• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[புகழ்பெற்ற கட்டிடத்துறை உருவரைவு நிபுணர்கள்]
புகழ்பெற்ற கட்டிடத்துறை உருவரைவு நிபுணர்கள்

லியாங் ஸு செங்

 லியாங் ஸு செங் (1901-1972)அவர் நீண்டகாலமாக கட்டிடக் கல்வித் துறையில் ஈடுபட்டு, இத்துறைக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

கல்வியியல் ஆய்வில், அவர் 1930ஆம் ஆண்டுகள் முதல், சீனாவின் பண்டைக்கால கட்டிடங்கள்மீது தொடர்ச்சியான ஆய்வில் ஈடுபட்டு, சீனாவின் பண்டைகால கட்டியம் பற்றிய பல சிறப்புப் படைப்புகளையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார். இந்த படைப்புகள் மிக உயர்வான கல்வியியல் மதிப்புடையவை.

பெய்சிங் மாநகரின் நகரத் வளர்ச்சி திட்டத்துக்கும் கட்டுமான வரைவுப் பணிக்கும் பல முக்கிய முன்மொழிவுகளைத் தெரிவித்து, பெய்சிங் மாநகரின் நீண்டகாலத் திட்டப் பணியிலும், சீனத் தேசிய அடையாளம், மக்கள் வீரருக்கான நினைவுச் சின்னம், யாங்சோ நகரிலுள்ள ஜியன் சென் துறவின் நினைவு மண்படம் ஆகியவற்றின் கட்டுமான மற்றும் வடிவமைப்புப் பணியிலும் பங்குகொண்டார். தேசிய கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு பற்றி ஆராய்ச்சி செய்தார்.

லியாங் ஸு செங், சீனாவின் மிக முன்னதாக அறிவியல் முறைமூலம் பண்டைக்கால கட்டிடங்கள் பற்றி ஆராய்ந்து கட்டிடம் பற்றிய ஆவணங்களை சேகரித்து ஒழுங்கு செய்த அறிஞர்களில் ஒருவராவார். அவருடைய கல்வியியல் படைப்புகள் சீனக் கட்டிடத் துறையிலான ஒரு மதிப்புக்குரிய செல்வமாகும்.

வூ லியாங் யோங்

 வூ லியாங் யோங் என்பவர் 1922ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் சர்வதேச கட்டிடச் சங்கத்தின் (UIA)துணைத் தலைவராகவும் உலக மக்கள் குடியிருப்புக் கழகத்தின் (WSE) தலைவராகவும் பணிபுரிந்தார். நவ சீனாவின் கட்டிட மற்றும் நகர வளர்ச்சித் திட்டப் பணியின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். சீனாவின் கட்டிடம் மற்றும் நகர நீண்டகால வளர்ச்சித் திட்டம் பற்றிய கல்வி குறித்து பல யோசனைகளை முன்வைத்தார். சீனத் தனிச்சிறப்பியல்புடைய கட்டிடம் மற்றும் நகர வளர்ச்சித் திட்டம் பற்றிய கல்வித்துறையை ஆராய்ந்து உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடைய பிரதிநிதித்துவ படைப்பான, பெய்சிங்கின் ச்சுர் தெருவிலான (நான்கு பக்கமும் வீடுகள் அமைந்துள்ள முற்றம்) என்ற புதிய குடியிருப்புத் திட்டப்பணி, ஐ.நாவின் 1992ஆம் ஆண்டு உலக குடியிருப்பு பரிசை பெற்றது. ஆசிய கட்டிடச் சங்கத்தின் தலைசிறந்த கட்டிட மற்றும் வடிவமைப்புக்கான தங்கப் பதக்கத்தையும், சீனக் கட்டிட இயல் கழகத்தின் தலைசிறந்த கட்டிடத்துறை புத்தாக்கப் பரிசையும் பெற்றது. அவர் தலைமையில் நாட்டின் இயற்கை அறிவியல் நிதியத்துக்கான முக்கிய திட்டப்பணியான-வளர்ச்சியடைந்த வட்டாரத்தில் நகரமயமாக்க முன்னேற்றப் போக்கில் கட்டிட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய ஆய்வு பணி, சர்வதேச அளவில் முன்னேறிய தரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அறிவியல் ஆராய்ச்சி சாதனையாக கருதப்படுகின்றது.

சாங் கை ஜி

 சாங் கை ஜி என்பவர் நவ சீனாவின் முதலாவது தலைமுறை கட்டிடத்துறை வடிவமைப்பு நிபுணராவார். 1912ஆம் ஆண்டு ஷாங்கையில் பிறந்த அவர் 1935ஆம் ஆண்டு நான்ஜிங் மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டிடத் துறையில் பட்டம் பெற்றார். பெய்சிங் கட்டிட மற்றும் வடிவமைப்பு ஆய்வகத்தின் தலைமை வடிவமைப்பு நிபுணராகவும், பெய்சிங் அரசின் கட்டிட ஆலோசகராகவும், சீனக் கட்டிடக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார். 1990ஆம் ஆண்டு அவருக்கு, "கட்டிட வடிவமைப்பு மாஸ்டர்" என்ற பட்டத்தை சீனக் கட்டிடத்துறை அமைச்சகம் வழங்கியது. தியன் ஆன் மன் பார்வையிடும் மேடை, புரட்சி அருங்காட்சியகம், வரலாற்றுப் அருங்காட்சியகம், தியௌயூதை அரசு விருந்தினர் ஹோட்டல், பெய்சிங் வானிலை அறிவிப்பு நிலையம் முதலிய கட்டிடங்களின் வடிவமைப்புப் பணிக்குப் பொறுப்பேற்றார்.   

 

யாங் திங் பாவ்

யாங் திங் பாவ் (1901-1982). அவர் 1921ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் கட்டிடத் துறையில் படித்தார். 1924ஆம் ஆண்டு எமர்சன் பரிசு போட்டியில் (EMERSON PRIZE COMPETITION) முதல் பரிசையும் அமெரிக்க நகரக் கட்டுமான கலை சங்கப் பரிசு போட்டியில் (MUNICIPAL ART SOCIETY PRIZE COMPETITION) முதல் பரிசையும் அவர் பெற்றார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040