|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
அரசவையும் ஏனைய அமைச்சகங்களும்
அரசவை
சீன அரசவை அதாவது நடுவண் மக்கள் அரசாங்கம். அதியுயர் நிர்வாக வாரியமாகும். சீனத் தேசிய மக்கள் பேரைவைக் கூட்டத் தொடரிலும் அதன் நிரந்தரக் கமிட்டியிலும் வகுக்கப்பட்ட சட்டங்களையும் தீர்மானங்களையும் அது நிறைவேற்றுகின்றது. தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடருக்கும் நிரந்தரக் கமிட்டிக்கும் பொறுப்பு ஏற்று பணி பற்றி அறிவிக்க வேண்டும். அதன் கடப்பாட்டு உரிமை வரையறைக்குள் நிர்வாக நடவடிக்கைகளையும் நிர்வாகச் சட்ட விதிகளையும் வகுத்து தீர்மானத்தையும் கட்டளையையும் வெளியிடும் உரிமை அரசவைக்கு உண்டு. தலைமை அமைச்சர், துணைத் தலைமை அமைச்சர்கள், அரசவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், பல்வேறு கமிட்டித் தலைவர்கள், பரிசீலித்து சரிபார்க்கும் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் அரசவையில் இடம் பெறுகின்றனர்.
தற்போது வென்சியாபாவ் தலைமை அமைச்சராகப் பதவி வகிக்கின்ரார்.
வெளியுறவு அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம், அரசின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகம், கல்வி அமைச்சகம், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அறிவியல் தொழில் நுட்ப துறைக் கமிட்டி, தேசிய இன விவகாரங்களுக்குப் பொறுப்பான அரசு ஆணையகம், பொதுப் பாதுகாப்பு அமைச்சகம், தேசிய இடர்காப்பு அமைச்சகம், கண்காணிப்பு அமைச்சகம், பொதுத் துறை அமைச்சகம், நீதி சட்டத் துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், ஊழியல் விவகார அமைச்சகம், தொழிலாளர் நலம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம், ரெயில்வே அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம், அரசின் நில வள அமைச்சகம், கட்டுமான அமைச்சகம், தகவல் துறை அமைச்சகம், நீர் மூலவ அமைச்சகம், பண்பாட்டு அமைச்சகம், நலவாழ்வு அமைச்சகம், வேளாண் அமைச்சகம், வணிக அமைச்சகம், தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப நலத் திட்ட ஆணையகம், சீன மக்கள் வங்கி, பரிசோதனை ஆணையகம் ஆகிய 28 நிறுவனங்கள் சீன அரசவையை உருவாக்குகின்றன.
வெளியுறவு அமைச்சகம்
சீன வெளியுறவு அமைச்சகமானது அரசவையின் கீழுள்ள அரசின் வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வெளிவிவ காரங்களைக் கையாளும் கடப்பாடுடைய அமைச்சகமாகும். நாடு மற்றும் அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகாரங்களை நிர்வகிப்பது அதன் முக்கிய கடப்பாடாகும். அரசின் வெளிநாட்டுக் கொள்கை, தீர்மானங்கள் ஆகியவற்றை அறிவிப்பது, தூதாண்மை ஆவணங்கள் அறிக்கை ஆகியவற்றை வெளியிடுவது, தூதாண்மைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் பொறுப்பு ஏற்பது, வெளிவிகாரங்கள் பற்றிய உடன்படிக்கையை உருவாக்குவது ஐ.நா கூட்டத் தொடரிலும், நாடுகளுக்கிடையிலான சர்வதேசக் கூட்டம், சர்வதேச நிறுவன நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கலந்து கொள்வது, வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள் துணை நிலைத் தூதரகங்கள்,தொடர்புடைய பிரதிநிதி நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவுவதற்குப் பொறுப்பேற்பது, வெளிநாடுகளிலுள்ள சீனப் பணியாளர்களை நிர்வகிப்பது , அரசவையின் பல்வேறு அமைச்சகங்களின் வெளிவிவகார வாரியங்களுக்கும் பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரங்கள் ஆகியவற்றின் தூதாண்மை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி ஏற்பாடு செய்து இணக்கம் மேற்கொள்வது என்பன சீன வெளியுறவு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணியாகும்.
லீச்சாவ்சின் சீன வெளியுறவு அமைச்சராகப் பணிபுரிகின்றார்.
