஆகியவற்றுக்கான தலைமைப் பதவி ஏற்க ஜனநாய கட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்புவது, 5, அரசு வழக்கறிஞர் மன்றம் மற்றும் தீர்ப்பளிப்பு நிறுவனங்களின் தலைமைப் பதவிக்கு ஏற்ற ஜனநாயக கட்சி உறுப்பினர்களைப் பரிந்துரை செய்வது. 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040