• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் நவீன கட்டிடங்கள்]

சீனாவின் நவீன தனிச்சிறப்பியல்புடைய கட்டிடங்கள்

ஷாங்கை ஹோபிங் ஹோட்டல்

ஷாங்கை ஹோபிங் ஹோட்டல் 1929ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முன்பு ஹூவாமௌ ஹோட்டல் என்று அழைக்கப்பட்டது. இந்த கட்டிடம் சிகாகோ அறிஞர் குழுவின் கோட் பாணியில் சேர்ந்தது. 12 மாடிகளுடன் கூடிய இந்த ஹோட்டலின் உயரம் 77 மீட்டராகும். ஹோட்டலின் வெளி சுவர் கிரானனட் கற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. PYRAMID மாதிரியில் பச்சை நிற ஓடுகளால் ஆன PINNACAL கட்டிடத்தின் உச்சி, சுழலும் கதவு, விசாலமான மைய அறையும் தாழ்வாரமும், இத்தாலி பளிங்கு கற்களால் அலங்காரம் செய்த தரையும், தூண்களும், பழைய மாதிரி விளக்குகள், 9 நாடுகளின் தனிச்சிறப்புமிக்க அறைகள் ஆகியவற்றை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது. முழு கட்டிடமும் மிகவும் அழகானது, தூரக் கிழக்கில் முதலாவது கட்டிடம் என்று அழைக்கப்படுகின்றது.

நான்சிங் ச்சுங் ஷன் கல்லறை

நான்சிங் நகரிலுள்ள ச்சுங் ஷன் கல்லறை, சீனாவின் மகத்தான ஜனநாயகப் புரட்சி முன்னோடியான திரு சுன் யட் சன்னின் கல்லறையாகும். இந்நகரின் கிழக்குப் புறநகரத்திலுள்ள ச்சுங் ஷன் எனும் இடத்தில் அது அமைந்துள்ளது. இந்த கல்லறையைச் சேர்ந்த கட்டிடங்கள் மலையின் சரிவில் கீழிலிருந்து படிப்படியாக மேலே அமைந்திருப்பதால், பார்க்கும் போது மிகவும் கம்பீரமானது. முழு கல்லறைப் பகுதியும் ஒரு பெரிய மணி போலத் தோற்றமளிக்கின்றது. மணியின் உச்சியில் பிறை நிலா வடிவமுடைய ஒரு சதுக்கம் இருக்கின்றது. இந்த கல்லறை தெற்கிலிருந்து வடக்கு வரை, நடு கோட்டின் வழியாக படிப்படியாக உயர்ந்துவருகின்றது. சதுக்கம், கற் சின்னம், இடுகாட்டுப் பாதை, கல்லறை கதவு, சின்னக் கூடாரம், வழிபாட்டு மண்டபம், சவப்பெட்டி மண்டபம் ஆகியவை வரிசையாக அடுத்தடுத்து நிற்கின்றன. இந்த கல்லறை சீன மற்றும் மேற்கு நாட்டு பாணியில் கட்டப்பட்டது. உயரமான ச்சுங் ஷன் மலை, கல்லறைத் தோட்டத்திலுள்ள பல்வேறு கட்டிடங்கள், விசாலமான புல்தரை, மலையின் மேல் பகுதிக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுகள் ஆகியவை ஒன்றிணைந்து உருவான இந்த கல்லறை மிகவும் கம்பீரமாகவும் பக்தி உணர்வு ஊட்டுவதாகவும் காணப்படுகின்றது. சீனாவின் சமகால கட்டிட வரலாற்றில் முதலாவது கல்லறை என அழைக்கப்படுகின்றது.