அரசின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகம்
தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம், நடுத்தர நீண்டகால திட்டம், ஆண்டுத் திட்டம் ஆகியவற்றை வகுத்து நடைமுறைப்படுத்துவது சீன அரசின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகத்தின் முக்கிய கடப்பாடாகும். தவிர, உள்நாட்டு வெளிநாட்டுப் பொருளாதார நிலைமை வளர்ச்சி நிலைமை ஆகியவற்றை பகுத்தாராய்ந்து ஒட்டுமொத்த பொருளாதார முன்மதிப்பீட்டையும் முன்எச்சரிக்கையையும் மேற்கொள்வது, தேசிய பொருளாதா பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந்து ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டுக் கொள்கையை முன்வைப்பது, பொருளாதார சமூக வளர்ச்சியை பந்நோக்க முறையில் இணக்கம் செய்வது, முக்கிய திட்டப் பணிகளையும் உற்பத்தி ஆற்றல் பரவலையைம் திட்டமிடுவது, அரசின் கட்டுமான நிதியை ஏற்பாடு செய்வது, வெளிநாட்டுக் கடன் மூலம் பெற்ற கட்டுமான நிதியின் பயன்பாட்டுக்கு வழிகாட்டி கண்காணிப்பது, கொள்கைத் தன்மை வாய்ந்த கடன் பயன்பாட்டுத் திசைக்கு வழிகாட்டி கண்காணிப்பது, அரசு சாராத நிதியை நிலையான இருப்பு முதலீட்டில் பயன்படுத்துவதற்கு வழிகாட்டுவது அந்நிய முதலீட்டையும் வெளிநாடுகளிலான முதலீட்டையும் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து நெடுநோக்கு குறிக்கோள் கொள்கை ஆகியவற்றை முன்வைப்பது, அரசு ஒதுக்கீடு செய்த நிதியுடன் கூடிய கட்டுமான திட்டப் பணி முக்கிய கட்டுமானத் திட்டப் பணிகள், முக்கிய வெளிநாட்டு முதலீட்டு நிகழ்ச்சிகள், வெளிநாடுகளிலான மூல வள வளர்ச்சி நிகழ்ச்சிகள், பெருமளவில் அந்நிய செலாவணியைத் கொண்டு முதலீடு செய்யும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது, தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, பொருளாதார அமைப்பு முறையின் சீர்திருத்தம், வெளிநாட்டுத் திறப்பு துறையுடன் தொடர்புடைய நிர்வாகச் சட்ட விதிகள் விதி முறைகள் ஆகியவற்றை வகுப்பது, தொடர்புடைய சட்ட விதிகள் நிர்வாகச் சட்டவிதிகள் ஆகியவற்றை உருவரைந்து நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுவது முதலியவை சீன அரசின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகத்தின் முக்கிய கடப்பாடாகும்.
மா கேய் இவாணையகத்தின் தலைவராவார்.
வணிக அமைச்சகம்
வணிக அமைச்சகம் 2003ம் ஆண்டு மார்ச் திங்களில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம், கோட்பாடு, கொள்கை ஆகியவற்றை வகுப்பது, அவற்றுடனும் வெளிநாட்டு வணிகரின் முதலீட்டுடனும் தொடர்புடைய சட்டம், சட்ட விதிகள் ஆகியவற்றை வரைவகது, உள்நாட்டு வர்த்தக வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி புழக்க அமைப்பு முறையிலான சீர்திருத்தத்தை ஆராய்ந்து கருத்தை முன்வைப்பது, நகர மற்றும் கிராமப்புறச் சந்தையை வளர்ச்சியுறச் செய்வது, சந்தை நடைமுறையாக்கத்தையும் புழக்க ஒழுங்கையும் வரையறைப்படுத்துவது, சந்தை ஏகபோகம் மற்றும் உள்ளூர் முற்றுகை கொள்கையை முறியடிப்பது ஆகியவை பற்றிய கொள்கையை ஆராய்ந்து வகுத்து ஒரு முகமான வெளிப்படையான போட்டியாற்றலுடைய ஒழுங்கான சந்தை அமைப்பு முறையை நிறுவி முழுமையாக்குவது, சந்தை இயக்கம் வணிகத் தேவை நிலை ஆகியவற்றைக் கண்காணித்து பகுத்தாராயந்து, முக்கிய நுகர்வுப் பொருள் சந்தை மீதான கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி முக்கிய உற்பத்தி பொருள் புழுக்க நிர்வாக அமைப்புமுறையை உருவாக்குவது, ஏற்றுமதி இறக்குமதி வணிகப் பொருள் மீதான நிர்வாக வழிமுறைகளையும் ஏற்றுமதி இறக்குமதி வணிகப் பட்டியலையும் ஆராய்ந்து வகுப்பது, ஏற்றுமதி இறக்குமதி வீதர் பங்கு திட்டத்தை உருவாக்கி நீறைவேற்றுவது, வீதப் பங்கை உறுதிப்படுத்தி, அனுமதி சான்றிதழை விநியோகிப்பது, ஏற்றுமதி இறக்குமதி வணிகப் பொருட்களின் வீதப் பங்கிற்கான இலக்கு ஏலக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்துவது, மலிவான வெளிநாட்டுப் பொருட்களின் விற்பனை எதிர்ப்பு, மானிய எதிர்ப்பு மற்றும் காப்புறுதி நடவடிக்கைகளையும் சமமான முறையில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்வதுடன் தொடர்பான பணியை மேற்கொண்டு அதன் முன் எச்சரிக்கை அமைப்புமுறையையும் நிறுவி, தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நுட்படத்தை புலனாய்வு செய்வது, சீனா ஏற்றுமதி செய்த வணிகப் பொருட்களின் மீதான வெளிநாடுகளின் எதிர்ப்பு மானிய எதிர்ப்பு காப்புறுதி நடவடிக்கைக்கான முறையீடு தொடர்பான பணி ஆகியவற்றுக்கு வழிகாட்டி இணக்கம் செய்வது என்பன சீன வணிக அமைச்சகத்தின் கடப்பாடுகளாகும்.

|