(படம்நான்சிங் ச்சுங் ஷன் கல்லறை

மக்கள் மாமண்டபம்

பெய்சிங்கிலுள்ள தியன் ஆன் மன் சதுக்கத்தின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ள மக்கள் மாமண்டபம், சீனத் தலைவர்களும் மக்களும் அரசியல் மற்றும் தூதாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடும் இடமாகும். அதே வேளையில், சீனாவின் முக்கிய அடையாளச் சின்னக் கட்டிடங்களில் ஒன்றாகவும் அது விளங்குகின்றது. மக்கள் மாமண்டபம் 1959ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் மொத்த பரப்பளவு ஒரு லட்சத்து 70 ஆயிரம் சதுர மீட்டராகும். பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமானது. கட்டிடத்தின் மேல் ஓரம், மஞ்சள் மற்றும் பச்சை நிறமுடைய பளபளப்பான ஓடுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மிக உயரமான மிக பெரிய தூண்களும், நான்கு பக்கங்களில் படிமுறையில் கிடக்கும் கட்டிடங்களும் தியன் ஆன் மன் சதுக்கத்தின் அழகுமிக்க தோற்றத்தை உருவாக்கியுள்ளன. மக்கள் மாமண்டபத்தில் மொத்தம் 100க்கும் அதிகமான நீண்ட பொது அறைகளும் கூட்ட அறைகளும் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்குக்கும் தனிச்சிறப்பியல்பு உண்டு. கட்டிடப் பாணியில் மக்கள் மாமண்டபம் சீனாவின் பாரம்பரிய வடிவமைப்புக் கருத்தை நிலைநிறுத்தியுள்ளது மட்டுல்ல மேலை நாட்டு கட்டிடங்களின் சிறப்பு அம்சங்களையும் எடுத்து பயன்படுத்தியுள்ளது. எனவே அது பார்ப்பதற்கு மிக அழகானது.

பெய்சிங் சியாங்ஷன் ஹோட்டல்

பெய்சிங் சியாங்ஷன் ஹோட்டல் பெய்சிங் மாநகரத்தின் மேற்கு புறநகரத்திலுள்ள சியாங்ஷன் பூங்காவில் அமைந்துள்ளது. 1982ஆம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற பெய்யுமிங் கட்டிடத்துறை மாஸ்டர் விவகார அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த ஹோட்டல் சீனாவின் பூங்கா கட்டிடத்தின் சிறப்பியல்பைச் சேர்த்துள்ளது. கட்டிடம் நிறமுடையது. கோட்டை மாதிரியானது. சன்னல்கள் ஒழுங்கான முறையில் அமைந்துள்ளன. இது தென் சீனாவின் பூங்கா கட்டிடத்தின் நுண்ணிய கலையையும் வட சீனாவின் பூங்கா கட்டிடத்தின் விசாலமான இடைவெளியையும் கொண்டது. முழு கட்டிடமும் சீனாவின் பாரம்பரிய கட்டிட பாணியை பிரதிபலித்துள்ளது மட்டுமல்ல, நவீன சுற்றுலாத் தேவையையும் நிறைவு செய்துள்ளது. இந்த கட்டிடம் 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் கட்டிட இயல் சங்கத்தின் கௌரவ விருசு பெற்றுள்ளது.

ச்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் புதிய நூலகம்

ச்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் புதிய நூலகம் 1991ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1919ஆம் ஆண்டிலும் 1931ஆம் ஆண்டிலும் இரண்டுமுறையாக கட்டப்பட்ட பழைய நூலகத்துடன் ஒன்றிணைகின்றது. இரு பகுதிகளும் இணக்கமாக இருப்பதோடு, தத்தமது காலகட்ட உணர்வையும் இழக்கவில்லை. பல்கலைக்கழக முற்றத்தின் மையப் பகுதியில் மிக பெரிய கட்டிடமாக விளங்குகின்றது. இந்த கட்டிடம் 1990ஆம் ஆண்டுகளில் பெய்சிங்கின் பத்து பெரிய கட்டிடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஷாங்கை மாநகரத்திலுள்ள ஜின்மௌ கட்டிடம்

சீனாவின் முதலாவது உயரமான கட்டிடம் எனப்படும் ஷாங்கை ஜின்மௌ கட்டிடத்தின் உயரம் 420 மீட்டருக்கு அதிகமாகும். அது 88 மாடிகளைக் கொண்டது. இது இன்றுவரை சீனாவின் மிக உயர்ந்து கட்டிடமாக திகழ்கிறது. உலகில் இது மூன்றாம் இடம் வகிக்கின்றது. இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 90 ஆயிரம் சதுர மீட்டராகும். அதன் வடிவமைப்பும் கட்டுமானமும் சீனக் கட்டிடப் பாணியும் நவீன அறிவியல் தொழில் நுட்பமும் சிறப்பாக ஒன்றிணைவதை வெளிப்படுத்தியுள்ளன. சீனக் கட்டிட வரலாற்றில் உலகளவில் பல பத்து முதல்களையும் சீனாவில் முதல் தரத்தையும் உருவாக்கியுள்ளது. சீனர்கள் முக்கியமாக கொண்டு ஏற்றுக்கொண்ட உலகில் முதல்நிலை கட்டிடத் திட்டப்பணியாகவும் இது விளங்குகின்றது.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040